Published:Updated:

இன்டீரியர்..! - 8

கஸ்டமைஸ்டு டிசைனிங்... அழகு ப்ளஸ் ஆயுள்!இந்துலேகா.சி, படம்: இரா.யோகேஷ்வரன்

இன்டீரியர்..! - 8

கஸ்டமைஸ்டு டிசைனிங்... அழகு ப்ளஸ் ஆயுள்!இந்துலேகா.சி, படம்: இரா.யோகேஷ்வரன்

Published:Updated:

பொதுவா இன்டீரியர் டிசைனர்ஸ், சோபா, கட்டில், வார்ட்ரோப் உள்ளிட்ட ஃபர்னிச்சர்களை எல்லாம், நம்ம வீட்டுப் பெயின்ட்டிங்குக்குப் பொருத்தமானதாவும், நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரியும் செட் செய்து கொடுப்பாங்க. ஆனா, இதையெல்லாம் கஸ்டமைஸ்டா டிசைன் பண்ணித்தர்றாங்க, சென்னையில் உள்ள 'யுனைடெட் இன்டீரியர் டிசைனர்’ நிறுவனத்தோட நிர்வாகி வனிதா ராஜ்குமார்.

இன்டீரியர்..! - 8

''வீட்டைக் கட்டி முடிச்சதுக்கு அப்புறம் இன்டீரியர் டிசைனிங் வேலையை ஆரம்பிக்கறதுக்குப் பதிலா, வீட்டோட கட்டுமான வேலை 75 சதவிகிதம் முடியுற சமயத்திலேயே இன்டீரியர் டிசைனிங் வேலையை ஆரம்பிச்சிட்டா... வேலையும் திருப்தியா முடியும், செலவையும் குறைக்க முடியும்!'' என்று சொல்லும் வனிதா, ஒரு சிவில் இன்ஜினீயர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'உங்க ஸ்டேட்மென்ட்டை கொஞ்சம் விளக்க முடியுமா..?'' என்றோம்.

'உதாரணமா, கிச்சன்ல கப்போர்ட், சிம்னி எல்லாம் செட் செய்யச் சொல்லி வரும் கிளையன்ட்டோட வீட்டுக்குப் போய் பார்த்தா, வீடு கட்டும்போதே கிச்சன்ல கிரானைட் மேடை வெச்சிருப்பாங்க. அப்படி இருக்கும்போது, என்னால அவங்களுக்கு வசதியான கப்போர்ட் டிசைனிங் செஞ்சு தர முடியாது. ஏன்னா, கிரானைட் பதிக்காத கிச்சனா இருந்தா, பிளக் பாயின்ட், சிம்னி, சிலிண்டர் வைக்கும் இடம்னு இதையெல்லாம் வெளிய தெரியாத அளவுக்கு, அதேசமயத்துல கிளையன்ட் சுலபமா கையாளும் விதத்தில் டிசைன் செய்து கொடுக்க முடியும். இதுவே கிரானைட் பதிச்ச கிச்சன்ல, மேடை, பிளக் பாயின்ட்னு ஏற்கெனவே இருக்கிற செட்டிங்ஸுக்கு ஏத்த மாதிரி கிச்சனை டிசைன் செய்யும்போது, வேலை சிரமமாகுறதோட அதுக்கான செலவும் கூடுதலா ஆகும்!'' எனும் வனிதா, தந்த டிப்ஸ்கள் இதோ...

இன்டீரியர்..! - 8

• வீட்டுக்கான ஃபர்னிச்சர்களை ரெடிமேடா கடையில் வாங்குறதைவிட, ஃபர்னிச்சர் செய்யுற இடத்துல வாங்குறது நல்ல சாய்ஸ். ஏன்னா, கடையில உங்க வீட்டுக்கு செட் ஆகும் அளவுல, உங்களுக்குப் புடிச்ச டிசைன்ல, உங்க பட்ஜெட்டுக்குள்ள ஃபர்னிச்சர்கள் அமையாம போகலாம். செய்யுற இடத்துல அளவு, டிசைன், விலைனு எல்லாத்தையும் நாமே முடிவு செய்து ஆர்டர் கொடுக்கலாம்.

• குறிப்பா, கட்டில்கள் உங்க அறையின் அளவோடும் அறையோடும் பொருந்திப் போறது சிரமம். ஆனா, மர வேலைப்பாடு செய்யுமிடத்தில் உங்க பெட் ரூமின் அளவுக்கு ஏற்ற நீள, அகலம் மட்டுமில்லாம, வயதானவர்கள், குழந்தைகளுக்கு தேவைப்படும் உயரத்திலும் செய்து வாங்கிக்கலாம். இப்போதைய   டிரெண்ட், தரையோடு தரையா இருக்கும் ஒன்றரை அடி உயரத்தினாலான ஃப்ளாட் கட்டில்தான். இது பீச் ஹவுஸுக்கான பெஸ்ட் சாய்ஸ்.

இன்டீரியர்..! - 8

• வார்ட்ரோப்பை பொறுத்தவரை வீட்டுக் கட்டுமானப் பணி முடிந்ததும் செய்தா, நீங்க பயன்படுத்தியிருக்கும் கடப்பாக்கல் மற்றும் சிமென்ட் ஷெல்ஃப்களுக்கு வெறும் கதவு மட்டுமே பொருத்த முடியும். லாக்கர் வைக்க முடியாது. இதுவே கட்டுமானப் பணி நடந்துட்டு இருக்கும் சமயத்திலேயே இடத்துக்கு ஏற்ற மாதிரி மர ஷெல்ஃப்கள், அதனுள்ளே சீக்ரெட் லாக்கர்கள் மற்றும் இடத்தை மிச்சப்படுத்தும் வகையில் கார்னர் ஷெல்ஃப் போன்றவற்றை டிசைனரால் வசதியா டிசைன் செய்ய முடியும்.

• தாத்தா, பாட்டி காலத்து மரச்சாமான்களை குடோனில் போடாம, உங்க புது வீட்டுக்கு ஏத்த மாதிரி தயார் செய்யலாம். அதுக்கு, அந்த மரச்சாமான்களை பாலிஷ் பண்றதோட, அதன் தரம் மாறாம அதே சமயம் ஒரு மாடர்ன் லுக்குடன் செய்து தரக்கூடிய ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் கொடுத்து டிசைன் செய்து வாங்கலாம்.

• இன்டீரியர் டிசைனிங்கைப் பொறுத்தவரை மொத்தமா ஒரே டிசைனரிடம் பொறுப்பை ஒப்படைப்பதை விட, பெயின்ட்டிங், ஃபர்னிச்சர், வீட்டு அலங்காரம்னு அததற்கான ஸ்பெஷலிஸ்ட்டுகளை தேடிப்பிடிச்சு வேலையை ஒப்படைச்சா, அழகோட அந்த வேலைப் பாடுகளுக்கு ஆயுளும் கிடைக்கும்!''

செலவு எவ்வளவு..?

வார்ட்ரோப் செய்ய மரத்தின் தரத்தைப் பொறுத்து சதுர அடிக்கு ரூபாய் 1,150 முதல் 3,500-க்கும் மேல் தொகை மாறுபடும். கிச்சனுக்கான மர வேலைப்பாடுகளுக்கு குறைந்தபட்சம் சதுர அடிக்கு ரூபாய் 1,200 முதல் செலவாகும். கட்டிலுக்கு குறைந்தபட்ச தொகையே 25,000 தேவைப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism