தமிழ் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் முன்னெடுக்கும் வகையில் விழா நடத்தப்பட்டது. முன்னோடி இயற்கை விவசாயி மதுராந்தகம் சுப்பு விருந்தினராக கலந்துகொண்டு விவசாயத்தின் மேன்மைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
சென்னை மறைமலை நகரையடுத்த கரம்பூரிலிருக்கிற இலா க்ரீன் இன்டர்நேஷனல் பள்ளிக்கூடத்தில், ஜனவரி 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயத்தையும் விவசாயிகளையும் போற்றும் வகையில் தைப்பொங்கல் திருவிழா பள்ளியின் இயக்குநர் சமிதா முன்னிலையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் பசுமை விகடன் இதழாசிரியர் பொன் செந்தில்குமார் மற்றும் முன்னோடி இயற்கை விவசாயி மதுராந்தகம் சுப்பு ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டு விவசாயத்தின் மேன்மைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். தமிழ் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் முன்னெடுக்கும் வகையில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நடத்தப்பட்ட விளையாட்டுகள், போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளின் கண்கவர் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு !