Published:Updated:

உங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா?

உங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா?
பிரீமியம் ஸ்டோரி
உங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா?

ஆன்லைன் ஷாப்பிங் .. சீசன் 2மு.பிரசன்ன வெங்கடேஷ்

உங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா?

ஆன்லைன் ஷாப்பிங் .. சீசன் 2மு.பிரசன்ன வெங்கடேஷ்

Published:Updated:
உங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா?
பிரீமியம் ஸ்டோரி
உங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா?

எல்லாமே டிஜிட்டல் மயம்தான் என்றாகிவிட்டது. இந்தியாவே டிஜிட்டல் இந்தியா என்கிறார்கள். உண்ணுகிற உணவில் இருந்து உடுத்துகிற உடை வரை எல்லாவற்றையும் ஆன்லைனிலேயே ஷாப்பிங் செய்யலாம். டிக்கெட் புக் செய்யலாம், மருந்துகள் வாங்கலாம், மருத்துவரிடம் அப்பாயின்ட்மென்ட் பெறலாம். இன்னும் நிறைய செய்யலாம். பத்துக்குப் பத்து ரூமில் உட்கார்ந்துகொண்டு இந்த உலகையே வலம்வரலாம். பத்தாண்டுகளுக்கு முன்பே வந்துவிட்ட இந்த ஆன்லைன் ஷாப்பிங், இன்று தனது எல்லைகளை இன்னும் விரித்திருக்கிறது.

ஆன்லைன் வர்த்தகத்தில் இருக்கும் மிகப்பெரிய ப்ளஸ் பாயின்ட்டே நாம் இருக்கின்ற இடத்திலிருந்தே பொருள்கள் வாங்கலாம் என்பதுதான். இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கிராமத்தில் கூட ஆன்லைன் நிறுவனங்கள் டெலிவரி செய்யத் தயாராக இருக்கின்றன.

இந்தியாவில் மட்டும் அறுபதுக்கும் மேற்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் இருக்கின்றன. போட்டி மிக அதிகமாக இருப்பதால் வாடிக்கையாளர்களைக்  கவர்வதற்காக ரூம் போட்டு யோசித்து, விதவிதமான ஆஃபர்களை அள்ளி வழங்கு  கின்றன இந்த நிறுவனங்கள். குறிப்பிட்ட வங்கி மூலம் பரிவர்த்தனை செய்தால் இவ்வளவு சதவிகிதம் தள்ளுபடி, இவ்வளவு ரூபாய்க்குப் பொருள்கள் வாங்கினால் கேஷ்பேக் என ஆஃபர்கள் கொட்டிக்கிடக்கின்றன.

உங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா?

ஃபேஷன் தளங்களில் ஏற்பட்ட போட்டி காரணமாகப் புதுப்புது வசதிகளைக்  கொண்டு வந்தனர். கிட்டத்தட்ட, நாம் கடைக்கு நேராகச் சென்று உடைகளை உடுத்திப்பார்த்தால் என்ன உணர்வு வருமோ அதை மொபைலிலேயே கொண்டு வரப் போராடு கிறார்கள் ஆன்லைன் ஃபேஷன்காரர்கள். `வூனிக்' என்ற ஆப் நம்மை நன்றாகப் புரிந்துகொண்டு நமக்கேற்ற உடைகளைக் காட்டும். நமக்குப் பிடித்த உடை என்றால் வலது பக்கம் ஸ்வைப் செய்ய வேண்டும். பிடிக்கவில்லையென்றால் இடது பக்கம். தொடர்ந்து கறுப்பு உடைகளை நாம் வேண்டாமென்றால், அதன்பின் கறுப்பே நம் கண்ணில் படாது. இந்த அல்காரிதம்தான் `வூனிக்'கின் பலம். இதுபோல ஒவ்வொரு செயலியும் ஏதேனும் ஒரு சிறப்பு வசதியைக் கொண்டுவர முயல்கின்றன.

ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்னொரு முக்கியமான அப்கிரேடு, இலவச ஷிப்பிங். ஃப்ரீ ஷிப்பிங் இல்லை என்றால் வேறு தளங்களில் அந்தப் பொருளை வாங்கத் தயாராகி விடுகின்றனர் வாடிக்கையாளர்கள். அதோடு, ஒரு பொருளை பல தளங்களிலும் தேடி அனைத்திலும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே வாங்குகின்றனர். இப்படி பொருள்களை ஒப்பிடுவதற்கே பல  இணையதளங்கள், மொபைல் ஆப்ஸ் இருக்கின்றன. எத்தனை நாள்களுக்குள் ஆர்டர் செய்த பொருள் டெலிவரி ஆகிறது, பொருள் சேதமடைந்திருந்தால் மாற்றிக்கொள்ளும் வசதி போன்றவையும் இப்போது இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மிந்த்ராவின் விளம்பரமே ரிட்டர்ன் பாலிசி பற்றிதான். எந்தக் கேள்வியும் கேட்காமல் நாம் வாங்கிய பொருள்களைத் திருப்பி தரலாம். பணம் முழுவதும் திரும்ப கிடைக்கும். அமேஸான் போன்ற தளங்கள் சில பொருள்களுக்கு மட்டுமே இந்த வசதியைத் தருகின்றன. காரணம், சரியில்லையென்றால் ரிட்டர்ன் வாங்குவதில்லை. ஆனால், மிந்த்ராவுக்கு `எனக்கு பிடிக்கலப்பா' என்கிற பதிலே போதும். இது மிந்த்ராவின் பலம்.

ஸ்விக்கி, ஸோமாட்டோ போன்ற நிறுவனங்கள் உணவுப் பொருள்களை விற்பதற்காகவே பிரத்யேகமாக   உருவாக்கப்பட்டவை. லென்ஸ்கார்ட் கண் கண்ணாடிகளுக்காக உருவானது. ஃபர்ஸ்ட் க்ரை தளம் குழந்தை களுக்கான பொருள்களுக்காக உருவாக்கப்பட்டது. இவ்வாறு பல தளங்கள் குறிப்பிட்ட பொருள்களை விற்பதற்காக மட்டுமே தொடங்கப் பட்டு அவையும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆன்லைன் வர்த்தகத்தில் இந்த மாற்றம் முக்கியமானது.

முன்பு யெல்லோ பேஜஸ் என ஒரே ஒரு நிறுவனம் இருந்தது. கார் முதல் காயலான்கடை வரை நமக்கு எது தேவையோ அது தொடர்பான தகவல்களை அந்த நிறுவனம் டெலிபோன், மொபைல், இணையதளம் மூலம் நமக்குப் பகிர்ந்தது. இப்போது அந்த ஒரு தொழில் நூற்றுக்கும் மேற்பட்டதாகப் பிரிந்திருக்கிறது. கார் வாங்க ஒரு தளம், வீடு வாங்க ஒன்று என யெல்லோ பேஜஸ் இப்போது 100 நிறுவனங்கள் போல உருமாறிவிட்டது. இப்படி பல ஸ்பெஷலிஸ்ட்கள் உருவானதால் தரமான சேவையும் கிடைக்கிறது.

ஆன்லைனில் அனைத்துப்  பொருள்களையும் எல்லோரும் வாங்குவதில்லை. சிலர் குறிப் பிட்ட பொருள்களை மட்டும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வர். சிலர் எது வேண்டும் என்றாலும் ஆன்லைன்தான் என்கிற மனநிலையில் இருப்பர். இப்போதோ சில பொருள்கள் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது.

அது பற்றி அடுத்த இதழில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!