Published:Updated:

`இப்ப சிங்கர் தோனிதான் டிரெண்ட்!’- ஹார்ட்டின்களைத் தெறிக்கவிடும் ரசிகர்கள்

தோனி தரப்பிலிருந்து ஜனவரி வரை பொறுமையாக இருங்கள் என்ற பதிலே வருகிறது. ஆனாலும் அவ்வப்போது அவரது செயலால் செய்திகளிலும் சமூகவலைதளங்களிலும் டிரெண்ட் அடித்து விடுவார்.

தோனி
தோனி

தோனி மீண்டும் அணிக்குள் வருவாரா... வர்றதாக இருந்தால் எப்போ வருவார் என ரசிகர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு இருக்க அவரோ வழக்கம் போல் கூலாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். தோனியின் எதிர்காலம் தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கேள்விகள் கேட்கப்பட்டபோது, `அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்’ என்பதோடு முடித்துக்கொண்டார்.

தோனி
தோனி

தோனி தரப்பிலிருந்து ஜனவரி வரை பொறுமையாக இருங்கள் என்ற பதிலே வருகிறது. ஆனாலும் அவ்வப்போது அவரது செயலால் செய்திகளிலும் சமூகவலைதளங்களிலும் டிரெண்ட் அடித்து விடுவார். தற்போதும் அவரது புதிய அவதாரம் சமூக வலைதளங்களில் செம வைரல்.

சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒருவர், ``மிகவும் திறமையானவர் தோனி. இந்த வீடியோவை இங்கு பதிவு செய்ததற்காக என்னை எதுவும் செய்து விடாதீர்கள். காரணம் இது கட்டாயம் பகிரப்பட வேண்டும்.. சாக்‌ஷி.. உங்களது வீடியோ மிக விரைவில்..” என ஒரு வீடியோ பதிவானது.

அந்த வீடியோவில் தோனி மைக் பிடித்து பழைய இந்தி பாடல் ஒன்றைப் பாடுகிறார். இந்த வீடியோ பதிவிட்டதும் தோனி ரசிகர்கள் பலரும் வீடியோவைப் பதிவிட்ட நபருக்கு நன்றியைத் தெரிவித்து வருகின்றனர். உங்களின் பாட்டுப்பாடும் திறனும் அருமையாக உள்ளது எனப் பலரும் ஹார்ட்டின்களைத் தெறிக்கவிட்டு வருகின்றனர்.