Published:Updated:

இன்டீரியர்..! - 6

வீட்டு ஃப்ளோரிங்... விதம்விதமான ஆப்ஷன்கள்!இந்துலேகா.சி, படங்கள்: எம்.உசேன்

இன்டீரியர்..! - 6

வீட்டு ஃப்ளோரிங்... விதம்விதமான ஆப்ஷன்கள்!இந்துலேகா.சி, படங்கள்: எம்.உசேன்

Published:Updated:

வீடு கட்டும்போது, அதனுடைய அலங்காரத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதேபோல் கட்டுமானத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்த இதழ் 'இன்டீரியர்’ பகுதிக்கு வீட்டின் தரைப் பகுதியில் பதிக்கப்படும் டைல்ஸ், கிரானைட் போன்றவற்றைப் பற்றிய விவரங்களை வழங்குகிறார், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள 'கிளாஸிக் ஃப்ளோரிங் & இன்டீரியர்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாகி தாமஸ் ராஜன்.

இன்டீரியர்..! - 6

 'வீட்டுக்கு ஃப்ளோரிங் வொர்க் பண்ணும்போது வசதி மற்றும் பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி மட்டுமில்லாம, அதன் ஆயுள் பற்றியும் சேர்த்துக் கவனிக்கணும். அந்த வகையில் ஃப்ளோரிங்கில் டைல்ஸ், மார்பிள், மொசைக், கிரானைட் இப்படி நிறைய வகைகள் இருக்கின்றன' எனும் தாமஸ், அவற்றை ஒவ்வொன்றாக விளக்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டைல்ஸ் ஃப்ளோரிங்: பாத்ரூமுக்கு பயன்படுத்திட்டிருந்த டைல்ஸ், கிச்சன்ல படியும் எண்ணெய்ப் பிசுக்கை சுலபமா துடைக்கலாமேனு யோசிச்சு, கிச்சனுக்கு வந்து, அப்படியே வீட்டின் மொத்த ஃப்ளோரிங்குக்கும் வந்துடுச்சு. இதுல நிறங்களைவிட, டிசைன்ஸ் அதிகம். ஆனா, கீறல் விழுவதற்கான வாய்ப்பு மற்றும் நார்மலான உறுதித்தன்மை இதோட மைனஸ்.

விலை: ஒரு சதுர அடி

இன்டீரியர்..! - 6

22 முதல் 60 வரை.

மார்பிள் ஃப்ளோரிங்: நம்ம ஊரின் சூடான வெப்பநிலைக்கு மார்பிள் நல்ல தேர்வு. ஆனா, சைனஸ் பிரச்னை உள்ளவங்க மார்பிள் தரையில் செருப்பு போட்டுதான் நடக்கணும். மார்பிள், வீட்டு வரவேற்பறைக்கு மட்டுமே உகந்தது. ஏ.சி இருக்கும் அறைகளில் மார்பிள் ஃப்ளோரிங்கை தவிர்த்துடலாம். மார்பிளை, குரோயிங் ஸ்டோன்னு சொல்லுவாங்க. அதாவது, இதுக்கு வளரும் தன்மை இருக்கு. நாலு சுவருக்கு மத்தியில் மார்பிள் தரை இருக்கும்பட்சத்தில் நாளடைவில் மார்பிளின் விரியும் தன்மையால் சுவரில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு. இதைத் தவிர்க்க குறைஞ்சது மூணு வருஷங்களுக்கு ஒருமுறை பாலிஷ் செய்து, வேக்ஸ் கோட்டிங் கொடுக்கணும்.

இன்டீரியர்..! - 6

மார்பிள், ஒரு சாஃப்ட் ஸ்டோன். இதுல தண்ணி, காபி, டீ இதெல்லாம் பட்டா... கறை படிஞ்சுடும். பாத்ரூமில் ஆசிட் ஊற்றினால் அரித்துப்போகும். அதனால் பாத்ரூம் மற்றும் கிச்சனுக்கு மார்பிள் போடுவதைத் தவிர்க்கணும். விரைவில் தேய்மானம் ஏற்படும்கிறதால, படிக்கட்டுகளுக்கும் இதைத் தவிர்த்துடலாம்.

விலை: ஒரு சதுர அடி

இன்டீரியர்..! - 6

45 முதல் 300 வரை.

கிரானைட் ஃப்ளோரிங்: ஒரு காலத்தில் பீக்ல இருந்த கிரானைட்டை, இப்போ அதிகமா ஹோட்டல்களில்தான் பயன்படுத்தறாங்க. இந்த ஸ்டோனை, 'டெத் ஸ்டோன்’னு வாஸ்து நிபுணர்கள் சொல்வாங்க. கல்லறைகளுக்கு இதைப் பயன்படுத்த ஆரம்பிச்சதால, சென்டிமென்ட்டா மக்கள் இதைத் தவிர்க்கிறாங்க. மத்தபடி இது அதிக உறுதியானது, கறை படியாது, கீறல்களும் விழாது.

விலை: ஒரு சதுர அடி

இன்டீரியர்..! - 6

120 முதல் 5,000 வரை.

வுட்டன் ஃப்ளோரிங்: வெளிநாட்டுல கூலான க்ளைமேட்டை சமாளிக்க, ஃப்ளோரிங்குக்கு வுட் பயன்படுத்துவாங்க. நம்ம ஊருல வுட்டன் ஃப்ளோரிங்கை டிரெண்ட் மற்றும் ரிச்னெஸுக்காக பயன்படுத்தறாங்க. இதுல லேமினேட்டட் வுட் ஃப்ளோரிங் ஒரு வகை. ஒரிஜினல் தேக்கு, ரோஸ் வுட் போன்ற ஹார்டு வுட்டன் ஃப்ளோரிங் என இன்னொரு வகை.

இன்டீரியர்..! - 6

வுட்டன் ஃப்ளோரிங்கை தண்ணீர் படாம பார்த்துக்கணும். பராமரிப்புக்கு தண்ணியில நனைச்சு நல்லா பிழிஞ்சு எடுத்த துணியால் துடைச்சா நீடிச்சு உழைக்கும். லேமினேட்டட் வுட் தண்ணி பட்டா, உப்பிப் போகும். அந்த உப்பிய லேமினேட்டட் வுட் பீஸை மட்டும் பிரித்துவிட்டு வேற மாத்திக்கலாம். இதை  பிரிச்சிட்டு, திரும்பவும் புதுசா போடுற வசதி இருக்கு. இந்தத் தரையில் பயன்படுத்தும் ஃபர்னிச்சர்களை, தரையோடு இழுத்தா கீறல் விழும். அதனால, தூக்கிதான் நகர்த்தணும்.

விலை: ஒரு சதுர அடி

இன்டீரியர்..! - 6

75 முதல் 120 வரை.

வினைல் ஃப்ளோரிங் ஷீட்: வீட்டைவிட... ஆபீஸ், கடை, குறிப்பா பைக் மற்றும் கார் ஷோரூம்களில், டிஸ்ப்ளே வண்டிகளின் டயர் தேயக்கூடாதுன்னு, இதை ஒட்டியிருப்பாங்க. வீட்டுக்கு யூஸ் பண்ணணும்னா ஏ.சி ரூமுக்கு ஓ.கே. ஏன்னா, இது ரொம்ப ஹீட்.

விலை: ஒரு சதுர அடி

இன்டீரியர்..! - 6

55 முதல் 300 வரை.

ஆத்தங்குடி டைல்ஸ்: ஆத்தங்குடி எனும் ஊரில் உள்ள களிமண்ணால் செய்யப்படும் சுடுமண் டைல்ஸ் இது. இதுவும் மார்பிள் போலவே குளிர்ச்சியானது. ஆனா, இதோட உறுதித்தன்மை குறைவு.

விலை: ஒரு சதுர அடி

இன்டீரியர்..! - 6

30 முதல் 65 வரை.

இன்டீரியர்..! - 6

கிளாஸ் ஃப்ளோரிங்: இப்போதைய ஃப்ளோரிங்  டிரெண்ட், கிளாஸ் மொசைக் டைல்ஸ்தான். இதோட ப்ளஸ் பாயின்ட், கலர்ஸ். மாடுலர் கிச்சன் கலர்களுக்கு ஏத்த மாதிரி, டைல்ஸ்ல கலர்ஸ் இருக்காது. ஆனா, கிளாஸ் டைல்ஸ்ல எல்லா கலர்ஸும் கிடைக்கும். இது மட்டும் இல்லாம ஹால் முதல் ஸ்விம்மிங்பூல் வரை எதுக்கு வேணாலும், எப்படி வேணாலும் கிரியேட்டிவா டிசைன் பண்ணிக்க முடியும். இதுக்கு பெருசா பராமரிப்பு தேவையில்லை. மாப் பண்ணா போதும். மண் இல்லாம பாத்துக்கணும். இல்லைன்னா மண் பட்டு ஸ்க்ராட்ச் ஆகும். அப்புறம் ஹெவியான பொருளை இதுக்கு மேல போட்டா உடைய வாய்ப்பு இருக்கு.

விலை: ஒரு சதுர அடி

இன்டீரியர்..! - 6

60 முதல் 2000 வரை.''

இப்போ சொல்லுங்க... உங்க வீட்டுல எந்த ஃப்ளோரிங்..?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism