என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

2K kids: சின்னச் சின்ன ஆசை!

2K kids
பிரீமியம் ஸ்டோரி
News
2K kids

மு.ஜோதி

‘`இங்கே எல்லா பொருள்களிலுமே ஏதோ ஒரு கலை வடிவம் ஒளிந்திருக்கும். அதை வெளிப்படுத்திக்கொண்டு வர்றவங்கதான் கலைஞர்கள். காகிதத்தைக் குழந்தைகள் கப்பல் ஆக்குறதுலயிருந்து கல்லை சிற்பிகள் சிற்பம் ஆக்குற வரை, அந்த விரல்களில்தான் வித்தை இருக்கு. அப்படித்தான், சாக்பீஸ்ல இருந்து பென்சில் ஊக்கு வரை கலையைத் தேடித் தேடி அதை வெளிய கொண்டுவந்துட்டு இருக்கேன்’’னு ரசிச்சுப் பேசுறார், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சினேகா.
சினேகா
சினேகா

‘`எட்டாம் வகுப்பு படிக்கும் போதுதான் மினி ஆர்ட் பத்தி தெரியவந்தது. அப்போவே அதைச் செய்து பார்க்கும் ஆர்வமும் வந்துடுச்சு. பென்சில் ஊக்கில் செய்யப்பட்டிருந்த தொடர்வண்டியின் உருவத்தை, நான் சாக்பீஸ்ல ஹேர்பின் வெச்சு செய்து பார்த்தேன். அதுதான் என்னோட முதல் வொர்க். ஆனா, அடுத்தடுத்து நான் செய்து பார்த்த பல பொருள்கள், செய்து முடிக்கிறதுக்குள்ளேயே உடைஞ்சுபோயிடும்.

2K kids: சின்னச் சின்ன ஆசை!

ஒரு முறை, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உருவம் பென்சில் ஊக்கில் செதுக்கப்பட்டிருந்ததைப் பார்த்துட்டு, அதை நானும் செய்துபார்க்க முயன்றேன். ஆனா, அப்போ என்கிட்ட அதுக்குத் தேவையான பயிற்சியும் கருவிகளும் இல்லை என்பதால, அதைச் செய்து முடிக்க முடியலை. பிறகுதான், எடுத்தவுடனேயே கஷ்டமானதை டிரை பண்ணாம அடிப்படை உருவங்கள்ல இருந்து ஆரம்பிக்கணும்னு புரிஞ்சது. ஊக்கில் கிடார் செய்யுறது, சாக்பீஸில் இதயம் செதுக்குறதுனு ஆரம்பிச்சேன்’’ என்று சொல்லும் சினேகா, இப்போது சாக்பீஸ், அரிசி, பாதாம், பென்சில் ஊக்கு, சோப்பு போன்ற பலவகை பொருள்களிலும் மினி ஆர்ட் மற்றும் பெயின்டிங் செய்து வருகிறார்.

2K kids: சின்னச் சின்ன ஆசை!
2K kids: சின்னச் சின்ன ஆசை!

‘`ஆரம்பத்துல வீட்டுல, ஏதோ வேலை யில்லாம செய்யுறானுதான் நினைச்சாங்க. ஆனா, நான் செய்து முடிச்ச ஆர்ட் பொருள்களைப் பார்த்தப்போ, ‘ஏய் சூப்பர்’ னாங்க. என் ஆர்ட்டுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்தாங்க. பள்ளியில என் ஆசிரியர்களும் நண்பர்களும் என்னை தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தினாங்க.

2K kids: சின்னச் சின்ன ஆசை!

எல்லா கலையிலும் ஒரு குறிப்பிட்ட சிரமம் இருக்கும். அப்படி மினி ஆர்ட்ல கண்களை அதிகமா வருத்தி வேலைபார்க்கிறதால அடிக்கடி கண்வலி வரும். எல்லாம் சேர்ந்து வந்து கடைசியா ஃபைனல் டச்சிங் கொடுத்து செதுக்கும்போது சில நேரங்கள்ல சட்டுனு உடைஞ்சுபோயிடும். பல மணி நேர உழைப்பு அப்படி முடிஞ்சுபோகும்போது மனசுக்கு ரொம்ப கஷ்ட மாகிடும். ஆனாலும், மறு படியும் புது வேலையை ஆரம்பிச்சிடுவேன்’’ என்று சிரிக்கும் சினேகா, ஒரு மினி ஆர்ட் செய்ய அதிக பட்சமாக மூன்று மணி நேரம் எடுத்துக்கொள்கிறார்.

2K kids: சின்னச் சின்ன ஆசை!
2K kids: சின்னச் சின்ன ஆசை!

‘`அந்த நேரத்தை குறைக் கிறதுதான் இப்போ எனக்கு நானே கொடுத்திருக்கிற டாஸ்க். இந்தக் கலையில் கவனிக்கும் ஆற்றல் அதிகரிக் குது. அது என் படிப்புக்கும் கைகொடுக்குது. இதை நான் இப்போ பிசினஸாவும் செய்ய ஆரம்பிச்சிருக்கேன். தெரிஞ்ச வங்களுக்கு சோப்புல அவங்க விரும்பும் உருவங்களை மினி ஆர்ட்டா செய்து கொடுக்கிறேன். கூடிய சீக்கிரம் ஆன் லைன்ல என் பொருள்களை விற்கப் போறேன்’’ என்கிறார் சினேகா உற்சாகமாக.

சின்னச் சின்ன ஆசை... செதுக்கி வைத்த ஆசை!