Published:Updated:

கொரோனா அச்சம்: முதியோர் இல்லங்களை சென்னை மாநகராட்சி எப்படி கையாள்கிறது?

''இங்கு வேலைபார்ப்பவர்களுக்கும் பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என்றுதான் ரிசல்ட் வந்திருக்கிறது. இல்லத்தில் இருக்கிற மற்ற முதியோர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா வைரஸ் தொற்று வயதானவர்களையும் குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்களையும் சுலபமாகத் தாக்குகிறது என்று உலக சுகாதார மையத்தில் ஆரம்பித்து அனைத்து மருத்துவர்களும் சொல்லி வருகிறார்கள். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னால் சென்னை பாலவாக்கத்தில் செயல்படும் விஷ்ராந்தி முதியோர் இல்லத்தில் வசித்து வருகிற 50-க்கும் மேற்பட்ட முதியோர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த செய்தி படித்தவர்களின் மனங்களைப் பதறச் செய்தது.

corona
corona

இதுதொடர்பாகப் பேசினார் அந்த இல்லத்தின் பெயர் சொல்ல விரும்பாத நிர்வாகி ஒருவர். ''கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்தே எங்கள் இல்லத்தில் எந்த வெளியாட்களையும் நாங்கள் அனுமதிக்கவில்லை. இங்கு வேலைபார்ப்பவர்களுக்கும் பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என்றுதான் ரிசல்ட் வந்திருக்கிறது. இல்லத்தில் இருக்கிற மற்ற முதியோர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்'' என்றார்.

முதியோர் இல்லங்களில் இருக்கிற முதியோர்களுக்கு கொரோனா வராமல் தடுப்பதற்காக அரசு என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுத்திருக்கிறது என்று சென்னையின் தென் மண்டல துணை ஆணையர் டாக்டர் ஆல்பே ஜானிடம் கேட்டோம்.

கனிமொழி கேட்ட 600 டி-ஷர்ட், பற்றவைத்த யுவன்... `இந்தி தெரியாது' டி-ஷர்ட் வைரல் பின்னணி!

''வாரத்துக்கு ஒருமுறை எங்களுடைய மெடிக்கல் டீம், எல்லா முதியோர் இல்லங்களிலும் முன்னெச்சரிகை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்துகொண்டிருக்கிறது. இதில் கொரோனா பாசிட்டிவ் வந்தவர்களையும் அறிகுறிகளற்ற கொரோனா உள்ளவர்களையும் கண்டறிந்து உடனே அரசு மருத்துவமனைகளில் அட்மிட் செய்துவிடுகிறோம்.

டாக்டர் ஆல்பே ஜான்
டாக்டர் ஆல்பே ஜான்

கொரோனா வருவதற்கான வாய்ப்பு முதியோர்களுக்கு அதிகம் இருப்பதால், முதியோர் இல்லங்களில் வேலைபார்ப்பவர்களுக்கும் வாரம் ஒருமுறை ஸ்வாப் டெஸ்ட் செய்கிறோம். தவிர, இதுபோன்ற இல்லங்களை நடத்துபவர்களையே, அங்கிருக்கும் முதியோர்களுக்கு தினமும் டெம்ப்ரேச்சர் செக் செய்வது மற்றும் ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதிப்பது ஆகியவற்றைச் செய்ய அறிவுறுத்தியிருக்கிறோம்.

முதியோர் இல்லங்களில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தாலும் உடனடியாக அந்த இல்லங்களுக்குள் கிருமிநீக்கம் செய்துவிடுகிறோம். முதியோர் இல்லத்து வயதானவர்களின் பாதுகாப்பில் அரசு அக்கறையாகவே இருக்கிறது'' என்றார் அவர்.

திருச்சி:`ஒரு வேளை சாப்பாட்டின் வலி என்னனு எங்களுக்குத் தெரியும்'-உதவியால் நெகிழ்ந்த குடும்பங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு