தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

தெளிவான பார்வையும் கூட்டு முயற்சியும் தந்த வெற்றி!

சாதனை
பிரீமியம் ஸ்டோரி
News
சாதனை

சாதனை

200 மாடல்கள், 1200-க்கும் மேற்பட்ட ஆடைகள், 200 ஒப்பனைக் கலைஞர்கள், 357 ஆடை வடிவமைப்பாளர்கள், 25 மணி நேரம் 10 நிமிட இடைவேளையில்லாத நீண்ட ஃபேஷன் ஷோ! சிலிர்க்கவைக்கும் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது ‘டிரீம் ஜோன்’ நிறுவனம். ஆடை - நகை வடிவமைப்பு, இன்டீரியர் டிசைன், இணையம் - கிராஃபிக் டிசைன் உட்பட, பல கிரியேட்டிவ் துறைகளுக்கான கல்வி நிறுவனம் இது. இப்போது, ஆடை வடிவமைப்பு உலகில் அதிக அளவு டிசைனர்களைக்கொண்டு உலகின் மிக நீளமான ஃபேஷன் ஷோவை நடத்தி கின்னஸ் சாதனை படைத்திருக்கும் இந்தச் சாதனைப் பயணத்தைப் பற்றி பிசினஸ் மேலாளர் பீனா பாஷாவிடம் கேட்டோம்.

 பீனா பாஷா
பீனா பாஷா

“இது ஒரு நாளில் நடந்த விஷயமல்ல. ஆறு மாதங்கள் முன்பிருந்தே எங்கள் வேலைகளைத் தொடங்கிவிட்டோம். ஏராளமான ஐடியாக்களை விவாதித்தோம். முடிவில், எங்களுக்கான நான்கு அழகிய ‘தீம்’களைத் தீர்மானித்தோம். அதன் அடிப்படையில்தான் 1200-க்கும் அதிகமான ஆடைகளை வடிவமைத்தோம். முதலில் நீளமான ஃபேஷன் ஷோதான் எங்களின் சாதனை இலக்காக இருந்தது. ஆனால், எங்களிடம் நூற்றுக்கணக்கான திறமையான வடிவமைப்பாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் நிச்சயம் இந்தச் சாதனைக்கு தகுதியானவர்கள் என்று தோன்றியதால், அதிகப்படியான வடிவமைப்பாளர்கள் கொண்ட ஃபேஷன் ஷோ பட்டியலிலும் போட்டியிட்டோம். எங்களின் நம்பிக்கையும் உழைப்பும் வீண்போகவில்லை. சரியான திட்டமிடலும் அனைவரின் அர்ப்பணிப்புமே இந்த வெற்றிக்குக் காரணம்!” என்கிறார் பீனா.

 கின்னஸ் சாதனைப் படைத்த ‘டிரீம் ஜோன்’ நிறுவனத்தினர்...
கின்னஸ் சாதனைப் படைத்த ‘டிரீம் ஜோன்’ நிறுவனத்தினர்...

இந்த மாபெரும் பயணத்தில் இடைவிடாமல் பயணித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான இரட்டையர்கள் அருண் - அரவிந்த், “மேடையில் அனைவரும் சிரித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடிக்குப் பின்னாலும் பலரின் கடின உழைப்பு இருக்கிறது. தடைக்கற்களை உடைத்து படிக்கற்களாகச் செதுக்கிய அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்” என்கின்றனர்.

 இலங்கேஸ்வரி
இலங்கேஸ்வரி

19 வருடங்கள் ஃபேஷன் துறையில் கலக்கிக்கொண்டிருக்கும் இலங்கேஸ்வரி முருகேசன், 2 மணிநேரம் 43 நிமிடம் கண்களை மூடிக்கொண்டு 50 பேருக்கு சிகையலங்காரம் செய்து சாதனை படைத்திருக்கிறார். “ஆயிரக்கணக்கான நபர்களை ஒன்று திரட்டி கின்னஸ் சாதனை படைப்பதென்பது மிகவும் கடினம். இவர்கள் படைத்த சாதனையை இவர்களே முறியடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்கிறார் இவர்.

 அருண் - அரவிந்த்
அருண் - அரவிந்த்

தெளிவான பார்வையும், கூட்டு முயற்சியும், சரியான உழைப்பும் இருந்தால் எந்தச் சாதனையும் சாதாரணமே என்று நிரூபித்திருக்கிறது டிரீம் ஜோன் டீம்!

படங்கள்: ஸ்ரீநிதி கண்ணன்