துணி துவைப்பது ஒரு கலை! இப்படிச் சொன்னால் 'அட போங்கப்பா... உங்களுக்கு வேற வேலை இல்லை’ என்று சிலர் பரிகசிக்கவும் கூடும். உண்மையில், ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கும் ஓர் உடையை, சிறு கறை தூக்கிப் போட வைத்துவிடும்; ஒரே துவையில் சாயம்போய் 'ஈ...’யெனப் பல்லிளிக்கும் புத்தாடை நம்மைக் கலங்கடித்துவிடும். துணிகளின் தன்மையும் வண்ணமும் பாழாகாமல் டிரைகிளீன் செய்யும் தொழிலை விரிவாகச் செய்தால், லாபம் சம்பாதிக்கலாம் என்பதை நிரூபித்திருக்கிறது 'லாண்டரி புராஜெக்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம். பல ஸ்டார் ஹோட்டல்களுக்கு இந்த நிறுவனம் டிரைகிளீனிங் செய்து தருகிறது. இதன் நிறுவனர் ஆர்.பாலசந்தர் துணிகளின் பராமரிப்பு பற்றிப் பேசுகிறார்.

''ஒரு நாளைக்கு 12,000 பீஸ் துணிகளை சலவை செய்கிறோம். முதல் வேலை, துணிகளை வகை பிரிப்பது; சலவைக்கு வரும் துணிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கும். காட்டன், எம்ப்ராய்டரி ஒர்க், சில்க்... இப்படி பல ரகங்களில் இருக்கும். எல்லாத் துணிகளையும் ஒன்றாக மெஷினில் போட்டு சலவை செய்ய முடியாது. மெஷின் வாஷ், ஹேண்ட் வாஷ், கறை நீக்குதல் என ஒவ்வொன்றையும் தனித்தனியாக, அதன் தன்மைக்கு ஏற்ப வாஷ் செய்ய வேண்டியிருக்கும். தனித்தனி டிடர்ஜென்ட் பயன்படுத்த வேண்டும். இந்திய தட்வெட்ப நிலையில் சட்டை காலரில் அழுக்கு அதிகமாகப் படியும். அதற்காகவே பிரத்யேகமாக இருக்கும் அழுக்கை நீக்கும் மெஷினில் ஸ்கிரப் செய்து நீக்குவோம். பிறகு டிரைகிளீன் செய்வோம்.

துவைத்த பிறகு, ஒவ்வோர் உடையின் கலரும் அப்படியே இருக்க வேண்டியது அவசியம். சில டிரைவாஷிங்கில் ஆடையின் வண்ணம் அப்படியே இருக்காது. வீட்டில் வாஷ் செய்யும்போதுகூட 'இப்படி பழுப்பு கலருக்கு மாறிடுச்சே’ எனப் புலம்ப நேரும். இதற்குக் காரணம், நாம் பயன்படுத்துகிற தண்ணீரும் கெமிக்கல்களும்தான். அதற்காகவே ஹார்டாக இருக்கும் நீரை சாஃப்ட்டாக மாற்றுவோம். அதனால், தண்ணீர் சலவைக்கு ஏற்றதாக மாறிவிடும். அதன் பிறகு துணிகளை மெஷின் வாஷ் அல்லது ஹேண்ட் வாஷில் டிரைகிளீன் செய்து டிரையரில் உலரவைத்து எடுப்போம். சில்க், உல்லன் மாதிரியான துணி வகைகளைத் துவைக்க றிணிஸிசி எனும் ஒரு கெமிக்கல் பயன்படுத்துகிறோம். இது, துணியின் தன்மையைப் பாதுகாத்து மிளிர வைக்கும்.

இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது அவசியம் என்றால், மாதம் ஒருமுறை டிரைகிளீன் செய்வதுதான் சிறந்தது. தினமும் செய்யக் கூடாது.

பட்டுப் புடவைகளை முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம். அதாவது, வருடத்துக்கு ஐந்து அல்லது ஆறு தடவை மட்டுமே பட்டுச் சேலைகளை உடுத்துவோம். அந்தச் சமயங்களில் மட்டும் டிரைகிளீன் செய்வது நல்லது. 'முதல் முறை அல்லது முதல் மூன்று முறை டிரைகிளீன் செய்தால் போதும்; இனி வீட்டிலேயே துவைத்துக்கொள்ளலாம்’ என சிலர் நினைப்பார்கள். ஒரிஜினல் பட்டுப் புடவைகளை எந்தக் காரணம் கொண்டும் நாமாக நீரில் போட்டுத் துவைக்கக் கூடாது. டிரைகிளீனிங் கொடுப்பதுதான் சிறந்தது. தொடர்ந்து பட்டுப் புடவைகளை உடுத்துபவர்கள் இதை நன்கு அறிவார்கள்.

நம்மை அறியாமல் ஆடைகளில் பலவகைக் கறைகள் படலாம். ரத்தக் கறை, ஆயில், மை, சாம்பார், குங்குமம் இப்படிப்பட்ட கறைகள் எளிதாக நம் ஆடைகளில் பட்டுவிடும். இந்தச் சமயங்களில் கறை மீது வெறும் தண்ணீரை மட்டும் விட்டு நிழலில் துணியை வைத்துவிடவேண்டும். அந்தக் கறை நன்றாக நீரில் ஊறினாலே போதும்... எங்களால் எளிதில் அதை நீக்கிவிட முடியும்.

கறையில் இரண்டு வகை... ஒன்று, செட்டான ஸ்டெயின் (கறை), மற்றொன்று, செட் ஆகாத ஸ்டெயின் (கறை). சிலர், துணிகளில் கறைபட்டால், எதையாவது போட்டு, துணியைக் கசக்கிப் பார்த்து விட்டு, வெயிலில் உலர்த்திவிட்டு, பிறகு அயர்ன் செய்துவிடுவார்கள். இந்தக் கறையை என்ன செய்தாலும் அகற்ற முடியாது. தண்ணீரை மட்டும் அதில் விட்டுவைத்திருந்தால், கறை துணியோடு செட்டாகாமல் இருக்கும்; எளிதில் நீக்கிவிடவும் முடியும்.

இரண்டு நிறங்களில் இருக்கும் பட்டுப் புடவைகளை ஹேண்ட் வாஷ்தான் செய்வோம். கறையையும், புடவையின் பகுதியையும் கைகளால் தனித்தனியே வாஷ் செய்வோம். ஒரு சேலைக்கு 10 நிமிடங்கள் பிடிக்கும்; அயர்ன் செய்ய ஐந்து நிமிடங்கள்.

15 வருட அனுபவம் உள்ளவர்கள்தான் எங்களிடம் வேலை செய்கிறார்கள். அதனால், எந்தத் துணிக்கு எந்த கெமிக்கலைப் பயன்படுத்துவது என்பது அவர்களுக்குத் தெரியும்.

இந்தியன் எத்தினிக் காஸ்டியூம் எதுவாக இருந்தாலும் முதலில் டிரைவாஷ் செய்ய வேண்டியது அவசியம். பட்டுச் சேலைகள் தவிர, பிற துணிகளை முதல் டிரைவாஷ§க்குப் பிறகுதான் வீட்டில் துவைக்க வேண்டும். ஏனென்றால், எல்லா காட்டன் துணிகளிலும் முதல் வாஷ் நார்மலாகச் செய்யும்போது சாயம்போகும். இதனால், புத்தம் புதுத் துணி சீக்கிரமே வெளுத்துவிடும். டிரைவாஷ் செய்யும்போது சாயம் துணியோடு நிலைத்து ஒட்டிக்கொண்டு விடும். பிறகு துவைத்தால்கூட துணியின் சாயம் போகவே போகாது.

பட்டுச் சேலைகளை மூன்று மாதத்துக்கு ஒருமுறை டிரைவாஷ§க்குக் கொடுக்க வேண்டும். பட்டுப் புடவைகளை காற்றோட்டமான இடத்தில் வைப்பது நல்லது. ஏ.சி அருகில் அல்லது சில்லென இருக்கும் இடத்தில் பட்டாடைகளை வைக்கக் கூடாது. இதனால் பட்டின் இழைகளில் ஈரப்பதம் அதிகமாகி அதன் வாசனை இழந்து, இழை பிரியவும் வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார் பாலசந்தர்.