Published:Updated:

குழந்தைகளின் தரவை பாதுகாக்கத் தவறிய டிக்டாக் - £12.7 மில்லியன் அபராதம் விதித்த இங்கிலாந்து!

TikTok

குழந்தைகளின் தனியுரிமையைப் பாதுகாக்கத் தவறியதற்காக டிக்டாக் செயலிக்கு இங்கிலாந்து தரவு கண்காணிப்பு அமைப்பு £12.7 மில்லியன் அபராதம் விதித்துள்ளது. இதனால் குழந்தைகளுக்குத் தீங்கு விளைக்கும் பிற இணைய பக்க இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் அது தெரிவித்துள்ளது.

2020-ம் ஆண்டில் 13 வயதுக்குட்பட்ட 1.4 மில்லியன் இங்கிலாந்து குழந்தைகள் டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அந்நாட்டின் தகவல் ஆணையர் அலுவலகம் (ICO) நடத்திய விசாரணையின்படி, இந்த செயலி பெற்றோர்களின் அனுமதியின்றி குழந்தைகளின் தரவை பயன்படுத்தியுள்ளது.

ICO
ICO

டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 13 என நிர்ணயித்த போதிலும் பல குழந்தைகளால் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யமுடிந்துள்ளது என ICO கூறியுள்ளது. குழந்தைகளின் தரவு அவர்களை கண்காணிக்கவும், சுயவிவரப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம், இதனால் குழந்தைகளுக்குத் தீங்கு விளைக்கும் பிற இணைய இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் ICO தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தகவல் ஆணையர் ஜான் எட்வர்ட்ஸ், “எங்கள் குழந்தைகள் நிஜ உலகில் பாதுகாப்பாக இருப்பதை போலவே டிஜிட்டல் உலகிலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய சட்டங்கள் உள்ளன. அந்தச் சட்டத்தை டிக்டாக் நிர்வாகம் பின்பற்றவில்லை. இதன் விளைவாக 13 வயதுக்குட்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் டிக்டாக் செயலியை பயன்படுத்தியது மட்டுமல்லாமல் அதன் மூலம் தகாத முறையில் செயல்படும் இணையதளத்துக்கான அணுகலையும் பெற்றுள்ளனர்.

டிக்டாக்
டிக்டாக்

இதை பற்றி டிக்டாக் நன்றாக அறிந்திருக்க வேண்டும். எங்களது £12.7 மில்லியன் அபராதம் அவர்களுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். டிக்டாக் செயலி பெற்றோர்களின் அனுமதியைப் பெற எந்த தகுந்த நடவடிக்கையையும் கையாளவில்லை” எனக் கூறியுள்ளார்.