Published:Updated:

திருச்சி மாநகரம் கொண்டாடும் பாரம்பர்யம்!     

திருச்சி மாநகரம் கொண்டாடும் பாரம்பர்யம்!     
திருச்சி மாநகரம் கொண்டாடும் பாரம்பர்யம்!     

பெண்ணா லட்சணமா புடவையை கட்டிக்கோ... மகாலட்சுமி மாதிரி இருப்பன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க... என்னதான் கலர் கலரா மேக்கப் போட்டாலும், பலவிதமான நகைகளை மாட்டிக்கொண்டாலும், நமது பாரம்பர்யத்தில் ஒன்றாக இருக்கும் புடவை பெண்களுக்கு ஒரு தனி அழகுதாங்க. 

ஆனா இப்போ எல்லாம் ஃபேஷன் என்று டாப்ஸ், டி-ஷர்ட், ஸ்கர்ட், ஜீன்ஸ், லெக்கிங்ஸ், ஜெக்கிங்ஸிற்கு மாறி வருகின்றனர் நமது நாட்டு இளம் பெண்கள். எப்போவாவது கல்லூரியில் கல்ச்சரல் ப்ரோக்ராம், ஆஃபிஸில் டிரெடிஷனல் டேவிற்கு அவர்களை புடவையில் பார்க்க முடியும். அதுவும் ஃபேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராமிற்காக என்றாகிவிட்டது. இதற்கு நடுவே புடவையில் தான்மா நீ பெண்ணா தெரியுற என்று கூட படிக்குற, வேலைப்பாக்குற பசங்க சொல்லும் போதுதான் புடவையை ரசிக்க தோன்றும்.

திருச்சி மாநகரம் கொண்டாடும் பாரம்பர்யம்!     

சரி இனி ஸாரீயை கட்டிப்பழகலாம் என்று நினைக்கும் நேரத்தில், நமக்காக விற்பனை செய்யப்படுவதுதான் ரெடிமேட் ஸாரீஸ். இது வேலையை சுலபமாக்கிவிடுவதால் கலைநயத்துடன் தயாரிக்கப்படும் புடவையின் அருமை புரியாமலே போய்விடுகிறது. புடவைகளில் பட்டு, பனாரஸ், காட்டன், டிசைனர், சிந்தட்டிக் என பல வகைகள் உள்ளன. இதனால் பல டிசைன்களில் தயாரிக்கப்படும் புடவைகளில், விரும்பியதை நம்மால் செலக்ட் செய்துக்கொள்ளவும் முடிகிறது. 

யாரும் இதுவரை கட்டாத டிசைனில், கூட்டத்தில் தனித்துவமாக, அழகாக ஜொலிக்க, பார்த்து ரசித்து தேர்ந்தெடுக்கக்கூடிய புடவையாக இருக்கணும். அப்படிப்பட்ட புடவைகள் முற்றிலும் நமது பாரம்பர்ய முறைப்படி நெய்யப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்! அந்தச் சிறப்பினைக் கொண்ட புடவைகளை வழங்கி வருவதுதான் 'Trichy Sarathas' ஜவுளிக்கடை. நேரடியாக நெசவாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புடவைகளை திருச்சி சாரதாஸ், 49 ஆண்டு காலமாக மக்களுக்கு வழங்கி வருகிறது. 

நெசவுத் தொழில் செய்யும் இடத்தில் கைத்தேர்ந்த கைவினைஞர்களின் கையால் நெய்யப்பட்ட அற்புதமான புடவைகள் அனைத்தும் திருச்சி சாரதாஸில் கிடைக்கிறது. ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள், குண்தன், பழங்கால சர்டோஸி, தப்கா, அசல் சரிகை போன்ற சிறந்த அம்சங்களைக் கொண்டு சாரதாஸ் புடவைகள் அலங்கரிப்படுகின்றன. பாரம்பர்யம், கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் அழகியல் படைப்பு அடங்கிய சாரதாஸ் புடவைகளில், இந்தக்கால ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் புதுமையான டிசைன்களும் கையாளப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ் பட்டு மற்றும் பார்ட்டி வியர்களையும் சாரதாஸ் விற்பனை செய்கிறது. 

தமிழ்நாட்டின் பண்டைய நகரமான திருச்சிராப்பள்ளியில், உச்சிப் பிள்ளையார் வீற்றிருக்கும் மலைக்கோட்டைக்கு அருகே திருச்சி சாரதாஸ் ஜவுளிக்கடை அமைந்துள்ளது. திருச்சி சாரதாஸின் சரித்திரப் பட்டுடன் கொண்டாட தயாராகுங்கள்.