Published:Updated:

இன்டீரியர்..! - 7

உங்கள் வீட்டுக்கு நீங்களே டிசைனர்!கைகொடுக்கும் புதிய ஆப்ஸ்இந்துலேகா.சி

ங்கள் வீட்டுக்கு பெயின்ட்டில் இருந்து ஃபர்னிச்சர் வரை நீங்களே அலசி ஆராய்ந்து டிசைன் செய்தால், எப்படி இருக்கும்?! ‘ஆனா, நான்தான் இன்டீரியர் டிசைனிங் படிக்கலையே?’ என்கிறீர்களா? இன்டீரியர் டிசைனரின் உதவி இல்லாமல் உங்கள் வீட்டு இன்டீரியரை நீங்கள் பார்த்து ரசித்து முடிவெடுக்க உதவிக்கு வந்துவிட்டன, புதுப் புது ஆப்ஸ்கள். இன்டீரியர் டிசைன்களுக்கான இந்த பிரத்யேக ஆப்ஸ்களை உங்கள் மொபைலிலோ, கம்ப்யூட்டரிலோ டவுன்லோடு செய்துகொண்டால்... உங்கள் வீட்டுக்கு நீங்களே டிசைனர்!

இன்டீரியர்..! - 7

சரி, மார்க்கெட்டில் இருக்கும் இன்டீரியர் டிசைனுக்கான ஆப்ஸ்களை ஒரு வலம் வரலாமா?! 

ஹோம் ஸ்டைல் இன்டீரியர் டிசைன்

இந்த ஆப்ஸ்-ல் நீங்களே 3டி இன்டீரியர் டிசைனிங் செய்யலாம். இதை இன்ஸ்டால் செய்து, ஓபன் செய்தால், கேட்டலாக், கன்சீலர், ஸ்டைல், ரியல் ஸ்கேல் என்று பல ஆப்ஷன்கள் இருக்கும். உதாரணத்துக்கு, உங்கள் வீட்டின் ஏதாவது ஓர் அறையை உங்கள் மொபைலில் போட்டோ எடுத்து, அந்த அறையின் அளவை ‘ரியல் ஸ்கேல்’ ஆப்ஷன் மூலமாக போட்டோவில் செட் செய்ய வேண்டும். பிறகு, ஸ்டைல் ஆப்ஷனில் இருக்கும் ‘வால்’ (சுவர்) ஆப்ஷனில், அறைக்கு எந்த நிறத்தில் பெயின்ட் அடிக்கலாம் என்பதையும், ‘ஃப்ளோர்’ ஆப்ஷனில் அறையின் தரையை டைல்ஸ், வுட்டன், கிரா னைட் என்று விரும்பும் விதத்திலும் டிசைன் செய்யலாம்.

அதேபோல, கேட்ட லாக் ஆப்ஷனில் இருக்கும் கேட்டகிரி ஆப்ஷனில், ‘லிவிங் ரூம் ஆக்ஸசரி’-களைத் தேர்வு செய்தால், அனைத்து பிராண்ட் சோபாக்களும் வரும். அதில் உங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்து, எங்கு வேண்டுமோ அங்கு பொருத்திக் கொள்ளலாம். இன்னும் ஜன்னலுக்குத் திரைச் சீலைகள், டீபாயில் வைக்க பூந்தொட்டிகள், அலங்கார விளக்குகள் என்று பலவிதமான ஆக்ஸசரிகள் இருக்கும். அவற்றில் பிடித்ததைத் தேர்வு செய்து, உங்கள் வீட்டின் ஹாலை, அறைகளை இன்டீரியர் டிசைன் செய்து ட்ரையல் பார்க்க, இந்த ஆப்ஸை பயன்படுத்தலாம்.

மை ட்ரீம் ஹோம் 

இந்த ஆப்ஸில் வரவேற்பறையில் இருந்து சமையலறை, டைனிங், பாத்ரூம் என்று வீட்டின் அனைத்து ஏரியாவுக்குமான இன்டீரியர் டிசைனிங்குக்கான மாடல்கள், அதாவது புகைப்படங்கள் எக்கச்சக்கமாக இருக்கும். அதை முன் மாதிரியாக வைத்து, வீடு மட்டுமல்ல, அலுவலகத்தையும் டிசைன் செய்துகொள்ளலாம்.

இன்டீரியர்..! - 7

3டி இன்டீரியர் ரூம் டிசைன்

இதில் டிசைன் செய்ய கொஞ்சம் டெக்னிகல் அறிவு தேவை என்பதால், இன்டீரியர் டிசைனர் களுக்கே சிநேகமான ஆப்ஸ். இதில் அறையின் நான்கு சுவர்களிலும் டிசைன் செய்யலாம், சுவருக்கு பெயின்ட் பண்ணலாம், சீலிங், ஜன்னல் டிசைன் பண்ணலாம், அறையின் நுழைவுவாயில், அலங்கார வால் பேப்பர்ஸ், டெக்ஸ்சர் என்று, கிரியேட்டிவிட்டி உள்ள டிசைனர்களுக்கு நல்ல தீனி போடும்.

லேட்டஸ்ட் ஃபர்னிச்சர் டிசைன்ஸ்

ஹால், ஸ்டடி ரூம், டைனிங் என்று ஒவ்வொரு அறைக்கும் ஏற்ற ஃபர்னிச்சர்கள் விதவித மாக இங்கு உள்ளன. உங்கள் வீட்டுக்கான ஃபர்னிச்சர்களை வாங்குவதற்கு முன், இந்த ஆப்ஸை போனில் டவுன்லோடு செய்து ஒரு வலம் வாருங்கள். ரசனையான ஐடியா கிடைக்கும்.

லாபிசிடா டிசைன் இன் ஸ்டோன்

மார்பிள், கிரானைட் போல, பல நாடுகளைச் சேர்ந்த ஸ்டோன்கள் இங்கு இருக்கும். `அடோப் போட்டோ ஷாப்'பில் இருக்கும் கலர் ஸ்வாட்சஸ் போல, இதில் ஸ்டோன் ஸ்வாட்சஸ் இருக்கும். அதாவது ஸ்டோனின் பெயர், அந்த எந்த நாட்டினுடையது, என்ன அளவில் இருக்கும் போன்ற எல்லா விவரங்களும் இதில் உண்டு. பிடித்திருந்தால், ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.

இன்டீரியர்..! - 7

பேபி ரூம் டிசைன்

குழந்தைகளுக்கான அறையை அலங்காரம் செய்வதற்கு பல ஐடியாக்கள் இங்குண்டு. பெண் குழந்தை, ஆண் குழந்தை,  ட்வின்ஸ் என்று தனித்தனி டிசைன்கள் தந்திருப்பது இதன் சிறப்பு. அத்துடன், சின்ன இடத்தில் செய்யக்கூடிய கான்சப்ட் டிசைனிங், குழந்தைகளுக்கான கட்டில், ஜன்னல் அலங்காரம், திரைச்சீலை, விளக்குகள் என, உங்கள் வீட்டு வாண்டுகளுக்கான அறையை அழகுபடுத்த, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவை தவிர, கிச்சனுக்கான இன்டீரியர், மாடர்ன் இன்டீரியர், தோட்டத்துக்கான டிசைன்ஸ், நீச்சல் குளத்துக்கு டிசைன்ஸ் என்று நிறைய ஆப்ஸ் கொட்டிக் கிடக்கின்றன. ‘கூகுள் பிளே’-ல் ஆப்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்து, ‘சர்ச் பார்’-ல் இன்டீரியர் டிசைன் என்று டைப் செய்து, நிமிடத்தில் நீங்களும் ஆகலாம் இன்டீரியர் டிசைனர்!