தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

சூர்யா ஜோடின்னா சூப்பர்தானே? - ஸ்ருதி நாராயண்

சூர்யா ஜோடின்னா சூப்பர்தானே? - ஸ்ருதி நாராயண்
பிரீமியம் ஸ்டோரி
News
சூர்யா ஜோடின்னா சூப்பர்தானே? - ஸ்ருதி நாராயண்

மாடல் மங்கைகள்

டால்மியா சிமென்ட், விஸ்பர் அல்ட்ரா, எம்.டி.ஆர் சாம்பார் பவுடர், பாண்ட்ஸ் ஃபேஸ் வாஷ், ஹெச்டிஎஃப்சி கோல்டு லோன், ஓலா ஆட்டோ... லேட்டஸ்ட்டாக நிப்பான் பெயின்ட்ஸ் என ஸ்ருதி நாராயண் சூப்பர் பிஸி மாடல்.

`எதையுமே ப்ளான் பண்ணிச் செய்ய ணும்' என்பதே ஸ்ருதியின் ஸ்ட்ராட்டஜி. மாடலிங் துறையில் வலதுகால் வைத்ததும் அப்படித்தான் என்கிறார்.

சூர்யா ஜோடின்னா சூப்பர்தானே? - ஸ்ருதி நாராயண்

``நம்புங்க மக்களே... நான் தமிழ்ப் பொண்ணு. மும்பையில பிறந்து வளர்ந்தேன். ஷீத்தல் மல்ஹார், மெஹர் ஜெசியாவைப் பார்த்து ஸ்கூல் படிக்கும்போதே மாடலிங் ஆர்வம் வந்திருச்சு. ஃபேஷன் டிசைனிங் படிச்சேன். காலேஜ் டைம்ல `மும்பை நேவி குயின்' போட்டியில் கலந்துகிட்டதுதான் மாடலிங் கதவுகளைத் திறந்துவிட்டது. என்னுடைய முதல் விளம்பரம் ஏர்டெல். நூற்றுக்கும் மேலானவங்க கலந்துகிட்ட அந்த ஆடிஷன்ல, நான் மட்டும் செலெக்ட் ஆன அந்தத் தருணம் செம!'' - நினைத்தது நடந்ததில் மிஸ் நாராயணுக்கு மகிழ்ச்சி.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை எக்கச்சக்கமான வாய்ப்புகள் வந்தாலும், ஸ்ருதி ரொம்ப ஸ்ட்ரிக்ட்.

``எல்லாரும் நடிக்கிறாங்க... நானும் நடிக்கணும்னு நான் இங்கே வரலை. ஒரு படத்துல நான் இருக்கேன்னா அதுக்கு ஓர் அர்த்தம் இருக்கணும். கேரக்டர் சின்னதா, பெருசாங்கிறதெல்லாம் எனக்குப் பிரச்னையில்லை. `உனக்கு எக்ஸ்பிரஷன்ஸ் பிரமாதமா வருது. எந்த லுக்குலயும் சட்டுனு பொருந்திடுற முகம் உனக்கு. அதுதான் உன்னுடைய ப்ளஸ். சினிமாவுல உனக்குப் பெரிய இடம் காத்திட்டிருக்கு'னு ஒரு டைரக்டர் பாராட்டினார். அந்த வார்த்தைகள் பலிக்கிறதுக்காக ஐ யாம் வெயிட்டிங்! அப்படி வரும் வாய்ப்புகள் மணிரத்னம் அல்லது ராஜீவ் மேனன் டைரக்‌ஷன்ல, அர்விந்த் சுவாமி அல்லது சூர்யா ஜோடியா அமைஞ்சா எவ்வளவு சூப்பரா இருக்கும்?!'' - நிஜமாகவே நிமிடத்துக்கு ஓர் எக்ஸ்பிரஷன் மாறுகிறது ஸ்ருதியின் முகத்தில்.

சூர்யா ஜோடின்னா சூப்பர்தானே? - ஸ்ருதி நாராயண்``நான் என் குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கமானவள். அதனால நான் நடிக்கிற எந்த விளம்பரமும் அவங்களை முகம் சுளிக்கவைக்கிற மாதிரி இருக்கக் கூடாதுங்கிறதுலயும் கவனமா இருப்பேன். ஒருபக்கம் போட்டிகளைச் சமாளிக்கணும், இன்னொருபக்கம் என் கொள்கைகளை விட்டுக்கொடுத்துடக் கூடாது. ரெண்டையும் பேலன்ஸ் பண்ணி முன்னணியில இருக்கிற அந்தச் சவால், எனக்குப் பிடிச்சிருக்கு'' - பெரிய கண்கள் விரித்துச் சொல்கிறார் பெயின்ட் விளம்பரப் பொண்ணு.

``மாடலிங் துறையில வெற்றிங்கிறது ரொம்பக் கஷ்டம். அழகு, அதிர்ஷ்டம், திறமை எல்லாத்தையும் மீறி, பயங்கரமான உழைப்பும் கமிட்மென்ட்டும் தேவை. இந்த ரெண்டும் இருந்தா உங்களுக்கும் இங்கே இடமிருக்கு.''

கிளாமர் துறையில் வெற்றிக்கான கிராமர் சொல்லி முடிக்கிறார் ஸ்ருதி.

- ஆர்.வைதேகி