Published:Updated:

பிஸ்கட் சாப்பிட்டதால் எதுக்களிப்பு; பறிபோன 3 வயதுக் குழந்தையின் உயிர்!

குழந்தை ( கோப்பு படம் )

``பிஸ்கட் சாப்பிட்ட பின் தொட்டிலில் தூங்கிய குழந்தைக்கு எதுக்களிப்பு ஏற்பட்டுள்ளது. இதைப் பெற்றோர் கவனிக்காததால், எதுக்களிப்பான பிஸ்கட் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாயை அடைத்ததை அடுத்து மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்துள்ளது’’ - காவல்துறை

திருப்பூர் மாவட்டம், பிச்சம்பாளையத்தை அடுத்த குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (29). கம்பரசர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி வஞ்சிக்கொடி. இந்தத் தம்பதியின் மகன் சஞ்சய் (3). கடந்த செவ்வாய்க்கிழமை மதியம், சஞ்சைக்கு தாய் வஞ்சிக்கொடி பிஸ்கட் கொடுத்துள்ளார்.

பிஸ்கட் சாப்பிட்டதால் எதுக்களிப்பு; பறிபோன 3 வயதுக் குழந்தையின் உயிர்!
கோப்பு படம்

பிஸ்கட்டை சாப்பிட்டவுடன் சஞ்சை தூங்கியதை அடுத்து வஞ்சிக்கொடி அவரை தொட்டிலில் போட்டுள்ளார். மாலை நீண்ட நேரம் ஆகியும் எழாததால் சந்தேகம் அடைந்த வஞ்சிக்கொடி, சஞ்சையை பார்த்தபோது, அசைவின்றி கிடந்துள்ளார். சஞ்சையை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சஞ்சய் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸார் கூறுகையில், ``கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் பிஸ்கட் சாப்பிட்ட பின் தொட்டிலில் தூங்கிய குழந்தை சஞ்சைக்கு எதுக்களிப்பு ஏற்பட்டுள்ளது. இதைப் பெற்றோர் கவனிக்காததால், எதுக்களிப்பான பிஸ்கட் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாயை அடைத்ததை அடுத்து மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’’ என்றனர்.

டாக்டர் இ.ராஜா
டாக்டர் இ.ராஜா

இதுகுறித்து குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் இ.ராஜாவிடம் பேசினோம். ``குழந்தைப் பருவத்தில் எதுக்களிப்பு என்பது இயல்பானதுதான். அதனால், குழந்தைகளைப் பொறுத்த வரையில் சாப்பிட்டவுடன் தூங்க வைக்கக் கூடாது. அதையும் மீறி சாப்பிட்டவுடன் குழந்தை தூங்கியதென்றால், சிறிது நேரம் தோளில் வைத்துக்கொண்டு பின்னர் தொட்டில் அல்லது கட்டிலில் போடலாம். குழந்தைகளுக்கு ஜீரணம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தூங்கும் குழந்தை கண் விழிக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றில்லாமல், குழந்தை எந்த நிலையில் தூங்குகிறது என்பதை தாய்மார்கள் கவனிப்பது மிக அவசியம். குழந்தைகள் விசயத்தில் சிறு கவனக்குறைவே பெரிய பாதிப்புகளை உண்டாக்கும்’’ என்றார்.