தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்! - யாருமே என்னை இப்படிக் கூப்பிட்டதில்ல...

கணவரின் அன்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
கணவரின் அன்பு!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

உதவி செய்யவில்லை என்றாலும் தீங்கு செய்ய வேண்டாம்!
உதவி செய்யவில்லை என்றாலும் தீங்கு செய்ய வேண்டாம்!

உதவி செய்யவில்லை என்றாலும் தீங்கு செய்ய வேண்டாம்!

எங்கள் வீட்டில் வேலைபார்க்கும் பெண், என்னிடம் கால் கிலோ தோசை மிளகாய் பொடி பாக்கெட்டை கொடுத்து, `இது பழசா, பயன் படுத்தலாமானு தேதி பார்த்துச் சொல்லுங்கம்மா’ என்றார். எக்ஸ்பயரி தேதியை பார்த்த நான் அதிர்ந்து

விட்டேன்; இரண்டு வருடங்களுக்கு முன்னரே முடிந்துவிட்டிருந்ததைக் கூறினேன். வருத்தம் அடைந்த அவர், ‘இப்படித்தான் அந்த வீட்டுல, ஏதாச்சும் கெட்டுப்போனதை எல்லாம் கொடுப்பாங்க. அதான் உங்ககிட்ட கேட்டுக்கிட்டேன்’ என்றார். காலாவதியான பொருள்களை குப்பையில் போடாமல், ஏதோ உதவி செய்வதாக நினைத்து பிறருக்குக் கொடுப்பது அநியாயம். அவர்களுக்கு ஏதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் யார் பொறுப்பு? ஒன்றுமே கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, கெட்டுப்போன பொருள்களைக் கொடுக்க வேண்டாம்.

- ஜி.இந்திரா, திருச்சி-6

உங்க மெடிக்கல்ஸ்ல டிஸ்கவுன்ட் இருக்கா?!
உங்க மெடிக்கல்ஸ்ல டிஸ்கவுன்ட் இருக்கா?!

உங்க மெடிக்கல்ஸ்ல டிஸ்கவுன்ட் இருக்கா?!

இன்று மாதம் முழுக்க மாத்திரை சாப்பிட வேண்டியிருப் பவர்கள் பலர். இவர்களில் சிலர் வசதிக்காக அருகில் உள்ள மெடிக்கல்ஸில் 10 நாள்கள், 15 நாள்கள் என்று மருந்து வாங்குகிறார்கள். ஆனால் இன்று பல மெடிக்கல் ஷாப் களிலும் 20% வரை டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. உங்கள் ஊரில் அப்படி டிஸ்கவுன்ட் கொடுக்கும் மெடிக்கல் ஷாப்பை கண்டறிந்து, மொத்தமாக மாத்திரை வாங்கிக்கொள்ளலாம். 1,000 ரூபாய்க்கு வாங்கினால் 200 ரூபாய் மிச்சப்படுத்தலாம். செய்யலாம்தானே?!

- ரஞ்சிதமணி ஜெயசிங், கோவை-36

கணவரின் அன்பு!
கணவரின் அன்பு!

கணவரின் அன்பு!

ஒரு திருமணத்துக்கு உறவினர் ஒருவர், புற்று நோயிலிருந்து மீண்ட தன் மனைவியை அழைத்து வந்திருந்தார். கீமோதெரபியால் மெலிந்து காணப் பட்டார் ‘அவங்களை ஏன் கஷ்டப்படுத்திட்டு... நீங்க மட்டும் வந்திருக்கலாமே...’ என்று சிலர் கேட்க, `அவர் உடலளவில் மீண்டுவிட்டாலும் மனதளவில் பலவீனமாக இருக்கிறார். இதுபோன்ற சுப நிகழ்ச்சி கள், கோயில், சினிமா, பார்க் என அழைத்துச் சென்றால் மன இறுக்கம் தளர்ந்து இயல்பாவார் என்று நம்புகிறேன். நான் நினைத்ததுபோலவே படிப்படியாக அவரிடம் மாற்றம் ஏற்பட்டு வருகிறது’ என்றார். அப்போதுதான் பார்த்தேன்... அந்தப் பெண்ணும் அங்கு அனைவரிடமும் மனம்விட்டு பேசி கலகலப்பாக இருந்ததை. அந்தக் கணவரின் அன்பையும் அக்கறையையும் அனைவரும் பாராட்டினோம்!

- அபூர்வம், திருவள்ளூர்

வாட்ஸ்அப் குரூப் மூலம் விழிப்புணர்வு!

என் தோழியின் அப்பா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். சொந்த ஊரில் தன் உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்கள் என சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பலரையும் இணைத்து ஒரு வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்தார் தோழி. அதில் மருத்து வர்களின் செல்போன் எண்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் எண்கள், மருந்துக்கடை நடத்து பவர்கள் எண்கள் என அனைத்தையும் பகிர்ந்தார். அது பலருக்கும் அவசர கால தேவைகளுக்குக் கைகொடுத்தது. மேலும், இலவச மருத்துவ முகாம்கள், சிறப்பு மருத்துவர்கள், சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்கும் வாழ்க்கைமுறை மாற்றங்கள், உடற்பயிற்சி, தவிர்க்க வேண்டிய உணவுகள் என தங்கள் அனுபவங்களை குழுவில் அனைவரும் பகிர்கின்றனர். இந்தப் பரி மாற்றத்தால் உதவியும் விழிப்புணர்வும் கிடைப் பதாக சந்தோஷப்பட்டார் தோழி. நல்ல யோசனை தானே!

- எஸ்.சித்ரா, சென்னை-64

வாட்ஸ்அப் குரூப் மூலம் விழிப்புணர்வு!
வாட்ஸ்அப் குரூப் மூலம் விழிப்புணர்வு!

பேரைச் சொல்லவா!

பத்து வருடங்களுக்கு முன் எனக்குக் காலில் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை நடந்தது. அப்போது மருத்துவமனையில் பத்து நாள்களுக்கு கட்டிலிலேயே இருந்தபோது, இயற்கை உபாதைகளுக்காக அழைத்தபோதெல்லாம் முகம் சுளிக்காமல் வந்தார் அந்த உதவியாளர். டிஸ்சார்ஜ் ஆனபோது, மனம் நிறைந்து நன்றி சொல்லி, அவர் பெயரைக் கேட்டேன். ‘எமிலி’ என்றவர், நான் தந்த சிறிய அன்பளிப்பை ஏற்க மறுத்துவிட்டார். கண்ணீர் மல்க அவரை இறுகக் கட்டியணைத்து விடைபெற்றேன். சமீபத்தில் என் உறவினரை அழைத்துக்கொண்டு அதே மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, அவரைப் பார்க்க நேரிட, ‘எமிலி’ என்று அழைத்தேன். ‘எப்படி இருக்க?’ என்று அவர் கைகளைப் பிடித்து விசாரிக்க, அவ்வளவுதான்... அழுதேவிட்டார். `யாருமே என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதில்ல. `ஆயா’னு கூப்பிடுற குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும், என்கிட்ட வரக்கூட எல்லாரும் தயங்குவாங்க. நீங்க என்னை பேர் சொல்லிக் கூப்பிட்டு கையைப் பிடிச்சுப் பேசினதும் சந்தோஷமா இருக்கு’ என்றார். பொதுவாக யாரையுமே கீரைக்காரம்மா, பால்காரர் என்று அழைக்காமல் பெயரைச் சொல்லி அழைப்பது என் பழக்கம். அது சிலருக்கு எந்தளவுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பதை புரிந்துகொண்டேன்.

- ர.கிருஷ்ணவேணி, சென்னை-95

****

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com