Published:Updated:

ட்ரெண்டியான டிசைனர் டிரெஸ்!

ட்ரெண்டியான டிசைனர் டிரெஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
ட்ரெண்டியான டிசைனர் டிரெஸ்!

காஸ்ட்யூம்

டை அணிவதில், ட்ரெடிஷனலாக வலம்வருவது ஒருவரது விருப்பமாகவும், மாடர்ன் உடையில் கலக்குவது மற்றொருவரின் விருப்பமாகவும் இருக்கும். ஆனால், திருமணத்துக்கு மாடர்ன் உடையில் வலம்வர முடியாதே என வருந்துபவர்களுக்காகவே பாரம்பர்யத்தின் பெருமை குறையாமலும், வெஸ்டர்ன் டிரெஸ்ஸின் அழகையும் சேர்த்து  டிரெஸ் டிசைன்கள் வந்துவிட்டன. இதோ உங்கள் தேர்வுக்குச் சில...    

ட்ரெண்டியான டிசைனர் டிரெஸ்!

பீச் (Peach) கலர் ரா  சில்க் ஸ்கர்ட் மற்றும் ஸ்லீவ்லெஸ் பிளவுஸை அழகுபடுத்தும் விதமாக அதன் மேல் உள்ள எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ள கேப் டாப் (இதை வேறு உடைகளுக்கும் மிக்ஸ் மேட்ச் செய்துகொள்ளலாம்) என ஹெவியான எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த  இந்த லெஹெங்கா, ரிசப்ஷனுக்கு ஏற்றது. வழக்கமான தாவணியுடன் அணியக்கூடிய லெஹெங்காவுக்கு  மாற்றாக இந்த கேப் டாப் லெஹெங்கா உங்களுக்கு மாடர்ன் தோற்றத்தைக் கொடுக்கும்.

ட்ரெண்டியான டிசைனர் டிரெஸ்!

புள் ஷேடட் டிஷ்யூ மெட்டீரியலில் எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ள ஸ்கர்ட்டுக்குத் தோதான ஜர்தோஸி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள மெரூன் நிற வெல்வெட் பிளவுஸும், இதற்கு அழகு சேர்க்கும் நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த  தாவணி என உங்கள் செல்ல மகளின் நிச்சயதார்த்தம், சங்கீத், வரவேற்பு நிகழ்ச்சி என எதற்கும் போட்டு அசத்தக்கூடிய அழகிய லெஹெங்கா!

ட்ரெண்டியான டிசைனர் டிரெஸ்!

ரும்பச்சை நிற வெல்வெட் துணியில், எம்ப்ராய்டரி மூலம் ஒரு திருமண ஊர்வலத்தையே கண்முன் காட்சிப்படுத்தும் இந்த லெஹெங்கா, வடிவமைப்பை மறைக்காமல் அழகூட்டும் தாவணி என இந்த உடை உங்கள் சங்கீத் அல்லது ரிசப்ஷனுக்கானது.

ட்ரெண்டியான டிசைனர் டிரெஸ்!
ட்ரெண்டியான டிசைனர் டிரெஸ்!

றுப்பு நிறத் துணிக்கு எடுப்பாக தங்க நிறத்தில் எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ள கோட் (இதை வேறு உடைகளுக்கும் மிக்ஸ் மேட்ச் செய்துகொள்ளலாம்) மற்றும் தங்க நிற ஸ்கர்ட். திருமணத்துக்கு முன்பான ஸ்பின்ஸ்டர்ஸ் (Spinsters) பார்ட்டியில் குயினாக வலம்வருவதற்கு ஏற்றத் தேர்வு.

ட்ரெண்டியான டிசைனர் டிரெஸ்!
ட்ரெண்டியான டிசைனர் டிரெஸ்!

ஸ்லீவ்லெஸ் மற்றும் சைனீஸ் காலர் கொண்ட இந்த சிம்பிள் எம்ப்ராய்டரி  கவுன் மெஹந்தி நிகழ்ச்சிக்கு ஏற்றது.

பிங்க் நிற சாஃப்ட் சில்க் மெட்டீரியல் உடையை எடுப்பாகக் காட்டும் சம்கி வேலைப்பாடுகள் நிறைந்த கேப் டாப் என மிளிரும் இது, சங்கீத் நிகழ்வுக்கு பொருத்தமானது.      

ட்ரெண்டியான டிசைனர் டிரெஸ்!

ஆடைகளின் விலை: குறைந்த வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகள் ரூ 8,000 முதல் மற்றும் அதிக வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகள் ரூ 50,000 முதல் ஆரம்பம்.

- இந்துலேகா.சி


படங்கள்: மீ.நிவேதன்,

Wedding Stori, சென்னை

ஆடை உதவி: Studio 149, அண்ணாநகர், சென்னை

மேக்கப் உதவி: நேச்சுரல்ஸ், சென்னை