Published:Updated:

mParivahan செயலியில் உள்ள ஆவணங்களை வாகன சோதனையின்போது அதிகாரிகளிடம் காட்டலாமா?| Doubt of Common Man

டிஜிலாக்கர் | mParivahan
News
டிஜிலாக்கர் | mParivahan

உண்மையில் mParivahan-ல் இருக்கும் டிஜிட்டல் ஆவணங்களை நாம் பயன்படுத்தலாமா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கிறது.

Published:Updated:

mParivahan செயலியில் உள்ள ஆவணங்களை வாகன சோதனையின்போது அதிகாரிகளிடம் காட்டலாமா?| Doubt of Common Man

உண்மையில் mParivahan-ல் இருக்கும் டிஜிட்டல் ஆவணங்களை நாம் பயன்படுத்தலாமா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கிறது.

டிஜிலாக்கர் | mParivahan
News
டிஜிலாக்கர் | mParivahan
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் செல்வா என்ற வாசகர், ``வாகனங்களின் RC book தொலைந்துவிட்டால் mParivahan செயலியில் உள்ள ஆவணங்களை காவல்துறை அதிகாரிகளிடம் காட்டலாமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
Doubt of common man
Doubt of common man

இருசக்கர மற்றும் நா்ன்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது காவல்துறையினர் அவ்வப்போது சோதனை மேற்கொள்வார்கள். நாமும் இதுவரை நம் கையிலிருக்கும் லைசென்ஸ், அர்.சி புக் ஆகியவற்றைக் காட்டியிருப்போம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரசின் செயலிகள் மூலம் டிஜிட்டலாகவே நம்முடைய ஆவணங்களை அரசின் தகவல்தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் கூறி வருகிறது. ஆனால், காவல்துறையினர் சில நேரம் அந்த டிஜிட்டல் ஆவணங்களை ஏற்றுக்கொண்டாலும், பல நேரங்களில் டிஜிட்டல் ஆவணங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். உண்மையில் mParivahan-ல் இருக்கும் டிஜிட்டல் ஆவணங்களை நாம் பயன்படுத்தலாமா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கிறது. நமது வாசகருக்கும் இந்தக் கேள்வி எழுந்திருக்கிறது. அதோடு அவருடைய வாகனத்தின் கையிலிருக்கும் ஆவணங்களும் தொலைந்ததினால், மேற்கூறிய கேள்வியை நம்முடைய Doubt of Common Man பக்கத்தில் கேட்டிருந்தார்.

வாகன சோதனை
வாகன சோதனை

டிஜிட்டலாக அரசின் இரண்டு செயலிகள் மற்றும் இணையதளங்களில் மூலம் மட்டும் நம்முடைய ஆவணங்களைத் தரவிறக்கும் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். வாகனங்கள் சம்பந்தப்பட்ட டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக், இன்சூரன்ஸ் ஆகிய ஆவணங்களை டிஜிலாக்கர் (DigiLocker) மற்றும் mParivahan ஆகிய செயலிகளிலும். ஆதார் கார்டு, PAN கார்டு உள்ளிட்ட மற்ற ஆவணங்களை டிஜிலாக்கர் செயலியின் மூலம் மட்டும் பயன்படுத்திக் கொள்ளமுடியும். மேற்கூறிய இரண்டு செயலிகளின் மூலமும் தரவிறக்கம் செய்யப்பட்டுச் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் அனைத்து இடங்களிலும் செல்லத்தக்கது. சாலைகளில் காவல்துறை சோதனையின்போது பல நேரங்களில் இந்த ஆவணங்களைச் செல்லத்தக்கது அல்ல என காவல்துறையினர் மறுத்திருப்பார்கள். ஆனால், தற்போது டிஜிட்டல் ஆவணங்களைப் பயன்படுத்துவது இயல்பாகி வருகிறது.

mParivahan செயலியின் மூலம் காட்டப்படும் ஆவணம்
mParivahan செயலியின் மூலம் காட்டப்படும் ஆவணம்

நாம் டிஜிட்டலாகக் காண்பிக்கும் ஆவணம் முறையானது தானா எனச் சரிபார்ப்பதற்கான சாதனமும் தற்போது சோதனை செய்யும் காவல்துறை அதிகாரிகளிடம் இருக்கிறது. அதன் மூலம், நம்முடைய மொபைல் செயலியில் இருக்கும் QR Code-ஐ ஸ்கேன் செய்து நம்முடைய வாகனம் மற்றும் நம்முடைய ஓட்டுனர் உரிமம் குறித்த தகவல்களை அவர்களால் சரிபார்க்க முடியும். இதனால், டிஜிட்டலாக ஆவணங்களைக் காண்பிப்பது இருதரப்பினருக்கும் எளிதாகவும், பாதுகாப்பாகவுமே மாறியிருக்கிறது. இதையும் மீறி காவல்துறையினரால் டிஜிட்டல் ஆவணங்கள் செல்லத்தக்கது இல்லை எனக் கூற முடியாது. டிஜிட்டல் ஆவணங்கள் செல்லத்தக்கது தான் என 2018-லேயே அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்.

ஆகஸ்ட் 8, 2018 தேதியிட்ட அறிவிப்பின்படி காவல்துறை சோதனையின் போது டிஜிலாக்கர் அல்லது mParivahan செயலியில் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆவணங்களே போதுமானது என்றும் நாம் கையிலிருக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

download
குறிப்பு: டிஜிட்டல் ஆவணங்கள் என்றால் அரசு அணுமதித்திருக்கும் டிஜிலாக்கர் மற்றும் mParivahan ஆகிய செயலிகள் மற்றும் தளங்களில் இருக்கும் ஆவணங்கள் மட்டுமே செல்லத்தக்கதாக எடுத்துக் கொள்ளப்படும். நம்முடைய ஆவணங்களின் புகைப்படங்களை டிஜிட்டல் ஆவணமாகப் பயன்படுத்த முடியாது, அது ஏற்புடையதல்ல.
டிஜிட்டல் ஆவணங்கள் செல்லத்தக்கதுதான் என்றாலும் அசல் ஆவணங்கள் நம் கையில் இருக்க வேண்டியதும் அவசியம். எனவே, அசல் ஆவணங்கள் தொலைந்துவிட்டால் முறையாக விண்ணப்பம் செய்து மாற்று ஆவணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man