
- ஜெ.எஃப்
கொரோனா தொற்றுப்பரவல் காரணமாகக் கடந்த வருடம் அறிவிக் கப்பட்ட லாக்டெளனில் பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டது. லாக்டௌனைப் பழித்தவர்கள் ஒரு பக்கமிருக்க, அதையே நல்வாய்ப்பாக நினைத்து பலரும் எதிர்காலத்தை நோக்கி புதிய அவதாரம் எடுத்தார்கள். அப்படிப்பட்ட சிலரின் அனுபவங்கள்...

எங்க சேனலுக்கு செம ரெஸ்பான்ஸ்! - சின்னத்திரை பிரபலங்கள் ப்ரீத்தா - ராகவ்
“நாங்க ரெண்டு பேருமே, எங்களோட வேலை களில் பிஸி. அதனால் தனிப்பட்ட நேரம் என்பது ரொம்ப குறைவு. லாக்டெளன் நேரத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்ததால் நிறைய நேரம் கிடைச்சது. அந்த நேரத்தைப் பயன்படுத்திக்க குறைஞ்ச பட்ஜெட்டில் ஆரம்பிச்சதுதான் ‘ராகவ் ப்ரீத்தா’ என்ற யூடியூப் சேனல்.என்னோட டயட், வெயிட் லாஸ், ஸ்கின் கேர்னு குறைஞ்ச பட்ஜெட்டில் வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய விஷயங்களை வீடியோவாகப் பண்ண ஆரம்பிச்சோம். வீடியோ எடுப்பது தொடங்கி, எடிட் பண்றது வரை ரெண்டு பேரும் வேலைகளைப் பிரிச்சுப்போம். மக்கள்கிட்ட எங்க சேனலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பிச்சது. சேனல் தொடங்கிய சில மாசங்களிலேயே 48,000-க்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் கிடைச்சுருக்காங்க. லாக்டெளன் முடிஞ்சு இயல்பு வாழ்க்கைக்கு வந்துட்டதால முன்னாடி மாதிரி நிறைய வீடியோக்கள் ஷேர் பண்ண முடியல. மாசத்துக்கு குறைஞ்சது மூணு வீடியோக்களாவது ரிலீஸ் பண்ணணும்னு பிளான் வெச்சுருக்கோம்.”

மைக்கிலிருந்து கரண்டி... மாசம் நாலு லட்சம் ரூபாய் டர்ன் ஓவர்! - ஆர்ஜே விஷ்ணு
“லாக்டௌன் நேரத்துலதான் ஆர்ஜே வேலைக்கு பிரேக் எடுத்துட்டு ‘கைமணம்’ என்ற பெயரில் ரெஸ்டாரன்டை தொடங்குனேன். அதிக ஸ்ட்ரெஸ்ஃபுல்லானது ஹோட்டல் துறைன்னு அப்புறம்தான் புரிஞ்சது. லாக்டௌன் உச்சத்துல இருந்தப்போ வேலைக்கு சரியான ஆள் கிடைக்காம அவஸ்தைப்பட்டேன்.
‘உங்க ஹோட்டல்ல வியாபாரம் அதிகம் இல்ல... அதனால வேலை பார்க்கப் புடிக்கல’ன்னு சிலர் போயிட்டாங்க. இரண்டு, மூணு தடவை பிசினஸை நிறுத்திடலாமானுகூட நினைச் சேன். அதுக்கப்புறம் மெதுவா பிசினஸ் பிக்கப் ஆக ஆரம்பிச்சிடுச்சு. இப்போ ‘வேலை அதிகமாயிருக்கு. ரெண்டு ஆளை புதுசா போடுங்க’ன்னு ஊழியர்கள் கேக்குறாங்க. ஸ்விக்கி, ஸொமேட்டோவுல மட்டும் ஒரு மாசத்துக்கு நாலு லட்சம் ரூபாய் டர்ன் ஓவர் வருது. ஆர்ஜேவா மைக் புடிச்ச நினைவுகளும் அப்பப்போ எட்டிப் பார்க்கும். பிசினஸை செட்டில் பண்ணிட்டு மறுபடியும் கண்டிப்பா மீடியா பக்கம் வந்துடுவேன்.”

வார நாள்களில் நடிகை, விடுமுறையில் பியூட்டிஷியன்! - சின்னத்திரை நடிகை பரதா
“என்னுடையது டஸ்கி ஸ்கின் என்பதால், ஒவ்வொரு முறையும் மேக்கப் போடுவதில் நிறைய குளறுபடிகள் பண்ணிருவாங்க. மேக்கப் ஆர்ட்டிஸ்ட் செட் ஆகாததால் நானே பியூட்டிஷியன் கோர்ஸ் பண்ணிட்டு எனக்கு மேக்கப் பண்ணிக்க ஆரம்பிச்சேன்.லாக்டெளனில் `மித்ரா பி.பி அகாடமி'னு ஒரு பியூட்டிஷியன் அகாடமி ஆரம்பிச்சேன். லாக்டெளன் தொடங்கி இப்போவரை ஆன் லைனில் நிறைய பேர் என்கிட்ட பியூட்டி ஷியன் கோர்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. இப்போ சன் டிவியில் புது சீரியலில் கமிட் ஆகியிருக்கேன். இனி பிசினஸ் பண்றது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும், விடுமுறை தினங்களை பிசினஸுக்காக ஒதுக்கும் ஐடியா இருக்கு.”

ஐ.டி வேலையிலிருந்து ஆர்கானிக் பொருள்கள் விற்பனைக்கு... - சரண்யா, சென்னை
“நான் ஐ.டி நிறுவன பணியாளர். எப்போதும் ஸ்ட்ரெஸ்ஸான வாழ்க்கை. லாக்டெளன் அந்தப் பர பரப்பான வாழ்க்கையிலிருந்து ஓய்வு கொடுத்துச்சு. ஓடிக்கிட்டே இருந்த எனக்கு லாக்டெளன், வாழ்க்கையை இன்னும் அழகா காட்டுச்சு. அந்த லைஃப்ஸ்டைல் பிடிச்சுப்போச்சு. அதனால் வேலையை விட்டுட்டு பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு பிளான் பண்ணேன். நான் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்துட்டு இருந்தபோதே எனக்கு ஆர்கானிக் பொருள்கள் மீது ஈர்ப்பு அதிகம். அதனால் அஞ்சு லட்சம் முதலீட்டில் ஆர்கானிக் பொருள்கள் சார்ந்த ஆன்லைன் பிசினஸ் தொடங்குனேன். ஆன்லைன் பிசினஸ் நல்லா போனதால் லாக்டெளனுக்குப் பிறகு, மடிப்பாக்கத்தில் ‘தினை ஆர்கானிக்ஸ்’னு ஒரு ஸ்டோர் தொடங்கியிருக்கேன். இப்போ பிசினஸ் நல்லா போயிட்டு இருக்கு. பரபரப்பு இல்லாத வாழ்க்கையை, அதே நேரம் நிரந்தர அடையாளத் தைக் கொடுத்த கொரோனாவுக்கு தேங்க்ஸ்.’’

அம்மா ஹேப்பி அண்ணாச்சி! - அனுஷா, சென்னை
``தனியார் கல்லூரியில் தற்காலிகப் பேராசிரியரா வேலை பார்த்திட் டிருந்தேன். என் குழந்தையோடு நேரம் செலவழிக்க முடியலைனு நிறைய வருத்தப்பட்டு இருக்கேன். கொரோனா நேர லாக்டெளனில் வீட்டில் இருக்கும் பழைய துணி களைப் பயன்படுத்தி துணிப்பைகள் தைக்க ஆரம்பிச்சேன். அதை என் முகநூல் பக்கத்தில் பதிவிட ஆரம்பிச்சதும், ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் கொடுத்தாங்க. அதே நேரம் ஆர்டர்களும் வந்துச்சு, பிறந்த குழந்தைகளுக்கான டயப்பர் பேக், ஃபீடிங் பாட்டில் பேக்னு ஒவ்வொருத்தருக்கும் தேவையான பைகளை அவங்க விரும்பும், நிறம், அளவு, வடிவத்தில் கஸ்டமைஸ் செய்து தைச்சுக் கொடுக்க ஆரம்பிச்சேன். முகநூல் மூலமே நிறைய ஆர்டர்கள் வர ஆரம்பிச்சது. இப்போ மாசம் 100 பைகள் வரை தைச்சுக் கொடுக்கிறேன். வேலையை விட்டுட்டு, குழந்தையைப் பார்த்துக் கிட்டே இப்போ பிசினஸையும் பார்த்துக்கிறேன். அம்மாவா நான் இப்போ ரொம்ப ஹேப்பி.