திருமணம் என்றாலே... பெண்ணுக்கு முன்பே வந்து நின்றுவிடும் பொன்! ஆம், தங்க நகை வாங்குவதுதானே பிரதான செலவு! ஒரு கிராம் தங்கம் 3,000 ரூபாயை நெருங்கிவிட்டது. இந்த அளவுக்கு விலை கொடுத்து வாங்கும் தங்கம், அதற்குத் தகுதியானதாக இருக்க வேண்டாமோ?!

அந்த தகுதியைக் கண்டறிந்து, கல்யாண நகைகளை கடை கடையாக ஏறி இறங்கி வாங்க, இங்கே உதவுகிறார்.... ஈரோட்டைச் சேர்ந்த தங்க நகை மதிப்பீட்டாளர் சாமிநாதன்.

''பிரைஸ் டேக், ஹால்மார்க், கேடிஎம், 916 என்று நகை வியாபாரத்தில் இன்று புழங்கும் வார்த்தைகள் அதிகம். இதையெல்லாம் பார்த்து மயங்கிவிடாமல், அனைத்தையும் என்னவென்று தெரிந்து கொண்டு, தெளிவு பெற்று நகைகள் வாங்கும்போது... நீங்கள்தான் சூப்பர்!'' என்று கூறும் சாமிநாதன் சொல்வதைக் குறித்துக் கொள்ளுங்கள்!

சேதாரம் தவிருங்கள்!

''கேரளா மாடல், பெங்காலி மாடல், வார்ப்பு மாடல் என்று நகைகளில் பல வகைகள் உண்டு. தேவை, பயன்பாட்டைப் பொறுத்து நகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக, வீட்டில் எப்போதும் அணிந்திருக்கும் வளையல், கம்மல், செயின் போன்றவற்றை... அதிக சேதாரம் வைக்கும் 'பெங்காலி’ மாடல் நகைகள், சீக்கிரம் நெளிய வாய்ப்புள்ள கேரளா மாடல் நகைகள் என்று செய்வது, நஷ்டத்தையே ஏற்படுத்தும். பதிலாக, குறைந்த சேதாரத்தில், அதிக டிசைன் இல்லாத வார்ப்பு நகைகளாக வாங்கிக் கொள்ளலாம். வார்ப்பு நகைகளில் அதிக பத்தவைப்புகள் இருக்காது. எப்போதாவது விசேஷங்களுக்கு அணிய நேரிடும் ஆரம், நெக்லஸ் போன்ற நகைகள் என்றால், அதன் அழகான, நுணுக்கமான வேலைப்பாடுகளுக்கு அதிக சேதாரம் கொடுத்தே ஆக வேண்டும்.

கல் நகைகள் வேண்டாம்!

கல் வைத்த நகைகள் வாங்கினால், அதில் உள்ள தங்கத்தைக் காட்டிலும் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். காரணம், அந்த நகையில் உள்ள கற்களின் எடைக்கும் தங்கத்தின் விலைதான் கொடுக்க வேண்டிஇருக்கும். அதனால் முடிந்தவரை கல் வைத்த நகைகளைத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை கல் வைத்த நகைகள் வாங்கித்தான் ஆக வேண்டும் எனில், அதில் உள்ள கற்களின் எடையை கடையில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அதிக எடையில்லாத சிறிய கற்கள் பதிக்கப்பட்ட நகைகளாகத் தேர்ந்தெடுப்பது, காலத்துக்கும் நல்லது.

சேதாரம்... சரியா?!

நகை வாங்கும்போது, அன்றைய விலையைப் பார்ப்பதற்கு முன், சேதாரப் பட்டியலை கவனிப்பது மிகமிக முக்கியம். ஏனெனில், முன்பெல்லாம் தங்கத்தின் தரத்தைக் குறைத்து, விலையை அதிகமாக வைத்து விற்பனை செய்வது நடந்தது. தற்போது... 916, கேடிஎம் என்றெல்லாம் மக்கள் விழிப்பு உணர்வுடன் இருப்பதால்..., நகைக்கடைகள் தங்களின் லாபத்தை, சேதாரத்திலிருந்துதான் எடுக்கிறார்கள். எனவே, ஒரு கடையில் நகை வாங்குவதற்கு முன், பல கடைகளிலும் சேதாரம் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பதை கேட்டறியுங்கள். நியாயமான சேதாரம் வாங்கும் கடையை 'டிக்’ செய்யுங்கள்.

தீர ஆராயுங்கள் தரம்!

நகைகளின் தரத்தில் மக்கள் ஏமாந்து விடாமல் இருக்க, இந்திய அரசின் 'பிஐஎஸ்' (Bureau of Indian Standards) வழங்கும் தர உறுதிச்சான்றுதான்... ஹால்மார்க் முத்திரை! நீங்கள் வாங்கும் 'ஹால்மார்க்’ நகைகளில் ஐந்து விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். முதலாவதாக, பிஐஎஸ் முக்கோண வடிவ லோகோ. இரண்டாவது, அந்த நகையில் தங்கத்தின் அளவு. உதாரணமாக, 916 என்றால், அதில் 91.6 சதவிகிதம் தங்கம் உள்ளது என்று அர்த்தம் (மீதி, நகை செய்வதற்காகச் சேர்க்கப்படும் உலோகம்). மூன்றாவது, அந்த நகைக்கு தரச்சான்று அளித்த ஹால்மார்க்கிங் சென்டரின் முத்திரை (இந்த சென்டர்களின் பட்டியலும் முத்திரையும் பிஐஎஸ் இணைய பக்கத்தில் உள்ளன). நான்காவது, நகைக்கடையின் முத்திரை. ஐந்தாவது, அந்த நகை எந்த ஆண்டு தரச்சான்று பெற்றது என்பதைக் குறிப்பிடும் முத்திரை.

'கேடிஎம்' (KDM) என்பது, நகையின் தரத்தைக் குறிப்பது அல்ல. நகைகள் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு துகள் 'கேட்மியம்' (Cadmium). இது ஒருவகைப் பொடி. இதைப் பயன்படுத்தி செய்யப்படும் நகைகளில் 'கேடிஎம்' என்கிற குறியீடு இருக்கும். இந்தக் குறியீடு உள்ள நகைகளை அழித்து புது நகைகளாக மாற்றும்போது, கழிவு குறைவாக இருப்பதுடன், மீதமுள்ள தங்கம் அன்றைய விலைக்கே எடுத்துக் கொள்ளப்படும் என்பதுதான் இதன் சிறப்பம்சம். ஹால்மார்க் நகைகளில் 'கேடிஎம்' முத்திரை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மிகவும் பிரபலமாக இருக்கும் பிரைஸ் டேக்’ என்பது ஒரு விளம்பர யுக்திதான். இது புதிதான விஷயமும் அல்ல. பிரைஸ் டேக் இருப்பதாலேயே நகைக்கு போடப்பட்டுள்ள சேதாரம் சரியாக இருக்கும் என்று முடிவு செய்துவிடக் கூடாது. நீங்கள் வாங்க விரும்பும் நகைக்கான சேதாரம் சரியானதுதானா என்று ஒரு கடைக்கு நாலு கடை ஏறி இறங்கி உறுதிசெய்து கொள்ளுங்கள்'' என்று தெளிவாக புரியவைத்த சாமிநாதன்,

''இனி திருமண நகைகள் வாங்கச் செல்லும்போது, கடைக்காரரிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள உங்களிடம் கேள்விகள் அதிகம் இருக்கும்தானே..?!'' என்றார் சிரித்தபடியே!

- இரா.ரூபாவதி, வே.கிருஷ்ணவேனி

படங்கள்: எம்.உசேன், இ.ராஜவிபீஷிகா

மாடல்கள்: நிவேதிதா, சிந்து