Published:Updated:

`டீச்சரை சந்திக்க நான் வருவேன்' - 55 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி ஆசிரியரை தேடிச்சென்ற துணை ஜனாதிபதி

ஆசிரியரை சந்தித்த துணை ஜனாதிபதி

``1968-ல் ஜக்தீப் தங்கர் ப்ளஸ் டூ முடித்துச் சென்றார். அதன் பிறகு இன்றுதான் அவரைக் கண்டேன். மேற்குவங்க கவர்னராக பதவி ஏற்றபோதும், துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற சமயத்திலும் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். உடல்நலப் பிரச்னையால் என்னால் போக இயலவில்லை.’’

Published:Updated:

`டீச்சரை சந்திக்க நான் வருவேன்' - 55 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி ஆசிரியரை தேடிச்சென்ற துணை ஜனாதிபதி

``1968-ல் ஜக்தீப் தங்கர் ப்ளஸ் டூ முடித்துச் சென்றார். அதன் பிறகு இன்றுதான் அவரைக் கண்டேன். மேற்குவங்க கவர்னராக பதவி ஏற்றபோதும், துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற சமயத்திலும் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். உடல்நலப் பிரச்னையால் என்னால் போக இயலவில்லை.’’

ஆசிரியரை சந்தித்த துணை ஜனாதிபதி

பள்ளியில் தனக்குப் பாடம் எடுத்த ஆசிரியரை மறக்காமல், 55 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது வீட்டுக்குச் சென்று காலை தொட்டு வணங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் நாட்டின் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்.

கேரள சட்டசபை கட்டடத்தின் 25-வது ஆண்டுவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நேற்று கேரளா வந்தார். அப்போது கண்ணூர் மாவட்டம் பானூரைச் சேர்ந்த, தன் ஆசிரியரான ரத்னா நாயரை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றார்.

ஆசிரியர் காலை தொட்டு வணங்கிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்
ஆசிரியர் காலை தொட்டு வணங்கிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்

தன் மனைவி டாக்டர் சுதேஷ் தங்கருடன், ஆசிரியர் வீட்டுக்குச் சென்ற துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் காரில் இருந்து இறங்கியதும் ஆசிரியர் ரத்னா நாயரின் காலை தொட்டு வணங்கி ஆசிபெற்றார். ஜனாதிபதியின் துணைவியாரும் ரத்னா நாயரின் காலை தொட்டு வணங்கினார். பின்னர் டீ அருந்தியபடி 45 நிமிடங்கள் ஆசிரியரிடம் உரையாடினார். அப்போது ஆசிரியர் ரத்னா நாயரை இருக்கையில் அமர வைத்து பின்னால் நின்றபடி துணை ஜனாதிபதியும், அவரின் துணைவியாரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் வீட்டில் இருந்து புறப்படும்போதும் அசிரியரின் காலை தொட்டு வணங்கிவிட்டு விடைபெற்றார் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தோர்கிரா சைனிக் ஸ்கூலில் படித்த போது தனக்கு பாடம் நடத்திய ஆசிரியரான ரத்ன நாயரை மறக்காமல் 55 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துள்ள துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கரின் செயல் கேரள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தனக்குக் கிடைத்த மிகவும் பெரிய குருதட்சணை என, 83 வயது ஆசிரியை ரத்னா நாயர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரத்ன நாயர் கூறுகையில், "1968-ல் ஜக்தீப் தங்கர் ப்ளஸ் டூ முடித்துச் சென்றார். அதன் பிறகு இன்றுதான் அவரைக் கண்டேன். மேற்குவங்க கவர்னராக பதவி ஏற்றபோதும், துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற சமயத்திலும் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். உடல்நலப் பிரச்னை இருந்ததால் என்னால் போக இயலவில்லை. அதே நேரம், 'டீச்சரை சந்திக்க நான் வருவேன்' என அவர் தெரிவித்திருந்தார்.

ஆசிரியர் ரத்னா நாயருடன் துணை ஜனாதிபதி
ஆசிரியர் ரத்னா நாயருடன் துணை ஜனாதிபதி

முதன்முறையாக பணி நிமித்தமாக அவர் கேரளாவுக்கு வந்த நேரத்தில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். 55 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

இந்த சந்திப்பின்போது கேரள சட்டசபை சபாநாயகர் ஏ.எம்.ஷம்ஸீர் உடன் இருந்தார். ஆசிரியர் ரத்னா நாயரின் சகோதரரின் பேரக்குழந்தைகளுக்கு துணை ஜனாதிபதி பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

55 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மாணவனை துணை ஜனாதிபதியாக பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார் ரத்னா நாயர்.