Published:Updated:

மகளுடன் பரதநாட்டியம், கலை நிகழ்ச்சியில் அசத்திய மாவட்ட வருவாய் அதிகாரி; ஊட்டியில் சுவாரஸ்யம்!

மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி

கோடை விழாவின் ஒரு பகுதியாக ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இசை கச்சேரிகள், பட்டிமன்றம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலங்களைக் கொண்டுள்ள நீலகிரியில் கோடை விழா களைகட்டியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மே மாதம் முழுவதும் கோடை விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 175 - ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125- வது ஆண்டு மலர் கண்காட்சி நடைபெற்று வருவதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் மாவட்டம் முழுவதும் நிரம்பி வழிகிறது.

மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி
மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி

இந்த நிலையில், கோடை விழாவின் ஒரு பகுதியாக ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இசை கச்சேரிகள், பட்டிமன்றம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மே மாதம் 31- ம் தேதி வரை இந்தக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், பரதநாட்டியம் நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, நாட்டிய உடையில் வந்து தன் மகளுடன் பரதநாட்டியம் ஆடி அசத்தினார். மாவட்ட வருவாய் அதிகாரி ஒருவர், மகளுடன் இணைந்து நளினம் மாறாமல் நாட்டியம் ஆடியதை அறிந்த சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் கண்டு ரசித்துச் சென்றுள்ளனர். இவரது பரதநாட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.