Published:Updated:

ரத்தினம் பதித்த உள்ளாடைகள்... தேவதைகளின் உலகம்... விக்டோரியா சீக்ரெட்டின் ரகசியம்!

ரத்தினம் பதித்த உள்ளாடைகள்... தேவதைகளின் உலகம்... விக்டோரியா சீக்ரெட்டின் ரகசியம்!
ரத்தினம் பதித்த உள்ளாடைகள்... தேவதைகளின் உலகம்... விக்டோரியா சீக்ரெட்டின் ரகசியம்!

இதன் முக்கிய நோக்கமே, பெண்களின் பிரத்தியேக உடைகளுக்காக ஆண்கள் எந்தவொரு தயக்கமும் இன்றி ஷாப்பிங் செய்ய வேண்டும் என்பதுதான்.

`ஜீன்ஸ்னா லீவைஸ், டீ-ஷர்ட்டுனா டாமி ஹில்ஃபிகர், ஷூனா நைகீ' இப்படி நாம் அன்றாட உபயோகிக்கும் உடை, இணை ஆபரணங்கள் பிராண்டுகளின் மீதுள்ள 'லவ்' கண்மூடித்தனமானவை. அதிலும் பெண்கள் உள்ளாடை நிறுவனமான, 'விக்டோரியாஸ் சீக்ரெட்டின்' (Victoria's Secret) மீது உலகளவில் இருக்கும் காதல், வேற லெவல். உள்ளாடைகள்தான், ஆனால், உலகளவில் ஏன் இவ்வளவு க்ரேஸ்? அப்படி அதில் என்ன சீக்ரெட், யார் அந்த விக்டோரியா, 'விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோ'வுக்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு? பார்ப்போம்...

வரலாறு

உலகின் மாபெரும் உள்ளாடை நிறுவனமான விக்டோரியாஸ் சீக்ரெட்டை உருவாக்கியவர், அமெரிக்காவைச் சேர்ந்த ராய் ரேமண்ட். தன் மனைவிக்கு உள்ளாடை வாங்கச் சென்றபோது, ராய்க்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே இப்படியொரு நிறுவனத்தை உருவாக்கத் தூண்டியது. மிகவும் சுமாரான நைட்வேர் (Night Wear), பளீரென ஒளிரும் மின் விளக்குகள், வேற்றுகிரகவாசியைப் பார்ப்பதுபோல் அங்கிருக்கும் விற்பனை பெண், ராயை பார்த்த பார்வை அனைத்தும் ரேமண்டுக்கு அசௌகரியமான அனுபவத்தைத் தந்தது. இந்த அனுபவமே, எட்டு வருடங்களுக்குப் பிறகு 'விக்டோரியாஸ் சீக்ரெட்' எனும் மாபெரும் ஸ்டோரை உருவாக்கியது. இதன் முக்கிய நோக்கமே, பெண்களின் பிரத்தியேக உடைகளுக்காக ஆண்கள் எந்தவொரு தயக்கமும் இன்றி ஷாப்பிங் செய்ய வேண்டும் என்பதுதான். உள்ளாடை அணிபவர்கள் எதுபோன்ற டிசைன்களை விரும்புகிறார்கள், விலை பட்டியல் எப்படியிருக்கலாம் என்ற அடிப்படைத் தகவல்களைச் சேகரித்து, தன் மனைவியோடு இணைந்து 1977-ம் ஆண்டு, முதல் விக்டோரியா சீக்ரெட் ஸ்டோரை திறந்தனர்.

யாரு அந்த விக்டோரியா?

வரலாற்றிலேயே கவுன், எம்ப்ராய்டரி ஆடைகள் என விதவிதமான உடைகளை முதல்முதலில் உடுத்தி 'ஆடை புரட்சி' செய்தது, 'விக்டோரியன் சகாப்தம் (Victorian Era)'. 'அவர்களின் ரகசியத்தை வெளிக்காட்டும் விதமாக இருக்கும்!' என்று எண்ணியே அவரின் பெயரை வைத்துள்ளனர், இல்லை இல்லை பயன்படுத்திக்கொண்டனர் ராய் மற்றும் அவரின் மனைவி கேயி. அதற்கேற்ப, அவர்களின் ஸ்டோரையும் Dark Wood தரை, ஓரியன்டல் விரிப்புகள், வெல்வெட் திரைச்சீலைகள் போன்ற விக்டோரியன் சகாப்த தனியறை செட்-அப்களுடன் வடிவமைத்தனர். என்ன ஒரு வில்லத்தனம்!

சீக்ரெட்

மற்ற பிறாண்டுகளைப்போல் இல்லாமல், இவர்களின் உள்ளாடைகளைத் தரமான பட்டு மற்றும் இயற்கை ஃபைபர்களை கொண்டு தயாரிக்கிறார்கள். இதுவே, இவர்களின் தனித்தன்மைக்கு காரணம். பிறகு, விதவிதமான நிறங்களில், வெவ்வேறு வடிவங்களில் உள்ளாடைகளைத் தயாரிக்கத் தொடங்கினர். இது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்தாலும், அனைவராலும் வாங்க முடியாத நிலை உருவானது. அவ்வளவு காஸ்ட்லி! மார்க்கெட்டின் உச்சியில் இருந்த நிறுவனம் மெள்ள மெள்ள சரியவும் தொடங்கியது. ஒரு கட்டத்தில் பெரும் கடனிலும் மூழ்கிப்போனது. 

ஆனால், மனந்தளராத இவர்களின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை மறுபடியும் தேடிக்கொடுத்தது. ஸ்ட்ராப்லெஸ், ஆஃப் ஷோல்டர் போன்ற வடிவங்களோடு மீண்டும் ஃபேஷன் உலகில் கால்பதித்தனர். அன்றுவரை 'ஆடம்பர பிராண்டு' என்றிருந்த விக்டோரியா சீக்ரெட், விலைகளில் மாற்றம் செய்யப்பட்டு சாமான்ய மக்கள் வரை சென்றடைந்தது. இளைஞர்களைக்கூட அதிகமாகவே கவர்ந்தது. இவர்களின் மற்றுமொரு சீக்ரெட், விளம்பரங்கள். பெரும்பாலான விளம்பரங்கள், ஆண்களைக் கவரும் விதமாக இருக்கும். கடைகளில் விற்பனையாளர்களின் கனிவான கவனிப்பு திரும்பத்திரும்ப மக்களை வரச்செய்தது. இப்படி உள்ளாடைகள் வரலாற்றில் புரட்சி செய்தவர்கள் இவர்கள் மட்டுமே!

ஃபேஷன் ஷோவும் தேவதைகளும்

ராயின் பிசினஸ் பார்ட்னரான வெக்ஸ்னர், விக்டோரியா சீக்ரெட்டுக்கென அடையாள முகத்தை உருவாக்க நினைத்தார். அதற்காகக் கற்பனை கதை ஒன்றைத் தயார்செய்து, அதற்கான 'தேவதை' அதாவது மாடல் முகத்தை மக்களிடம் பதிய செய்தார். இதுவே நாளடைவில் மாபெரும் ஃபேஷன் ரன்வேவாக மாறியது. சுமார் இருபது மில்லியன் மக்கள் பார்க்கும் ஒரே ஃபேஷன் ஷோ இதுதான். இதற்கான மேடை, ஒளி விளக்குகள், மாதிரிகளை தேர்ந்தெடுப்பது முதல் ஃபேன்டஸி (Fantasy) உள்ளாடைகள் வடிவமைப்பது வரை, இவர்கள் எடுத்துக்கொள்ளும் காலநேரம், ஒரு முழு ஆண்டு. ஒவ்வொரு ஆண்டும் வைரம் முதலிய ரத்தினக் கற்கள் பதித்த, 10 முதல் 15 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உள்ளாடையை இந்த ஃபேஷன் ஷோவில், தேர்ந்தெடுக்கப்பட்ட 'தேவதை' அணிந்து வருவது வழக்கம். இதுவே இந்நிகழ்ச்சியின் ஹைலைட். இதற்காக மாடல்களுள் பெரிய போட்டியே வரும். இந்த விக்டோரியா சீக்ரெட் ரன்வேயில் அதிகமுறை பூனைநடையிட்ட தேவதை, பிரேசிலைச் சேர்ந்த அட்ரியானா லீமா.

சின்ன நோக்கத்தில் மிகவும் சிறியதாய் தொடங்கிய இந்த ஸ்டோர், தற்போது உலகளவில் சுமார் 1,000 கடைகளைக்

Content

Content

கொண்டிருக்கின்றன. அதுவும் எல்லாம் டாப் க்ளாஸ்! இதன் ஸ்டிச்சிங் யூனிட் இந்தியாவிலும் உள்ளது!

அடுத்த கட்டுரைக்கு