தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

பளபள பட்டுப்புடவையும் தகதக தங்க நகைகளும்! - ரக்‌ஷா

பளபள பட்டுப்புடவையும் தகதக தங்க நகைகளும்! - ரக்‌ஷா
பிரீமியம் ஸ்டோரி
News
பளபள பட்டுப்புடவையும் தகதக தங்க நகைகளும்! - ரக்‌ஷா

மாடல் மங்கைகள்

காபி தேசத்து தேவதைக்குச் சொல், சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறது தமிழ்.

பூர்வீகம்: கூர்க், படிப்பு: பயோ டெக்னாலஜி, பிடித்தது: பரதநாட்டியம், உயரம்: 5.8.

பயோடேட்டா சொல்லும் ரக்‌ஷாவுக்கு, மாடலிங்கில் உச்சம் தொடவைத்தது அவரது உயரம்தானாம்!

பளபள பட்டுப்புடவையும் தகதக தங்க நகைகளும்! - ரக்‌ஷா

`` `இவ்ளோ உயரமா இருக்கிறே நீ, மாடலிங் பண்ணலாமே'னு உசுப்பேத்தி விட்டாங்க. எனக்கும் ஆசை வந்திருச்சு. முதல் விளம்பரம் ஜாய் ஆலுக்காஸ். அதைப் பார்த்துட்டு எனக்கு நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. கர்நாடகாவை விட்டுட்டு சென்னைக்கு வந்து செட்டிலாகிட்டேன். தமிழ்நாட்டுல இருக்கணும்னா தமிழ்ல பேசணும்னு எனக்கு நானே சபதம் எடுத்துக்கிட்டேன். தமிழ் கத்துக்கிட்டேன். எம்.எஸ்ஸி படிச்சுக்கிட்டே மாடலிங் பண்ணலாம்கிற ஐடியாவுலதான் இருந்தேன். ஆனா, மாடலிங்ல பிஸியான பிறகு வேற எதைப் பத்தியும் யோசிக்கத் தோணலை'' - ரசனையாகப் பேசுகிற ரக்‌ஷா, கார்த்தியுடன் `காசா கிராண்டே' விளம்பரத்திலும், சரவணா ஸ்டோர்ஸ், லலிதா ஜுவல்லரி, லயன் டேட்ஸ், எல்.ஜி என இன்னும் ஏராளமான விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.

``ஆடிஷனுக்குப் போகும்போது முதல்ல `தமிழ்த் தெரியுமா?'னுதான் கேட்பாங்க. முன்னல்லாம் ரொம்ப ஷேமா ஃபீல் பண்ணியிருக்கேன். இப்போ யாராவது அப்படிக் கேட்டாங்கன்னா, `கவிதையே சொல்ற அளவுக்கு தமிழ்மொழியில இப்ப நான் கில்லி'னு சொல்லிக்க பெருமையா இருக்கு'' - `தமிழ்ப் பாப்பா' பட்டமே தரலாம், அவ்வளவு ஐஸ்!

ரக்‌ஷாவின் அடுத்த இலக்கு சினிமா.

பளபள பட்டுப்புடவையும் தகதக தங்க நகைகளும்! - ரக்‌ஷா


`` `பொங்கி எழு மனோகரா'னு ஒரு படம் பண்ணிட்டேன். `காலச்சக்ரா'னு ஒரு கன்னடப் படமும், தெலுங்குல ஒரு படமும், தமிழ்ல ஒரு படமும் ரிலீஸுக்காக வெயிட்டிங். மாடலிங்கும் சினிமாவும் ரெண்டு துருவங்கள். பளபளன்னு பட்டுப்புடவையும் தகதகனு தங்க நகைகளும் போட்டுக்கிட்டு கேமரா முன்னாடி நிற்கிற வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்? பெருசா டயலாக் பேசவேண்டியிருக்காது. அழகா இருக்கோ மாங்கிறதுல மட்டும் கவனமா இருந்தா போதும். ஆயிரக்கணக்குல போட்டோஸ் எடுப்போம். காலையிலேருந்து நைட் வரைக்கும் ஃபுல் மேக்கப்ல சிரிச்சுக்கிட்டே இருக்கிறது ஒருவகையான ஃபன். வேலையை ரசிச்சா மட்டும்தான் பண்ண முடியும். ஷூட் முடிச்சுட்டு வீட்டுக்கு வரும்போது வாயெல்லாம் வலிக்கும்.

சினிமா அப்படியே உல்டா. சினிமாவுக்கு, பயங்கர உழைப்பு தேவை. படம் முடியுற வரைக்கும் அந்த கேரக்டராவே வாழணும். அந்த கேரக்டருக்குள்ள இருக்கிற வரைக்கும் சாப்பிட முடியாது; தூங்க முடியாது. அது வேறவிதமான ஃபீல். எனக்கு ரெண்டுமே பிடிச்சிருக்கு. மாடலிங்ல வாய் வலிக்க சிரிச்ச மாதிரி, நடிகையாகிட்டா அழணும். க்ளிசரின் போடாமலேயே அழுதுடுவேன்.''

`நடிகையர் திலகம்' எஃபெக்ட்!

- ஆர்.வைதேகி