திருமணம் தொடர்பான சடங்குகள், நிச்சயதார்த்தத்திலேயே ஆரம்பமாகிவிடும். எல்லா நிகழ்வுகளிலுமே... இனத்துக்கு இனம் ஒவ்வொருவிதமான சடங்குகள் உண்டு. இவற்றில்... நிச்சயதார்த்தம், மெஹந்தி,

ஊஞ்சல், முகூர்த்தம், நலுங்கு/விளையாடல், கிரகப்பிரவேசம், வரவேற்பு ஆகிய இந்த ஏழு வைபவங்கள் முக்கிய இடங்களைப் பிடிக்கின்றன. இவற்றில் சிற்சில சடங்குகள், இனத்துக்கு இனம் வேறுபடும். இந்த ஏழுவிதமான சடங்குகளுக்காகவே, ஏழுவிதமான புடவைகளை எடுப்பதும், வழக்கத்தில் இருக்கிறது!

வானவில் போல வர்ணஜாலம் காட்டும் அந்தப் புடவைகளும்... அதற்கான தருணங்களும் அழகோ... அழகு!

உறவை உறுதி செய்யும் நிச்சயதார்த்தம்

(வர்ணஜாலம் புடவை)

திருமணத்தின் முதல் சடங்கு! மண மகளுக்கு பொன், புடவை, பழங்கள் என வரிசைத் தட்டுகள் வைத்து, ஊரறிய நிச்சயம் செய்து மண நாள் குறிக்கும் நிகழ்ச்சி. 'இனி எங்கள் மகளுக்கோ/மகனுக்கோ வரன்கள் பார்ப்பதற்கில்லை’ என இரு வீட்டாரும் ஊருக்கு அறிவிக்கும் வைபவமாகவும் கொள்ளலாம்!

கேலி, ஜாலியுடன் மெஹந்தி

(லினோ லைட் புடவை)

மருதாணி போடுவது... அந்தக் காலத்திலிருந்து தொடர்ந்த வழக்கம். தற்போது, வடநாட்டினரின் 'மெஹந்தி’ வைபவமும் இங்கே ஒட்டிக் கொண்டுவிட்டது. மணப்பெண்ணுடன் சேர்ந்து தோழிகளும், உறவுகளும் கைகளில் மெஹந்தி போட்டுக் கொண்டு... கிண்டலும், கேலியுமாக அந்தப் பொழுதை இனிமையாகக் கழிக்கிறார்கள். சந்தோஷத்தை எக்ஸ்டெண்ட் செய்வதால், கிராமப்புற திருமணங்களில்கூட 'மெஹந்தி’க்கு வெல்கம்!

ஊஞ்சல்/கன்னூஞ்சல்!

(நகாசு புடவை)

மாலை மாற்றிய பிறகு, மணமக்களை ஊஞ்சலில் அமர்த்தி, அதை ஆட்டியபடியே சுற்றி நின்று...

'ரத்ன ஊஞ்சலில் ஆடினாள்

பத்மாசுதனை பாடினாள்’ எனத் தொடங்கி,

'பாஸ்கரன் புகழ் பிரகாசமாய்

பரதேவதை உல்லாசமாய்...’ என்று நீளும் பாடலை பெண்கள் பாடுவார்கள். இப்போது சில திருமணங்களில் 'பாஸ்கரனு’க்குப் பதில் மணமகனின் பெயரும், 'பரதேவதை’க்குப் பதில் மணமகளின் பெயரும் சேர்த்துப் பாடுகிறார்கள். இதுவும் ரசிக்கவே வைக்கிறது!

டும் டும் டும் முகூர்த்தம்

(ரிவர்ஸிபிள் புடவை)

கெட்டிமேளம் முழங்க, மாங்கல்யம் கட்டும் கணம்... ஆனந்த வைபவம்.

'ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே'

எனத் தொடங்கும் பாடலை பாடி முடித்து,

'கௌரி கல்யாண வைபோகமே

லஷ்மி கல்யாண வைபோகமே’ என்கிற பாட்டையும் பாடி முகூர்த்தத்தை முடிப்பார்கள்!

நலுங்கு விளையாட்டு

(ஜடாவு கலம்காரி புடவை)

திருமணத்துக்குப் பிறகு நடைபெறும் இச்சடங்கில், மணமகளுக்கு நலுங்கு வைக்கும் பெண்கள், 'சம்பந்தி கேலி பாட்டு’ பாடுவது முன்பெல்லாம் வழக்கம்.

'சம்பந்தி சாப்பிடவே மாட்டாள் - எங்கள்

சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்

இட்டிலியில் 200

ஜாங்கிரியில் 300

மைசூர் பாகில் 400

தயிர் வடையில் 500

சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்...'

என்று நீளும் இந்தப் பாடலின் மெட்டும் வரிகளும்... கேட்கக் கேட்கச் சுகமாய் இருக்கும். கூடவே, நலுங்குப்பாடலும் உண்டு!

இதற்குப் பிறகு விளையாடல். இதற்கு தேவைப்படும் சாமான்கள் அனைத்தும், புதுப்புடவையும் தாய்மாமன் சீர்தான். மணமகளையும் மணமகனையும் கேலி செய்து ஒருவரோடொருவர் தேங்காய் உருட்டி விளையாடச் செய்து உறவினர்கள் மகிழ்வர்.

வாழ்த்தைப் பெற வரவேற்பு விருந்து

(டிசைனர் எம்ப்ராய்டரி புடவை)

திருமணம் முடிந்த மணமக்கள் உறவினர், நண்பர்கள் அனைவரின் வாழ்த்தையும் ஏற்க மேடையில் நின்றிருக்கும் இவ்வரவேற்பு நிகழ்ச்சியில், இப்பொழுது மெல்லிசைக் கச்சேரிகளும், இசைக்கருவி கச்சேரி களும்தான் அதிகம்.

புதுப்பெண்ணின் கிரகப்பிரவேசம்

(ஹம்ச தமயந்தி புடவை)

மணமகள் புதுப்புடவையுடன் முதன் முதலாக மணமகன் வீட்டில் காலடி எடுத்து வைக்கும் வைபவம், கிரகப்பிரவேசம். பையன் வீட்டார் ஆரத்தி எடுத்து மணமகளை வரவேற்க, அவள் பாத்திரத்தில் நிறைத்து வைத்திருக்கும் அரிசியை கால் விரலால் தட்டிவிட்டு, வலது கால் வைத்து உள்ளே நுழைவாள்.

சுபமங்களம் பிராப்திரஸ்து!

- இ.மாலா,

புடவைகள் உதவி: ஆரெம்கேவி, சென்னை

அசத்தும் பிரைடல் செவன்!

இந்த ஏழுவிதமான நிகழ்வுகளுக்கென பிரத்யேகமாக புடவைகளை வடிவமைத்திருக்கிறது ஆரெம்கேவி நிறுவனம். அதைப் பற்றி பேசும், அதன் நிர்வாக இயக்குநர் சிவக்குமார், ''ஆரெம்கேவி பலவிதமான புதுமைகளோடும், மாறுதல்களோடும் காலத்துக்கு ஏற்றாற்போல் மாற்றங்களை செய்து கொண்டிருக்கிறது. இதில் மிகமுக்கியமாக மற்றவர்களிடமிருந்து மாறுபடுவது... நம்நாட்டின் கலாசாரம், ஓவியம், நடனம் போன்ற கலைகளை இணைத்து, சேலைகளை மெருகூட்டிக் காண்பிப்பதுதான். ஒவ்வொரு வருடமும் விதம்விதமான டிசைன்களை வெளிக்கொணர்கிறோம். மணப்பெண்கள் அணிவதற்கென்றே தனித்தன்மையான ஏழு டிசைன்களை 'பிரைடல் செவன்' என்கிற பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். 50,000 கலர் புடவையையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதுவரை யாரும் பார்த்திரமுடியாத புதுமையான மற்றும் காண்பதற்கரிய வண்ணங்கள் அனைத்தையும் கலந்து, காஞ்சி பட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் சேலை இது!'' என்கிறார் பெருமையோடு!

வே.கிருஷ்ணவேணி