ஜுவல்ஸ்
திருமணக் கனவு களுடன் காத்திருக்கும் திருமகள்... திருமண விழாவின் நிச்சயம், முகூர்த்தம், ரிசப்ஷன், சங்கீத் என எல்லா நிகழ்வு களிலும் ஜொலிப்பதற்கு ஏற்ற நகைகளின் கண்காட்சி ஆரம்பம்...

வைரம், முத்துக்கள், மரகதம், ரூபி கற்களால் மெருகூட்டப்பட்டிருக்கும் இந்த நெக்லெஸ் செட், உங்களை ரதியாக மாற்றுமே...

பாரம்பர்யம் மற்றும் நாகரிகம் இரண்டும் சேர்ந்து எழில் கொஞ்சும் இந்த முகூர்த்த தங்க நகைகள், நங்கைக்கு நளினம் சேர்க்கும்...

பாரம்பர்ய மாங்காய் மாலை டிசைனில் குந்தன் கற்கள் மற்றும் முத்துக்கள் சேர்த்து அழகூட்டப்பட்ட இந்த ஆரமும் அதற்கு தோதான மற்ற நகைகளும் மங்கையின் மணக் கோலத்தை நிறைவாக்குமே!

நுணுக்கமான கலை வேலைப்பாட்டுடன் கூடிய... வைரம், மரகதம் மற்றும் தென் கடல் முத்துக்கள் கோத்து அழகாக ஜொலிக்கும் இந்த முகூர்த்த வைரநகைகள் மணப்பெண்ணுக்கு மயங்கவைக்கும் அழகை அளிக்கும்.

சிறுசிறு வைரக் கற்களால் ஆன பந்தலில், மலர்கள் தூவியதைப் போன்று டிசைன் செய்யப்பட்டுள்ள, இந்த வைர நகைகள் நவ நாகரிக மங்கையருக்கு நல்ல சாய்ஸாக விளங்கும்...


- இந்துலேகா.சி
படங்கள்: பகத்குமார்
மாடல்: அஞ்சு குரியன்
உதவி: உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் (VBJ)