மாங்காய், வாழைசீப்பு, மகாலெட்சுமி, பொட்டு, காசு, துளசி, அன்னாசி, வில்வகலை, கல்மாங்காய், சங்கு, விளக்கு, பன்னீர்செம்பு...

இதெல்லாம் என்ன?

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பரவலாக வழக்கத்தில் இருந்து வரும் 'சென்டிமென்ட்' சின்னமான தாலியின் வடிவங்கள். இவை மட்டுமல்ல, இன்னும் பலப்பல வடிவங்களில் இங்கே தாலி என்பது நீண்ட காலமாகவே வழக்கத்திலிருக்கிறது என்பதற்கு கல்வெட்டுக்கள், சிற்பங்கள் மற்றும் இலக்கியங்கள் என பல இடங்களில் சான்றுகள் இருக்கின்றன. 'திரு' என்கிற வார்த்தையால்தான் அந்தக் காலத்தில் எல்லாம் தாலியை அழைத்திருக்கிறார்கள். 'திருப்பூட்டுதல்' என்றுதான் திருமணத்தையே அழைத்திருக்கிறார்கள். தற்போதுகூட நாட்டுக்கோட்டை நகரத்தார் திருமணங்களில் தாலி கட்டும் நிகழ்வை இப்படி குறிப்பதை கவனித்தாலே, இது புரியும்!

'தமிழர் மரபில், தாய் தெய்வ வழிபாடுதான் முதலில் தொடங்கப்பட்டது' என்கிறது வரலாற்றுச் செய்தி. அந்த தாய் தெய்வத்தை உருவகப்படுத்துவதுதான் தாலி. இந்தத் தாலி உருவம்... திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள புடைப்புச் சிற்பங்களில் ஒன்பதடி உயர கற்களில் பொறிக்கப்பட்டு, தெய்வமாக வணங்கப்பட் டிருப்பதை உறுதிபடுத்தியுள்ளனர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். தாய் தெய்வ உருவம்தான், பின்னாளில் லெட்சுமி உருவம் பொறிக் கப்பட்ட தாலியாக மாற்றம் பெற்றுள்ளது!

இப்போதைய தாலியில் லெட்சுமி தவிர... விபூதிப்பட்டை, நாமம் போன்ற உருவங்களும் பொறிக்கப்படுகின்றன. குலதெய்வம் அடிப்படையில் இப்படிப்பட்ட தாலிகளை இங்கே அணிகிறார்கள். பெண் தெய்வங்களை குலதெய்வமாக கொண்டவர்களுக்கு... லெட்சுமி; சிவன் மற்றும் ஆண் தெய்வங்களை குலதெய்வமாக கொண்டவர்களுக்கு... விபூதிப்பட்டை; வைணவர்களுக்கு நாமம்... என தாலியை அணிகிறார்கள்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் அணிகிற தாலி, வடிவில் வேறு வகையானது. முழுக்க முழுக்க கம்பிகளால் நேர்த்தியான வடிவமைப் பில் உருவாக்கப்பட்டிருக்கும். கிறிஸ்தவர் களும் தாலி அணிகிறார்கள். கிட்டத்தட்ட இதய வடிவிலான உருவத்தில் அமைந் திருக்கும் தாலியில், சிலுவை பொறிக்கப் பட்டிருக்கும். இவைதான் இன்றைய நிலையில் வழக்கத்தில் இருக்கிற தாலிகள்.

''குறைந்தபட்சம் ஒரு கிராம் தொடங்கி... அதிகபட்சம் ஒரு சவரன் வரையிலும் தாலி செய்யப்படுகிறது. பெரும்பாலானோர் மூன்று அல்லது நான்கு கிராம் தாலிகளையே அணிகிறார்கள். தாலியுடன் சேர்த்து குண்டு, நாணல் ஆகியவையும் அணிவதும் வழக்கமாக இருக்கிறது. பிளெயினாகவும், அரைநெல்லிக்காய் வடிவிலும் குண்டுகள் இருக்கும். முறுக்கு, கட்டிங், பிளெயின் என்று மூன்று வகை நாணல்கள் இருக்கின்றன.

மாங்காய், வாழைசீப்பு, மகாலெட்சுமி, பொட்டு, காசு, துளசி, அன்னாசி, வில்வகலை, கல்மாங்காய், சங்கு, விளக்கு, பன்னீர்செம்பு... என்று விதவிதமான உருவங்களை செய்து அணிகிறார்கள். தாலி பவழம், தாலி மணி போன்றவற்றையும் சேர்த்து அணிகிறார்கள். மக்களின் ரசனையும் தேவையும் என்னவோ... அதையே செய்து கொடுக்கிறோம்'' என்கிறார்... சிதம்பரம் காசுக்கடை தெரு

சீதாலட்சுமி ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ஈ.எஸ்.மோகன்.

இப்போதெல்லாம் நகைக்கடையில் ரெடிமேடாகவே தாலி கிடைத்துவிடுகிறது. ஒரு காலத்தில் இந்தத் தாலிக்கென்று தனியாக ஒரு நிகழ்வே உண்டு! 'பொன் உருக்குதல்' என்கிற பெயரில் ஒரு சடங்காகவே அதை நடத்தியிருக்கிறார்கள். வளர்பிறை நல்லநாளில் குடும்பத்தின் வழக்கமான பொற்கொல்லரை வரவழைத்து... பழம், வெற்றிலை கொடுத்து மரியாதை செய்து, உறவினர்கள் கூடியிருக்க, தாலி செய்ய தங்கத்தை அவரிடம் கொடுப்பார்கள். அங்கேயே உருக்கி தாலிக்கு வேண்டிய தங்கத்தை எடுத்து, வேலையை ஆரம்பிப்பார். இப்போதும் இந்த வழக்கம் சில குடும்பங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. சிலர், நல்லநாள் பார்த்து வீட்டில் தங்கத்தை வைத்து பூஜை செய்துவிட்டு, அதன் பிறகு நகைக்கடைக்கு போய் தங்கத்தை கொடுத்து தாலி செய்யச் சொல்வதும் உண்டு.

பின்னே... ஆயிரங்காலத்துப் பயிராச்சே திருமணம்!

- கரு.முத்து