Published:Updated:

அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 80 லட்ச ரூபாய் வாட்ச்! - ஹர்திக்கின் பதில் என்னவாக இருந்திருக்கும்?

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'படெக் பிலிப்பி நடேலியஸ்' கைக்கடிகாரத்தை அணிந்திருந்த ஹர்திக் பாண்டியா, ஒரு வாட்ச் பிரியர் என்பது அவரின் ரசிகர்கள் அறிந்ததே.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின்போது, இந்திய அணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இடைவெளி எடுத்துக்கொண்ட அவருக்கு கடந்த வாரம் லண்டனில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

Hardik pandya
Hardik pandya

வழக்கமாக இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவிடும் ஹர்திக், அறுவைசிகிச்சை முடிந்த கையோடு புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், "அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. உங்கள் அன்புக்கு நன்றிகள். விரைவில் திரும்பி வருவேன்" என்று பதிவிட்டிருந்தார்.

Vikatan

மருத்துவமனையில் இருந்தபடி போட்டோ ஒன்றைப் பதிவிட்டிருந்த ஹர்திக், தனது விலை உயர்ந்த வாட்சைக் காண்பித்தபடி 'தம்ஸ் அப்' காட்டியிருந்தது சமூக வலைதளத்தில் டிரெண்டானது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'படெக் பிலிப்பி நடேலியஸ்' கைக்கடிகாரத்தை அணிந்திருந்த ஹர்திக் ஒரு வாட்ச் பிரியர் என்பது அவரின் ரசிகர்கள் அறிந்ததே.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த கைக்கடிகாரம்தான் இந்த போட்டோ பதிவின் ஹைலைட்!

ஆர்டர் செய்தால் எளிதில் கிடைக்காத இந்த ஆடம்பர வாட்ச்சை, பல மாதங்கள் காத்திருந்துதான் வாங்க வேண்டும். ஹர்திக்கின் புகைப்படத்தைப் பார்த்த பலரும், இந்த 'காஸ்ட்லி' வாட்சை கவனிக்கத் தவறவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"கையில் வாட்ச் அணிந்தபடி, அறுவைசிகிச்சை செய்து கொண்டீர்களா?" என்று பிரேசிலைச் சேர்ந்த பிரபல மாடல் இசபெல்லா கமென்டிட, "எப்போதும்போல, ஹாஹா..." என்று பதிலளித்துள்ளார் ஹர்திக்.

Hardik Pandya
Hardik Pandya

விரைவில் உடல்நலம் குணமாகி வருமாறு மற்ற கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்துகள் தெரிவிக்க, அந்த வாட்ச் மட்டும் அனைவரின் கண்களையும் உறுத்திக்கொண்டே இருக்கிறது! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு