Published:Updated:

மாப்பிள்ளை முறுக்கு... வேஷ்டியில் இருக்கு!

படம்: அசோக் அர்ஸ்

டுப்பில் நிற்காமல் நழுவி நழுவி கொடுக்கும் அவஸ்தையால் தான் ஆண்கள் பலர் வேஷ்டியைத் துறந்தனர். அதில் சிலருக்கு வேஷ்டி மிகவும் பிடித்தமாகவும் இருக்கத்தான் செய்கிறது. மாப்பிள்ளையாக மணமேடையில் நிற்கும் சமயத்தில் கட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில், நழுவும் வேஷ்டியை சரிசெய்தபடியே போட்டோவுக்கு போஸ் கொடுத்த மாப்பிள்ளைகளின் வரலாற்றை நாம் அறிவோம்!

மாப்பிள்ளை முறுக்கு... வேஷ்டியில் இருக்கு!

‘நழுவாது, விலகாது... வந்து விட்டது வெல்க்ரோ வேஷ்டிகள்!’ என்பது, ஆண்களுக்கான, குறிப்பாக மாப்பிள்ளைகளுக்கான நற்செய்தி! வேஷ்டியின் இடுப்புப் பகுதியில் இருக்கும் வெல்க்ரோவை இழுத்து ஒட்டிவிட்டால், ஆடினாலும் அசையாமலிருக்கும் வேஷ்டி. மாப்பிள்ளை மட்டுமில்லாமல், கல்யாணத்துக்குச் செல்லும் ‘வருங்கால மாப்பிள்ளை’களும் சந்தோஷமாக ஓட்டுப்போடும் இந்த ‘ஒட்டிக்கோ கட்டிக்கோ’ ஸ்டைல் வெல்க்ரோ வேஷ்டிகள்தான் மார்க் கெட்டில் இப்போது ஹிட்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வேஷ்டியின் பார்டர்கள் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. பார்டரின் நிறத்துக்கேற்ப சட்டை மற்றும் அங்கவஸ்திரத்தை தேர்வு செய்துகொள்ளலாம். பியூர் காட்டன், சில்க், காட்டன் வித் சில்க் என்று மெட்டீரியல்களிலும் வெரைட்டி உண்டு.

பார்த்து வாங்கிக்கோங்க... கட்டிக்கோங்க..!

- வே.கிருஷ்ணவேணி