என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

2K kids: செடிகள் வளர வளர... என் வயசு குறையுது! - தன்னம்பிக்கையை விதைக்கும் தனலெட்சுமி

2K kids
பிரீமியம் ஸ்டோரி
News
2K kids

மு.ஜோதி

``கண்ணுக்குக் குளிர்ச்சியும் மனசுக்குப் புத்துணர்ச்சியும் கொடுக்க, தோட்டம் போட வீட்டைச் சுற்றி இடம் இல்லையேனு கவலைப்பட வேண்டாம். மொட்டை மாடி இருந்தாலே போதும். மாடியில தோட்டம் வெச்சு அசத்திடலாம்’’ என்கிறார் தனலட்சுமி.
தனலெட்சுமி
தனலெட்சுமி

61 வயதாகும் இல்லத்தரசியான இவர், 25 வருடங்களாகத் தன் வீட்டில் மாடித்தோட்டம் வைத்து பராமரித்து வரும் சீனியர். சென்னை வேளச்சேரியில் அவரது வீட்டு மாடியில் காய்கறிச் செடிகளும் பூந்தொட்டிகளும் போட்டி போட்டுக்கொண்டு செழித்திருக்கின்றன.

2K kids: செடிகள் வளர வளர... என் வயசு குறையுது! - தன்னம்பிக்கையை விதைக்கும் தனலெட்சுமி

``எனக்குச் செடி வளர்க்குறதுல ரொம்ப ஆர்வம். இன்னொரு பக்கம், கிடைக்குற நேரத்தை உபயோகமா செலவழிக்கணும்னு நெனச்சேன். டூ இன் ஒண்ணா... மாடித்தோட்டம் போட முடிவெடுத்தேன். ஆரம்பத்துல நாலு தொட்டியோடதான் ஆரம்பிச்சேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா செடிகளின் எண்ணிக்கையை அதிகரிச்சேன். பிறந்தநாள், பண்டிகை நாள்களுக்கு எல்லாரும் டிரஸ், வீட்டுக்குத் தேவையான பொருள்களை ஆசை ஆசையா வாங்குற மாதிரி, நான் புதுச் செடிகளை வாங்குவேன்’’ என்பவரின் மாடித்தோட்டத்தில் மல்லி, பன்னீர் ரோஜா, அமெரிக்கன் ரோஜா, ஜாதி மல்லி, வெள்ளை, மஞ்சள் மற்றும் கத்திரிப்பூ வண்ண சாமந்தி, வாடாமல்லி போன்ற பூச்செடிகள், முடக்கத்தான், புதினா போன்ற கீரைகள், கத்திரி, முள்ளங்கி, மிளகாய், வெண்டை உள்ளிட்ட காய்கறிகள் என பூத்தும் காய்த்தும் கிடக்கின்றன.

2K kids: செடிகள் வளர வளர... என் வயசு குறையுது! - தன்னம்பிக்கையை விதைக்கும் தனலெட்சுமி

``தினமும் ஒரு மணிநேரம் செடிகளைப் பராமரிக்கவும் நீர்ப்பாய்ச்சவும் செலவுசெய்யுறேன். செடிகளோடு நேரம் செலவிடும்போது மனசுக்குப் புத்துணர்வா இருக்கும். அதேபோல, ஏதாச்சும் ஒரு செடி வளராம போயிடுச்சுனா மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும்’’ என்று சொல்லும் தனலெட்சுமி,

2K kids: செடிகள் வளர வளர... என் வயசு குறையுது! - தன்னம்பிக்கையை விதைக்கும் தனலெட்சுமி

``என் செடிகளுக்கு நான் செயற்கை உரமோ, பூச்சிக்கொல்லி மருந்தோ பயன் படுத்துறதில்ல. செடி நல்லா வளர இயற்கை உரங்கள், மண்புழு உரம் பயன் படுத்துவோம். செடிகள்ல பூச்சி அரிக்காம இருக்க வேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சியை அரைச்சு தண்ணியில கலந்து செடிகள்ல தெளிப்பேன். எல்லாத்துக்கும் மேல, செடிகள் மேல பாசமா இருப்பேன், அதுங்ககிட்ட அப்பப்போ பேசுவேன்’’ என்கிறார் குழந்தையின் குதூகலத்துடன்.

2K kids: செடிகள் வளர வளர... என் வயசு குறையுது! - தன்னம்பிக்கையை விதைக்கும் தனலெட்சுமி

``என் தோட்டத்துல விளையும் காய்கறிகளை எங்க வீட்டுச் சமையலுக்கு பயன்படுத்தும்போது ஏற்படுற சந்தோஷத்துக்கு அளவே இல்ல. அதேபோல, தேவைக்கும் அதிகமான காய்கறிகளை அக்கம் பக்கத்தினருக்கு பகிரும்போது ரொம்பப் பெருமையா, மகிழ்ச்சியா இருக்கும். பொதுவா 60 வயசு ஆனாலே சிலருக்கு வாழ்க்கை மேல சலிப்பு வந்துடும். நாலு செடிகளை மட்டும் வளர்த்துப் பாருங்க... தினம் தினம் அதுங்களுக்காகவே எழணும்னு தோணும்” என்கிறார் தன் செடிகளுக்குத் தண்ணீர் விட்டபடி.