Published:Updated:

ஃபேஷன் ஸ்டுடியோ! - 5

கலர்ஃபுல் பகுதிஇந்துலேகா.சி, படங்கள்: இரா.யோகேஷ்வரன்

சென்னையின் வி.ஐ.பி ஏரியாக்களில் ஒன்றான கோபாலபுரத்தில் இருக்கிறது, 'மனா டிசைன் ஸ்டுடியோ’. இதன் நிர்வாகிகள் ஆர்த்தி மற்றும் வனிதாவை, 'ஃபேஷன் ஸ்டுடியோ’ பக்கத்துக்காகச் சந்தித்தோம்.

ஃபேஷன் ஸ்டுடியோ! - 5
ஃபேஷன் ஸ்டுடியோ! - 5
ஃபேஷன் ஸ்டுடியோ! - 5

'என்னோட சொந்த ஊரு விஜயவாடா. ஆர்த்திக்கு காரைக்குடி. ரெண்டு பேரும் படிச்சு  முடிச்சதும் வேலை   செய்த    அட்வர்டைசிங்  ஏஜென்சி யிலதான் அறிமுகமானோம். அங்க ரெண்டு வருஷம் வேலை பார்த்தோம். அதுக்கப்புறம் சொந்தமா இந்த 'மனா டிசைன் ஸ்டுடியோ’வை ஆரம்பிச்சோம். அஞ்சு வருஷமா இந்த ஃபீல்டுல இருக்கோம். 'நவீன சரஸ்வதி சபதம்’ மற்றும் 'திருமணம் எனும் நிக்காஹ்’ திரைப்படத்தில் ஜெய் மற்றும் நஸ்ரியாவுக்கு டிசைன் செய்தது நாங்கதான்!' என்று பெருமையோடு சொன்ன வனிதாவை இடைமறித்த ஆர்த்தி,

"எங்களுடைய ஸ்பெஷல்... பிரைடல் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள். இதோ இந்த கவுனை பாருங்க... மழை கான்செப்ட்ல டிசைன் செஞ்சது. அதனாலதான் மிட் நைட் ப்ளூ கலர், கவுனுக்குக் கீழே ரெயின்போ கலர்ஸ்னு யூஸ் பண்ணிருக்கோம். சரி, உங்க வீட்டுக் குழந்தைக்கு கடையில வாங்கற சிம்பிள் கவுனுக்கு எப்படியெல்லாம் கிராண்ட் லுக் தரலாம்னு பார்க்கலாமா!' என்றபடியே டிசைனிங் வேலையில் இறங்கினார்...

ஃபேஷன் ஸ்டுடியோ! - 5