Published:Updated:

Demat Account ஓப்பன் செய்வது எப்படி?| Doubt of Common Man

Doubt of Common Man
News
Doubt of Common Man

டிமேட் அக்கவுன்ட் கம்பெனியின் பங்குகளை இருப்பு வைத்துக்கொள்ள மட்டுமே முடியும்; பரிவர்த்தனை செய்ய இயலாது. அதனால்தான் இந்த டிமேட் கம் டிரேட் அக்கவுன்ட் செயல்பாட்டுக்கு வந்தது.

Published:Updated:

Demat Account ஓப்பன் செய்வது எப்படி?| Doubt of Common Man

டிமேட் அக்கவுன்ட் கம்பெனியின் பங்குகளை இருப்பு வைத்துக்கொள்ள மட்டுமே முடியும்; பரிவர்த்தனை செய்ய இயலாது. அதனால்தான் இந்த டிமேட் கம் டிரேட் அக்கவுன்ட் செயல்பாட்டுக்கு வந்தது.

Doubt of Common Man
News
Doubt of Common Man

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் தினேஷ் என்ற வாசகர்," டிமேட் அக்கவுன்ட் ஓப்பன் செய்வது எப்படி? டிரேட் அக்கவுன்ட் ஓபன் செய்ய நம்பகமான ஆஃப் எது? " என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.

Doubt of common man
Doubt of common man

பொதுவாக, பணம் இருப்பு வைத்துக்கொள்ளவே நாம் வங்கிக் கணக்கை பயன்படுத்துகிறோம். அதேபோல டிமேட் அக்கவுன்ட் (Demat) என்பது ஒரு கம்பெனியின் பங்குகளை இருப்பு வைத்துக்கொள்ள பயன்படுத்தக்கூடிய ஒன்று. டிரேட் அக்கவுன்ட் என்பது பரிவர்த்தனை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் வங்கி கணக்காகும். டிமேட் அக்கவுன்ட் ஓப்பன் செய்வதற்கான வழிமுறைகள், டிரேட் அக்கவுன்ட் பயன்படுத்த நம்பகமான செயலி எது ஆகியவற்றிற்கு பதிலளித்திருக்கிறார் பத்மநாபன் பாலசுப்பிரமணியன். அவர் கூறியதாவது,

“ டிமேட் அக்கவுன்ட் ஓப்பன் செய்வதற்கு பான் கார்டு, ஆதார் கார்டு, செக் லீப், கலர் போட்டோ ஆகியவை அவசியம். மேற்கொண்ட நான்கையும் கொண்டு நம் தேவைக்கேற்ப எந்த வங்கியில் வேண்டுமானாலும் டிமேட் அக்கவுன்ட் ஓப்பன் செய்து கொள்ளலாம். முன்பு டிமேட் அக்கவுன்ட் மற்றும் டிரேட் அக்கவுன்ட் ஆகிய இரண்டும் தனித்தனியாக இருந்தன. தற்போது டிமேட் கம் டிரேட் (Demat cum Trade ) அக்கவுன்ட் என்று ஒன்றாக உள்ளது. பெரும்பாலோனர் இதையே விரும்புகின்றனர். டிமேட் அக்கவுன்ட்டில் கம்பெனியின் பங்குகளை இருப்பு வைத்துக்கொள்ள மட்டுமே முடியும்; பரிவர்த்தனை செய்ய இயலாது. அதனால்தான் இந்த டிமேட் கம் டிரேட் அக்கவுன்ட் செயல்பாட்டுக்கு வந்தது. இதில் கம்பெனி பங்குகளை வைத்துக் கொள்ளவும் பரிவர்த்தனை மேற்கொள்ளவும் முடியும்.”

Bombay Stock Exchange
Bombay Stock Exchange
ட்ரேட் அக்கவுன்ட் ஓபன் செய்ய நம்பகமான செயலி எது?

அனைத்து செயலிகளுமே நம்பகமான செயலிகள்தாம். எந்த வங்கியில் டிரேட் அக்கவுன்ட் ஓபன் செய்கிறோமோ அந்த வங்கியின் செயலியையே உபயோகப்படுத்த போகிறோம். இதில் நம்பகமற்றது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு வங்கியில் அக்கவுண்ட் ஓப்பன் செய்தால் மட்டுமே அந்த தகவல்களை கொண்டு ஒரு செயலியை பயன்படுத்த முடியும் எனவே நம்பகமானது நம்பகமற்றது என எதுவும் இல்லை. மேலும் மோதிலால் ஒஸ்வால் போன்ற தனியார் டிரேடு செயலிகளும் உள்ளன. அவையும் நம்பகமானவையே.” என்று கூறினார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man