Published:Updated:

ஃபேஷன் ஸ்டுடியோ!- 8

புடவை ஒன்று... ஸ்டைல்கள் நான்கு!இந்துலேகா.சி, படங்கள்: எம்.உசேன்

ஃபேஷன் ஸ்டுடியோ!- 8

புடவை ஒன்று... ஸ்டைல்கள் நான்கு!இந்துலேகா.சி, படங்கள்: எம்.உசேன்

Published:Updated:

தை மாசம் பொறந்தாச்சு. மணப்பெண்கள் எல்லாம் முகூர்த்தத்துக்கு ரெடி ஆயிட்டு இருப்பாங்க. அதனால, திருமண ஸ்பெஷல் ஆடைகளை வடிவமைக்கும், சென்னை, அண்ணா நகரில் உள்ள 'அவந்திகா டிசைன் ஸ்டுடியோ’ நிறுவனர் பிரவீனா பிரபு, இந்த இதழ் 'ஃபேஷன் ஸ்டுடியோ’வில் உங்களோட பேசறார்...

'நான் ஒரு ஆர்க்கிடெக்ட். அந்த ஏரியா கொஞ்சம் டிரையா இருக்கிறதா உணர்ந்ததால, கலர்ஃபுல் ஃபீல்டான ஃபேஷன் டிசைனிங் ஏரியாவுக்கு வந்துட்டேன்!' எனும் பிரவீனா, 'அவந்திகா டிசைன் ஸ்டுடியோ’வை ஐந்து வருஷத்துக்கு முன்ன தன் மகளின் பெயரில் ஆரம்பிச்சிருக்காங்க.

ஃபேஷன் ஸ்டுடியோ!- 8

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அவந்திகாங்கிற பேருக்கு, இளவரசினு அர்த்தம். என் னோட ஸ்டுடியோவுல டிசைன் பண்ணிக்கிற ஒவ்வொரு கஸ்டமருமே, இளவரசி லுக்ல கிராண்டா இருக்கணும்!'' எனும் பிரவீனா, தான் புதுசா கண்டுபிடிச்சுருக்கும் 'ஃபோர் இன் ஒன் டைப்’ புடவையைப் பற்றிச் சொன்னாங்க!

"இந்த ஃபோர் இன் ஒன் புடவையில் ரெண்டு வகை இருக்கு. முதல் வகையில், ரெண்டு பீஸ் மெட்டீரியல்கள் இருக்கும். இதை வைத்து நான்கு விதமா புடவை உடுத்திக்கலாம். ரெண்டாவது வகையில், மூன்று பீஸ் மெட்டீரியல்கள் இருக்கும். இதையும் நான்கு விதமா உடுத்திக்கலாம்.

இப்ப, இந்த ரெண்டாவது டைப் 'ஃபோர் இன் ஒன்’ புடவையை எப்படி உடுத்திக்கிறதுனு பார்க்கலாமா...

இந்தப் புடவையில், ஒரு மஞ்சள் நிற நெட் கோட்டா டிசைனர் மெட்டீரியல், ஸீ க்ரீன் சிஃபான் மெட்டீரியல் (உள் பக்கம் மெரூன் கலர் நெட் கோட்டா மெட்டீரியல் அட்டாச் செய்யப்பட்டது), மற்றும் ஸீ க்ரீன் நெட் கோட்டா மெட்டீரியல்னு, மூணு பீஸ் மெட்டீரியல்கள் இருக்கும்.

ஃபேஷன் ஸ்டுடியோ!- 8

முதல் விதம்!

1. பொம்மை உடுத்தியிருக்கும் 'டம்மி டக்’ இன்ஸ்கர்ட் (உள் பாவாடை), டிசைனர் புடவைகளுக்கு ஏற்றது. இது தொப்பையையும் குறைத்துக் காட்டும்.

2. 2A. ஒரிஜினல் குந்தன் கற்கள் மற்றும் முத்துக்களால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ரா சில்க் பார்டர் அட்டாச் செய்யப்பட்டுள்ள, மஞ்சள் நிற நெட் கோட்டா மெட்டீரியலை புடவை கட்டுவது போல இடுப்பைச் சுற்றி எடுக்கணும்.

3, 3A. புடவைக்கு வைப்பதைப் போல ப்ளீட்ஸ் வைக்கணும். வைத்த ப்ளீட்ஸை இடுப்பில் செருகணும்.

4, 4A. அடுத்ததா, ஸீ க்ரீன் சிஃபான் மெட்டீரியலை எடுத்து, புடவை முந்தானைக்கு ப்ளீட்ஸ் வைக்கணும்.

5, 6. ப்ளீட்ஸை மாராப்பா போட்டு, மறுமுனையை தாவணி கட்டுறது மாதிரி முன்பக்கம் இழுத்து செருகணும்.

இரண்டாவது விதம்!

இதே மஞ்சள் நிற பாட்டத்துக்கு தோதா, மேலே போட்ட ஸீ க்ரீன் மாராப்பை உள் பக்கமா திருப்பினா, மெரூன் நிற புடவைக்கு மாறலாம். இதன் மெட்டீரியல் நெட் கோட்டா. உள்பக்க மெரூன் மெட்டீரியல் வெளிப்பக்கம் தெரியாம இருக்க, வெளிப்பக்கம் திக்கான சிஃபான் மெட்டீரியலை அட்டாச் செய்திருக்கேன். அதேபோல, மெரூன் கலர் நெட் கோட்டா மெட்டீரியல் வெளிப்பக்கம் தெரிவது போல கட்டும்போது, உள்பக்க ஸீ க்ரீன் சிஃபான் மெட்டீரியல் டிரான்ஸ்பரன்டா தெரியும். அதனால் அதற்கு மேட்ச் செய்யும் விதமா இதற்கு ஸீ க்ரீன் ரா சில்க் பார்டரை அட்டாச் செய்திருக்கேன்.

ஃபேஷன் ஸ்டுடியோ!- 8

மூன்றாவது விதம்!

இது ஸீ க்ரீன் நெட் கோட்டா மெட்டீரியல். இதுக்கு ரெட் கலர் ரா சில்க் பார்டரும், பனாரஸி துணியை முந்தியிலும் அட்டாச் செய்திருக்கேன்.

நான்காவது விதம்!

இதில் கீழே உள்ள மஞ்சள் நிற மெட்டீரியலை மேல் முந்தானைக்கும், மேலே உள்ள ஸீ க்ரீன் சிஃபான் மெட்டீரியலை (உள்பக்கம் மெரூன் கலர் நெட் கோட்டா அட்டாச் செய்யப்பட்டது) பாட்டமாவும் பயன்படுத்தியிருக்கேன். இதை இப்படி லெஹங்கா டைப்பில் கட்டிக்கலாம்.

இந்த கான்செப்ட்டை கலர் மாற்றி, மெட்டீரியல் மாற்றி உடுத்துவது மட்டுமில்லாம தமிழ் ஸ்டைல் புடவை, நார்த் இண்டியன் ஸ்டைல் புடவை, சுடிதாருக்கான கிராண்ட் துப்பட்டா, லெஹங்கா, தாவணினு பலவிதமா உடுத்திக்கலாம்!''

ஒண்ணு இல்ல... நாலு!

மாடல்: ஸ்ரீனிகா

மேக்கப் உதவி: நேச்சுரல்ஸ் பியூட்டி சலூன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism