Published:Updated:

இன்டீரியர்..! - 5

மனதைக் கொள்ளைகொள்ளும் மியூரல் ஆர்ட்!இந்துலேகா.சி

இன்டீரியர்..! - 5

மனதைக் கொள்ளைகொள்ளும் மியூரல் ஆர்ட்!இந்துலேகா.சி

Published:Updated:

ந்த இதழ் இன்டீரியர் பகுதியில், வீட்டை அலங்கரிக்கும் வழிகள் சொல்பவர், சென்னையில் உள்ள 'ஆர்ட்ரீ ஸ்டுடியோ’ பங்குதாரர் ரேவதி.

'எங்க நிறுவனம் ஆரம்பிச்சு மூணு வருஷம் ஆச்சு. இன்டீரியர் டிசைனிங்ல நாங்க ஃபோகஸ் பண்றது மியூரல், பெயின்ட்டிங் மற்றும் ஸ்கல்ப்ச்சர். எங்க டீம்மேட்ஸ் நடராஜ், பரணி, சோலை, ஆனந்த், கமல், ஹரி எல்லாருமே புரொஃபஷனல் ஆர்ட்டிஸ்ட்ஸ். தனித்தனியா வேலை பண்ணிட்டிருந்த இவங்க எல்லாரோட திறமை யையும் பார்த்து, ஒரே டீமா சேர்த்து, கம்பெனி ஆரம்பிச்சேன். சென்னையில பல இடங்கள்ல, சிக்னல் பக்கத்துல கரகாட்டம், பொய்க்கால் குதிரைனு சிலைகளைப் பார்த்திருப்பீங்க. இது, இவங்க கைவண்ணம்தான்!' எனும் ரேவதியிடம்,

'இன்டீரியர் டிசைனிங்கைப் பொறுத்தவரை இப்ப இருக்கும் டிரெண்ட் என்ன?' என்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்டீரியர்..! - 5

'இன்டீரியர்னா சுவருக்கு பெயின்ட் அடிப்பதும், வீட்டுக்குள்ள எங்கெங்க என்னென்ன பொருட்களை அரேஞ்ச் பண்ணணும் என்பதும், லைட்டிங் செட் பண்றதும்தான்னு பலரும் நினைச்சுட்டு இருப்பாங்க. ஆனா, இது ஒரு கடல் மாதிரி. நம்ம கிரியேட்டிவிட்டிக்கு ஏத்த மாதிரி என்ன வேணுமானாலும் செய்யலாம். நாம செய்யற விஷயம், நம்ம வீட்டை கூடுதல் அழகா காட்டி நாலு பேரை பேச வைக்கணும். அந்த வகையில பார்த்தா, எவர் க்ரீன் டிரெண்ட் பெயின்ட்டிங். அப்புறம் வித்தியாசமான சிலைகள். இப்போ டிரெண்ட், மியூரல் ஆர்ட் வொர்க்தான்!' எனும் ரேவதி தரும் மியூரல் ஆர்ட் தகவல்கள் இதோ...

''மியூரல் ஆர்ட்டில் டைல் கட் மியூரல், ஃபைபர் கிளாஸ் மியூரல், டெரகோட்டா மியூரல், மெட்டல் மியூரல், உட் கார்விங் மியூரல், ஏரியேட்டட் கான்க்ரீட் மோல்ட் மியூரல்னு பல வகைகள் இருக்கு. ஒவ்வொண்ணைப் பத்தியும் பார்ப்போம்.

டைல் கட் மியூரல்: மற்ற மியூரல் ஆர்ட்டை விட இந்த டைல் கட் மியூரல்தான் விலை குறைவு. ஆனா, எந்தளவு டிசைன் வேலை இருக்கோ, அதைப் பொறுத்து விலையும் அதிகமாகலாம்.

ஃபைபர் கிளாஸ் மியூரல்: இது கொஞ்சம் விலை அதிகம், ஆனா, 30 - 40 வருஷங்கள் வரைக்கும் பொலிவு மாறாம இருக்கும்.

இன்டீரியர்..! - 5

டெரக்கோட்டா மியூரல்: பாரம்பர்ய லுக் விரும்புறவங்களுக்கு ஏற்ற மெட்டீரியல் இது. வீட்டுத் தோட்டங்களுக்கு நடுவுல வைக்கும் போது, ரொம்ப அழகா இருக்கும். வீட்டுக்குள்ளேயும் வைக்கலாம். இது சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில வர்றதுங்கறது குறிப்பிடத்தக்கது.

மெட்டல் மியூரல்: இதை அலுமினியம், செம்பு, பித்தளை, இரும்பு இப்படி பல வகையான மெட்டல்களில் செய்ய முடியும். மெட்டல் விலை மற்றும் டிசைனைப் பொறுத்து விலை இருக்கும், வாழ்நாளும் அதிகம்.

இன்டீரியர்..! - 5

உட் கார்விங் மியூரல்: பார்க்க ரிச்சா இருக்கும். ஆனா, பராமரிப்பு தேவைப்படும். தண்ணீர் படாம பாத்துக்கறது, குறிப்பிட்ட இடைவெளியில வார்னிஷ் பண்றதுனு அதோட ஆயுளுக்கு கொஞ்சம் மெனக்கெடணும்.

ஏரியேட்டட் கான்க்ரீட் மியூரல்: இதுல ரொம்ப வித்தியாசமா எதுவும் இல்ல. இப்ப புதுசா செங்கலுக்குப் பதில் ஒரு சிமென்ட் கல் பயன்படுத்துறாங்கள்ல... இதுதான். இதுக்கும் நல்ல ஆயுள் உண்டு.  

இப்படி ஒவ்வொரு மியூரல் ஆர்ட்டும் ஒவ்வொரு மெட்டீரியல்ல செய்யப்பட்டாலும், நாம டிசைன் பண்ற கான்செப்ட்தான், மியூரல் எந்தளவுக்கு அழகா இருக்குங்கிறதைச் சொல்லும். கூடவே, மியூரல் ஆர்ட் செய்யப்படும் மெட்டீரியலின் விலை மற்றும் அதன் டிசைனிங் வொர்க்கைப் பொறுத்து ஒரு சதுர அடி 500 முதல் 5 ஆயிரம் வரை கூட இருக்கும்!''

- உங்கள் வீட்டில் மியூரல் ஆர்ட் வேலைக்கான அடிப்படை ஐடியாக்களை கொடுத்துவிட்டார் தானே ரேவதி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism