லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

``எம்.ஜி.ஆரால ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம் எங்களுடையது!’’

ஐசரி கணேஷ் மனைவி - மகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஐசரி கணேஷ் மனைவி - மகள்

- ஐசரி கணேஷ் மனைவி - மகள் பெருமிதம்

கல்வியில் மட்டுமன்றி கலைத்துறையிலும் கால்பதித்து முன்னணியில் இருக்கிறது வேல்ஸ் குழுமம். வேல்ஸ் குழுமத்தின் நிறுவனரான ஐசரி கணேஷ், இந்தச் சாதனைகளை ஒற்றை மனிதராகச் சாத்தியப்படுத்திவிடவில்லை. அவரது அத்தனை வெற்றிகளுக்கும் பின்னால் இருப்பவர்கள் இரண்டு பெண்கள். மனைவி ஆர்த்தி கணேஷ் வேல்ஸ் குழுமத்தின் சார்பு அதிபராகவும், மகள் ப்ரீத்தா கணேஷ் துணை செயல் தலைவராகவும் இருக்கிறார்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு, கூட்டு முயற்சி, எதிர்காலத் திட்டங்கள் என அனைத்தையும் பகிர்கிறார்கள் ஆர்த்தியும் ப்ரீத்தாவும்...

‘`கல்வி நிறுவனத்தை நிர்வகிக்கணும்னா அதுக்கு என்னை நான் தயார் படுத்திக்கணும். அதனால கல்யாணத்துக் குப் பிறகும் நான் படிக்க ஆசைப்பட்டேன். அதுக்கு என் கணவரும் மாமியாரும் சப்போர்ட் பண்ணாங்க. இப்போவரைக்கும் என் கணவரும் படிச்சிட்டேதான் இருக்காரு. எம்.எல் டிகிரி பண்ணிட்டிருக்காரு...அவருக்கு வாழ்க்கை முழுக்க ஸ்டூடன்ட்டா இருக்கணும்னு ஆசை...’’ லட்சக்கணக்கான மாணவர்களை உருவாக்குமிடத்தில் இருக்கும் மாணவரைப் புகழ்ந்தபடி பேச ஆரம்பிக்கிறார் ஆர்த்தி கணேஷ். பதினாறடி பாயும் குட்டியாக, அம்மாவை முந்திக்கொண்டு பேசுகிறார் மகள் ப்ரீத்தா கணேஷ்.

ஐசரி கணேஷ் மனைவி - மகள்
ஐசரி கணேஷ் மனைவி - மகள்

‘`ஆமாமா... அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் படிப்புன்னா அவ்ளோ பிடிக்கும். நான் அம்மா வயித்துல இருந்தப்போதான் அவங்க எம்.சி.ஏ எக்ஸாம் எழுதினாங்க. நான் எங்க ஸ்கூல்லதான் படிச்சேன். 100-க்கு 95 மார்க் வாங்கினாகூட மீதி 5 மார்க் எங்கேன்னு கேட்பாங்க. நல்லவேளையா அந்த பிரஷர் என் கூடப் பிறந்தவங்களுக்கு இல்லை.. ஆனாலும் வளர வளரதான் கல்வியோட முக்கியத்துவம் புரிய ஆரம்பிச்சது. அதனாலதான் 23 வயசுலயே எங்களுடைய கல்விக் குழுமத்துல இவ்வளவு பெரிய பொறுப்பை தைரியமா ஏத்துக்க முடிஞ் சது...’’ ப்ரீத்தாவின் பார்வையில் பெருமிதம்.

‘`இவ்ளோ பெரிய பொறுப்பை சின்னப் பொண்ணு மேல திணிக்கிறோமோனு ஆரம்பத் துல தோணுச்சு. ஸ்டூடன்ட்ஸுக்கும், கேம் பஸுக்கும் இவளை மாதிரியான இளைஞர்கள் தான் தேவைன்னு நினைச்சோம். நாங்க நினைச்ச மாதிரியே ஸ்டூடன்ட்ஸ் இவகூட ஈஸியா கனெக்ட் ஆயிடறாங்க. நாங்க எடுத்த முடிவு சரியானதுங்கிற நம்பிக்கை வந்திருக்கு. நிறுவனத்தை நல்லபடியா கொண்டு போயிடு வாங்கிற நிம்மதியோட இருக்கோம்...’’ மகளின் வேகமும் விவேகமும் சொல்லிப் பூரிக்கிறார் அம்மா.

வேல்ஸ் குழுமம் சினிமா தயாரிப்பிலும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. வேல்ஸ் குழுமத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளராக மட்டுமன்றி, நடிகராகவும் களமிறங்கியிருக்கிறார். மனைவிக்கும், மகளுக் கும் சினிமாவில் எந்த அளவுக்கு ஆர்வம்?

‘`சினிமா அவருடைய பேரார்வம். ரசிச்சுப் பண்றார். நல்ல படங்கள் பண்ண நினைக்கிற அவரோட எண்ணத்தை ஊக்கப்படுத்தறது மட்டும்தான் என் வேலை. மத்தபடி நான் உண்டு, எங்க கல்வி நிறுவனம் உண்டுன்னு இருக்கேன்...’’ ஆர்த்தி சிம்பிளாக சொல்லி நிறுத்த,

‘`பலரும் நான்தான் படங்களை புரொடியூஸ் பண்றேன்னு நினைச்சிட்டிருக்காங்க. ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் என் காலேஜ் சீனியர். அவரோட ஷார்ட் ஃபிலிம்ஸ் பார்த்துப் பிடிச்ச தால ரெகமண்ட் பண்ணேன். மத்தபடி எனக் கும் சினிமாவுக்கும் சம்பந்தமே இல்லீங்க. ஆடியன்ஸா அப்பாவோட படங்களை ரசிக் கிறதோட சரி... இப்போதைக்கு எஜுகேஷன் ஃபீல்டுல செய்யவேண்டிய மாற்றங்கள் நிறைய இருக்கு. ஒருவேளை எதிர்காலத்துல இந்தத் துறை போரடிச்சா, அதுக்கப்புறம் தயாரிப்பு வேலைகளை பத்தி யோசிப்பேனோ என் னவோ...’’ என்கிற ப்ரீத்தா, நடிப்பில் ஆர்வ மில்லை என்பதையும் அழுத்திச் சொல்கிறார்.

தன் மாமனார் ஐசரி வேலனுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உறவு குறித்துச் சொல்லும் போது சிலிர்க்கிறது ஆர்த்திக்கு. ‘`நாங்க இந்த நிலைமைக்கு வந்ததுக்கு காரணமே எம்.ஜி.ஆர் தான்னு என் கணவர் அடிக்கடி சொல்வார். என் மாமனார் இறந்ததுக்கு அப்புறம் எங்க வீட்டுக் கடனை எல்லாம் அடைச்சு,

எம்.ஜி.ஆர் கையால கொடுத்த முதல் தொகைல தான் இந்த காலேஜையே தொடங்கினோம் .எம்.ஜி.ஆரால ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பங் கள்ல எங்கக் குடும்பமும் ஒன்று. இப்பவும் என் கணவர் பாக்கெட்ல அவங்க அப்பா படமும், எம்.ஜி.ஆர் படமும் இருக்கும்...’’ என சிலாகிக் கிறார். அம்மாவின் நன்றி உணர்வை ரசித்தபடி, அழகான புன்னகையோடு வழியனுப்பினார் ப்ரீத்தா.