பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி ஜான்சன் பிரிட்டிஷ் ஊடக ஆலோசகர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியில் ஊடக அதிகாரியாகப் பணியாற்றியவர்.
அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “எங்கள் குடும்பத்தில் இன்னும் ஓரிரு வாரத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் இணைந்துவிடுவார். கடந்த 8 மாதங்களாக மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்பதில் எனது மற்ற குழந்தைகளும் ஆர்வமாக உள்ளனர்" என்று பதிவிட்டிருக்கிறார்.
தான் மூன்றாவது முறையாகக் கர்ப்பமாகி இருப்பதை கேரி ஜான்சன் அறிவித்ததன் மூலம் போரிஸ் ஜான்சன் தனது 58வது வயதில் 8-வது குழந்தைக்குத் தந்தையாகிறார். ஜான்சன் - கேரி தம்பதிக்கு ஏற்கெனவே ரோமி என்ற ஒரு வயது மகளும், வில்பிரட் என்ற மூன்று வயது மகனும் உள்ளனர். இவர்கள் மே 2021-ல் திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கு முன் மரீனா வீலர், ஹெலனைத் திருமணம் செய்துகொண்ட போரிஸ் ஜான்சனுக்கு மொத்தம் 5 குழந்தைகள் உள்ளன. தற்போது 8-வது குழந்தைக்குத் தந்தையாகப் போகும் போரிஸ் ஜான்சனுக்கு அந்நாட்டு மக்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.