Published:Updated:

தற்சார்பு வாழ்வியல் பயிற்சி - சில சந்தேகங்களும் விளக்கங்களும்! #FAQ

தற்சார்பு வாழ்வியல் பயிற்சி
News
தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

பொதிகை மலையும், சலசலத்து ஓடும் ஆறும், மூலிகைகளின் நடுவில் நடைபெறும் தற்சார்பு வாழ்வியல் பயிற்சியும் நினைவிலிருந்து அழிக்க முடியாத அனுபவங்களைத் தர காத்திருக்கின்றன.

தற்சார்பு வாழ்வியல் பயிற்சி - சில சந்தேகங்களும் விளக்கங்களும்! #FAQ

பொதிகை மலையும், சலசலத்து ஓடும் ஆறும், மூலிகைகளின் நடுவில் நடைபெறும் தற்சார்பு வாழ்வியல் பயிற்சியும் நினைவிலிருந்து அழிக்க முடியாத அனுபவங்களைத் தர காத்திருக்கின்றன.

Published:Updated:
தற்சார்பு வாழ்வியல் பயிற்சி
News
தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

மண்ணுக்கும், உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும் வாழ்க்கை முறையான தற்சார்பு வாழ்க்கையை நோக்கி பலரின் கவனம் இன்று திரும்பியிருக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் அங்குள்ள தட்பவெப்பநிலைக்கு ஏற்ற பயிர்களைப் பயிர்செய்து, சூழலுக்கு உகந்த தங்கள் தேவைகளை வாழும் இடத்திலேயே பூர்த்திசெய்து வாழும் இயற்கையோடு இணைந்த ஆரோக்கியமான எளிய வாழ்க்கைதான் அது. தற்சார்பு என்பது தமிழர்களின் வாழ்க்கை முறை. அது, குகைகளைவிட்டு வெளியில் வாழத்தலைப்பட்ட ஆதிமனிதனின் வாழ்க்கை முறையும்கூட.

தற்சார்பு வாழ்வியல் பயிற்சி
தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்சார்பு வாழ்க்கையின் அவசியத்தை, அனுபவத்தை உங்களுக்கு நேரடியாக அளிக்கும் வகையில் அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணைந்து 'நல்வாழ்வு நம் கையில்!' என்ற தற்சார்பு வாழ்வியல் பயிற்சியை ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடத்துகிறது. 3 பகல், 2 இரவுகள் என பயிற்சி நடைபெறும். சித்த மருத்துவர் மைக்கேல் செயராசுவின் தலைமையில் இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பயிற்சி குறித்த சில சந்தேகங்களுக்கான விடைகள் இதோ:

பயிற்சி எங்கு நடைபெறுகிறது?

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் உள்ள சித்தர் கலைக்கூடத்தில் நடைபெறும். பயிற்சி நடைபெறும் இடத்துக்கு திருநெல்வேலி வழியாகவும் தென்காசி வழியாகவும் வந்து சேரலாம்.

பாபநாசம்
பாபநாசம்
எல். ராஜேந்திரன்

பயிற்சியில் என்னென்ன கற்றுத் தரப்படும்?

* தற்சாற்பு வாழ்வியலின் முக்கியத்துவம்

* உடலினை உறுதி செய்யும் மந்திரம்

* நோய்களை விரட்டும் மூலிகைத் தோட்டம் அமைத்தல்

* ஆற்றில் நீராடல்

* நிலாச்சோறு

* யோகா, எளிய உடற்பயிற்சி

* மூலிகை உலா

* அவசர காலத்தில் கைக்கொடுக்கும் மருந்தில்லா வர்ம மருத்துவம்

* தற்சார்பு வாழ்க்கை - Spot Visit

* பாரம்பர்ய விளையாட்டு

இன்னும் பல ஆச்சர்ய அனுபவங்கள் காத்திருக்கின்றன. பொதிகை மலையும், சலசலத்து ஓடும் ஆறும், மூலிகைகளின் நடுவில் நடைபெறும் பயிற்சியும் நினைவிலிருந்து அழிக்க முடியாத அனுபவங்களைத் தர காத்திருக்கின்றன.

மூலிகை உலா
மூலிகை உலா

தங்குவதற்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன?

தங்குவதற்கு தனித்தனி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஓர் அறையில் இரண்டு பேர் தங்க வைக்கப்படுவார்கள். அனைத்து அறைகளிலும் ஏ.சி வசதி உள்ளது.

முன்பதிவுக்கு இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்.

பயிற்சிக்கு எத்தனை மணிக்கு வந்து சேர வேண்டும்?

பயிற்சிக்கு முந்தின நாள், அதாவது வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) இரவிலிருந்தே தங்குமிடத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 13) காலையிலும் வந்து சேரலாம். பயிற்சியில் பங்கேற்பவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 13-ம் தேதி காலை 11 மணிக்கு முன்பாக தங்குமிடத்துக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். பயிற்சி நடைபெறும் நேரத்தில் அப்பகுதியைவிட்டு வெளியேறுவதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது.

தற்சார்பு வாழ்வியல் பயிற்சி
தற்சார்பு வாழ்வியல் பயிற்சி

இறுதி நாளன்று பயிற்சி எத்தனை மணிக்கு நிறைவடையும்?

தொலை தூரத்திலிருந்து வருபவர்கள் அனைவரும் ஊர் திரும்புவதற்கு வசதியாக ஆகஸ்ட் 15-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 3 மணியளவில் பயிற்சி நிறைவடையும்.

உணவு ஏற்பாடுகள் பற்றி...

மூன்று நாள்களுக்கும் தரமான ஆர்கானிக் உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆர்கானிக்
ஆர்கானிக்

பயிற்சிக்கான கட்டணம் எவ்வளவு?

நபர் ஒருவருக்கு பயிற்சி, தங்குமிடம், உணவு, Spot Visit என அனைத்துக்கும் சேர்த்து சிறப்பு சலுகைக் கட்டணம் ரூ.6,999 (ஜி.எஸ்.டி உள்பட). மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ரூ.3,999 கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம்.

பயிற்சிக்கு எத்தனை இடங்கள் உள்ளன?

மொத்தம் 40 இடங்கள் மட்டுமே உள்ளன. பயிற்சிக்கான இடங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. உங்கள் இடங்களைப் பதிவுசெய்ய சீக்கிரம் முந்துங்கள்.

Workshop on Self Sustainable Living
Workshop on Self Sustainable Living

முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

கூடுதல் விவரங்களுக்கு

90035 55441, 99400 22128