சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

பிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்!

டிசைனர் பிளவுஸ்

ணப்பெண்ணுக்கு திருமண நாளின் முக்கிய அக்கறை, முகூர்த்தப் புடவை மற்றும் பிரைடல் பிளவுஸ் என்றாகிவிட்டது. ‘இந்த டிசைன் வேண்டும், இந்த கலர்களில் கற்கள் பதித்திருக்க வேண்டும், இவ்வளவு ஸ்லீவ் வேண்டும்’ என்று கிட்டத்தட்ட ஒவ்வொரு மணப்பெண்ணும் தன் பிரைடல் பிளவுஸ் தைக்கும்போது ஒரு டிசைனராகவே உருவெடுத்துவிடுகிறார். உங்கள் திருமணத்தில் கலந்து கொள்ளும் அத்தனை பெண்களுக்கும் முகூர்த்த நாளில் காஸ்ட்யூமில் கலக்கக் கைகொடுக்கும் பிரைடல் பிளவுஸ் கலெக்‌ஷன்களை அறிமுகப்படுத்தும் பக்கங்கள் இவை. பார்த்து, செலக்ட் செய்து, பர்சேஸ் செய்து, ஸ்டிட்ச் செய்து... ஜமாய்!

பிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்!

சென்னை, கொளத்தூரைச் சேர்ந்த ‘பேர்ள் ஆரி டிசை னர்ஸ்’ஸின் உரிமையாளர் சோஃபியா கஜேந்திரன். ‘‘பிரைடல் பிளவுஸ், பிரைடல் புடவைகளில் வேலைப்பாடுகள், குட்டீஸுக்கு பட்டுப்பாவாடை, லெஹங்கா என, திருமண ஆர்டர்கள் எடுக்கும்போது மனம் கூடுதல் உற்சாகமாகும். கல்யாணப் பெண்கள் பிரைடல் பிளவுஸ் டிசைன் செய்யக் கொடுக்க வரும்போது, முகூர்த்தப் புடவையையும் தவறாமல் எடுத்து வந்தால், டிசைனை தீர்மானிப்பது சுலபமாகவும், சூப்பராகவும் இருக்கும்!’’ என்றவர் தந்த பிரைடல் பிளவுஸ் டிசைன்கள் இதோ...

பிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்!
பிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்!
பிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்!
பிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்!
பிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்!
பிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்!

சென்னை, அண்ணா நகர் ‘யுனிக் பொட்டிக்’கின் உரிமையாளர் புனிதவதி, ‘‘இன்றைக்குப் பெரும்பாலான பெண்கள் டிசைனர் பிளவுஸ்களை விலையைப் பற்றிக் கவலைப்படாமல் விருப்பத்துடன் வாங்குகிறார்கள். எங்கள் பொட்டிக்கில் 2,000 ரூபாயில் இருந்து இரண்டு லட்சம் ருபாய் வரை பிளவுஸ் டிசைன் செய்து கொடுக்கிறோம். ஒரு ஆலோசனை... உங்களுக்குப் பிடித்த வொர்க்கை டிசைனரிடம் சொல்லும்போது, ‘இந்த மெட்டீரியல் அவ்வளவு ஹெவி வொர்க் தாங்காது’ என்று அவர் பரிந்துரைத்தால், அதை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில், அவ்வளவு விலை கொடுத்து தயார் செய்யும் பிளவுஸ் சீக்கிரமே டேமேஜாகிவிடும். உங்களின் விருப்பம், டிசைனரின் அக்கறையைச் சேர்ந்து உருவாக்குங்கள் பிரைடல் பிளவுஸை!’’ என்றவர் தந்த பிரைடல் பிளவுஸ் டிசைன்கள் இதோ...

பிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்!
பிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்!
பிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்!
பிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்!
பிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்!
பிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்!
பிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்!
பிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்!

- வே.கிருஷ்ணவேணி

படங்கள்: கே.ராஜசேகரன், வி.செந்தில்குமார், ஜெ.தான்யராஜு

மாடல்கள்: லூப்னா, கௌதமி சௌத்ரி, ஆருஷி