தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

அற்புதங்கள் `ஆன் தி வே'யில்! - அபிராமி ஐயர்

அற்புதங்கள் `ஆன் தி வே'யில்! - அபிராமி ஐயர்
பிரீமியம் ஸ்டோரி
News
அற்புதங்கள் `ஆன் தி வே'யில்! - அபிராமி ஐயர்

மாடல் மங்கைகள்

பிராமி.... அபிராமி... விளம்பரங்களில் இது அபிராமி சீஸன். ஃபார்ச்சூன் ஆயில், ஃபிளப்பர்ஸ் ஜெல்லி இரண்டும் லேட்டஸ்ட். 2017-ம் ஆண்டின் `மிஸ் தமிழ்நாடு' டைட்டில் வின்னரான இவர், பக்கா தமிழ்ப் பெண்.

``கலாக்ஷேத்ராவுல பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். மாடலிங் பண்ணணும்னு எந்த ப்ளானும் இல்லை. எதேச்சையா அமைஞ்சது. நேஷனல் லெவல் விளம்பரத்துல முதல்ல நடிச்சபோது எனக்கு மாடலிங் பற்றி பெருசா எதுவும் தெரியாது. பக்காவான போர்ட்ஃபோலியோகூட ரெடி பண்ணலை. கேமராவை ஃபேஸ் பண்ணத் தெரியாது. நிறைய சொதப்பியிருக்கேன். இன்னிக்கு அதிகபட்சம் ரெண்டு டேக்ல என் ஷாட் ஓகே ஆகிடும். நாம நேசிக்கிற வேலை நம்மள கொஞ்சம் கொஞ்சமா மாத்திப் பக்குவமாக்கிடும். எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன்'' என்று பெருமை பொங்கக் கூறுகிறார்.

அற்புதங்கள் `ஆன் தி வே'யில்! - அபிராமி ஐயர்

``புட் சட்னிக்காக `கன்ட்ரோல்... ஆல்ட்.... டெலிட்'னு ஒரு வெப் சீரிஸ்ல நடிச்சதுதான் நடிப்புல எனக்கு முதல் அனுபவம். செம ரெஸ்பான்ஸ். அந்த வரவேற்பு, என்னை வேற லெவலுக்குக் கூட்டிட்டுப்போயிடுச்சு. படங்கள்ல நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்திட்டிருக்கு. என்னுடைய லாஞ்ச் பிரமாண்டமா இருக்கணும்னு ஆசைப்படுறேன். `நீ நடிகையாகிறது பெருசில்லை... நிறைய படங்கள் பாரு... நிறைய கேரக்டர்களை அப்சர்வ் பண்ணு. உன்னுடைய ஒரிஜினாலிட்டி மிஸ்ஸாகும்னு தோணினா, அந்தப் படத்துல நடிக்காதே. உன் நடிப்புல யாருடைய சாயலும் இல்லாமப் பார்த்துக்கோ'னு ஒரு பெரிய டைரக்டர் எனக்கு அட்வைஸ் பண்ணினார். அதைத்தான் இப்போ பிராக்டீஸ் பண்ணிட்டிருக்கேன். அஜித், விஜய் படங்கள்ல நடிக்கிற ஆசை டாப் லிஸ்ட்டுல இருக்கு'' - கண்டிஷன்ஸைச் சொல்கிற கண்ணழகி, களறியிலும் எக்ஸ்பெர்ட்டாம்! வம்பிழுத் தால் எலும்புகள் உடையும் என எச்சரிக்கிறார்.

அற்புதங்கள் `ஆன் தி வே'யில்! - அபிராமி ஐயர்


``பணம், பேர், புகழ் எல்லாத்தையும்விட, என் மனசு சொல்ற விதிமுறைதான் எனக்கு முக்கியம். விளம்பரங்கள்ல நடிக்கிறபோது, ஒரு மாடலா எனக்கு இன்னும் அதிக பொறுப்பு இருக்கிறதா ஃபீல் பண்றேன். நாங்க சொல்றதை வெச்சு மக்கள் அந்த விளம்பரத்தை நம்புறாங்க. அதனால சம்பந்தப்பட்ட விளம்பரம் என்னை முதலில் கன்வின்ஸ் பண்ணினா மட்டும்தான் அதுல கமிட் ஆவேன்'' - நல்ல கொள்கைகள் வைத்திருப்பவருக்கு நல்லனவற்றில் மட்டுமே நம்பிக்கை உண்டாம்.

``திறமைமேல நம்பிக்கை இருந்தா, வேற எதைப் பத்தியும் கவலைப்படாம நமக்கான வாய்ப்புகளுக்காக வெயிட் பண்ணலாம். சரியான திறமையைத் தேடி நேரமும் வாய்ப்பும் தானா வரும். அற்புதங்கள் எப்போ வேணாலும் நடக்கலாம். எனக்கான அற்புதங்கள் `ஆன் தி வே'யில் இருக்கிறதா நம்புறேன்.''

நல்லதுங்க!

- ஆர்.வைதேகி