அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்தாலும் சரி... இன்னமும் அதே அய்யம்பேட்டையில் வசித்தாலும் சரி..! உலகமகா கோடீஸ்வரரின் மனைவியாக இருந்தாலும் சரி... உள்ளூர் பெட்டிக் கடை முதலாளியின் மனைவியாக இருந்தாலும் சரி... அத்தனை பேருடைய மனதிலும் மாறாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம்... பட்டுப் புடவை!

அதிலும் கல்யாணம், காட்சி என்றால், ஒரு பட்டுப் புடவை எடுக்காமல் நம்மவர்கள் ஓய்வதில்லை.

அதற்கென்ன காரணம்...? சைனா சில்க், பனாரஸ் சில்க், மைசூர் சில்க் என்று விதம்விதமாக... ரகம்ரகமாக பட்டுப் புடவைகள் கிடைத்தாலும், நம்மூர் பட்டுக்கு மங்கலகரமான ஒரு முகம் இருப்பதுதான்!

ஆம், முழுக்க மங்கலம் பொங்க வைக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம்... இப்படி பல ஊர்களின் பெயர்களில் தமிழகத்தில் புகழ்பெற்றிருக்கும் பட்டு! அதனால்தான் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி இங்கே வந்தால்கூட, பட்டுப் புடவை எடுக்காமல் திரும்புவதில்லை. அப்படிப்பட்ட மங்கலப் பட்டுகள் இங்கே அணிவகுக்கின்றன... உங்கள் மணமகள்களுக்காக..!

தொகுப்பு: வே.கிருஷ்ணவேணி, க.முகமது அபுதாஹீர் படங்கள்: எம்.உசேன், பா.காளிமுத்து