டிரெஸ் ஃபிட்
‘‘பெரும்பாலான பெண்கள், ஆடை, ஆபரண, அலங்கார விஷயத்தில் தங்களுக்குப் பிடித்ததைத் `டிக்’ செய்கிறார்களே தவிர, அது தங்களுக்குப் பொருந்துகிறதா என்று யோசிப்பதில்லை. இதனால் நிச்சயம்,

முகூர்த்தம் என விசேஷ தின அலங்காரத்தில் கோட்டைவிடுகிறார்கள். எனவே, எப்போதும் உடல் அமைப்பு, நிறம் என உங்கள் ஃபீச் சர்ஸின் அடிப்படையிலேயே ஆடை, ஆபரணம், அலங்காரத்தைத் தேர்ந் தெடுங்கள்!’’
- முக்கிய ஆலோசனை சொல்லும், சென்னை, அண்ணா நகர், மேற்கு ஷெனாய் நகர், ‘ஸ்டைல்ஸ் ஸ்டுடியோ’வின் உரிமையாளர் ராதா. ‘‘ஸ்லிம், மீடியம், பப்ளி என மூன்று வகை உடல்வாகுப் பெண்களும் அதற்கேற்ப தங்களை அழகுப் படுத்திக்கொள்வதற்கான ஆலோசனைகளை, அதே உடலமைப்புகளைக் கொண்ட இந்த மூன்று மாடல்கள் மூலமாக விளக்குகிறார்.
ஒல்லி பியூட்டீஸ்!
புடவை
மாடல் அர்ச்சனா ஷர்மா, ஸ்லிம் அண்ட் ட்ரிம் பெண். ஃபுல் ஜரி முகூர்த்தப் பட்டுப் புடவைகள், இந்த உடல்வாகுக்கு அருமையாகப் பொருந்தி இன்னும் அழகு சேர்க்கும். இந்த உடல்வாகுப் பெண்கள் தாராளமாக ஃபேன்ஸி கற்கள் பதித்த ஹெவி வொர்க் புடவைகளை அணியலாம். டிசைனர் புடவைகள், இவர்களுக்கு பெர்ஃபெக்டாகக் கைகொடுக்கும். கலர் தேர்வைப் பொறுத்தவரை, டார்க் கலர்களை அள்ளலாம், லைட் கலர்களைத் தவிர்க்கலாம். ஃபுல் ஸ்லீவ் இவர்களை இன்னும் ஒல்லியாகக் காட்டும் என்பதால், ‘நோ’ சொல்லிவிடலாம்.

ஆபரணம்
ஒல்லி முகத்துக்கு சின்னக் கம்மல்களும் வேண்டாம்; குடை ஜிமிக்கிபோன்ற படா படா காதணிகளும் வேண்டாம்... மீடியம் சைஸில் க்யூட்டாகத் தேர்ந்தெடுக்கலாம். ஃபேன்ஸி மோதிரங்களிலும் மீடியம் சைஸையே `டிக்’ செய்யலாம். கற்கள் பதித்த பளிச் டிசைனர் வளையல்கள், கண்ணாடி வளையல்களைக் கொஞ்சம் குறைவான அளவில் அணியலாம்.

காஸ்மெடிக்
கன்னங்களில் பிளஷ் செய்து ஹைலைட் செய்யும்போது, ஒடுங்கிய முகத்தை மலர்த்திக் காட்டும்.
மீடியம் சைஸ் மேஜிக்!
புடவை
மாடல் சஹானா, மீடியம் சைஸ் மங்கை. இந்த சைஸ் பெண்களுக்கு கோல்டன் மற்றும் மெரூன் முகூர்த்தப் புடவைகள் நன்றாக இருக்கும். ஃபேர் காம்ப்ளெக்ஷன் உள்ளவர்களுக்கு லைட் க்ரீன், பீக்காக் கலர் அழகாக இருக்கும். மீடியம் காம்ப்ளெக்ஷன் பெண்களுக்கு லாவண்டர் கலர், ஆரஞ்சு பேஸ்டு கலர் காம்பினேஷன் அம்சமாக இருக்கும். த்ரீ ஃபோர்த் ஸ்லீவ் இவர்களுக்கு சூட் ஆகும் என்றாலும், அதில் அதிக வொர்க் தவிர்க்கவும்.

ஆபரணம்
கைகள் நிறையக் கண்ணாடி வளையல்கள் அணியலாம். கோல்டன் ஜுவல்ஸ், ஸ்டோன் ஜுவல்லஸ் என இரண்டுமே பொருந்தும்.
காஸ்மெடிக்
மாடல் சஹானாவுக்கு செய்திருப்பது போல யெல்லோ பேஸ் மேக்கப் போடும்போது, போட்டோவுக்கு அழகாக இருக்கும்.

ரிசப்ஷன்... லெஹங்கா!
சஹானா போன்ற மீடியம் சைஸ் பெண்களுக்கு, லெஹங்கா செம சூட் ஆகும். அதற்கு மேட்சிங்கான சிகை அலங்காரம் அவசியம். முக அமைப்புக்குப் பொருந்தும் ஒரு `ஹேர்டூ’வாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். லெஹங்கா வுக்கு பொதுவாக ஹெவி ஜுவல்ஸ் வேண்டாம். அதேபோல, ஹெவி வொர்க் ஆடைகள், அணிபவரை டாமினேட் செய்யும் என்பதால், அதில் லைட் கலர்களாகத் தேர்வு செய்வது நல்லது. வெயிட்டான ஆடைகளை அணியும்போது, ஹை ஹீல்ஸில் கவனமாக இருக்க வேண்டும்.
பப்ளி பட்டர்ஃப்ளை!
புடவை
மாடல் பிரியங்கா, கொஞ்சம் பப்ளி பெண். இந்த வகை உடல்வாகு கொண்ட பெண்கள் புடவை மற்றும் சேலையில் அதிக வேலைப்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். தடிமனான எம்ப்ராய்டரி மற்றும் ஸ்டோன் வொர்க் எல்லாம், இவர்களை இன்னும் கொஞ்சம் பருமனாகக் காட்டும். கலர்களை கொஞ்சம் மைல்டாகத் தேர்ந்தெடுக்கலாம். இங்கே பிரியங்கா அணிந்திருக்கும் லைட்க்ரீன் வித் லாவண்டர் பார்டர் புடவை, ஒரு நல்ல பரிந்துரை. இதுபோன்ற லைட் கலர்கள் இவர்களின் கொழுக்மொழுக் நேச்சரை எடுத்துக்காட்டாது. முகூர்த்தத்துக்கு மெரூன் அல்லது லைட் ரெட் `டிக்’ செய்யலாம். முகூர்த்த தருணத்தில் புடவையின் மொடமொடப்பு இவர்களைப் பருமனாகக் காட்டும். எனவே, முகூர்த்தப் புடவையின் பள்ளு, ப்ளீட்ஸ், முந்தானை போன்றவற்றை முன்கூட்டியே செட் செய்து, அயர்ன் செய்து அணிவிக்கும்போது, உடலோடு ஒட்டி கொஞ்சம் ஸ்லிம்மாகக் காட்டும். த்ரீ ஃபோர்த் ஸ்லீவ், இந்த உடல்வாகுக்கு செட் ஆகாது.

ஆபரணம்
இருக்கும் நகைகளை எல்லாம் அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டாம். படா சைஸ் ஜுவல்ஸும் தவிர்க்லாம். சிம்பிளான ஆபரங்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
காஸ்ட்யூம்
மைல்ட் மேக்கப் எடுபடாது. கொஞ்சம் அட்ராக்டிவ்வாக மேக்கப் செய்துகொள்ளலாம். பிரியங்கா நார்மல் காம்ப்ளெக்ஷன் என்பதால், இவருக்கு யெல்லோ பேஸ் மேக்கப் பொருந்தும். வட்ட முகத்துக்கு ஹெவி மேக்கப் போட்டால், முகத்தைப் மொழுகியதுபோலத் தெரியும் என்பதால் தவிர்க்கவும். ஹேர் ஸ்டைலைப் பொறுத்தவரை பெரிய பஃப் வேண்டாம், மீடியம் பஃப் பெட்டராக இருக்கும். பிரியங்காவுக்கு சின்ன உதடுகள் என்பதால், லிப் மேக்கப்பில் மேல் மற்றும் கீழ் உதடுகளில் ஒரு லைனை இறக்கியிருப்பது, அழகாகவும், எடுப்பாகவும் தெரிகிறது.’’
- வே.கிருஷ்ணவேணி
படங்கள்: கே.ராஜசேகரன், எம்.உசேன்
மாடல்கள்: சஹானா,அர்ச்சனா ஷர்மா, ப்ரியங்கா