Published:Updated:

`என் ஸ்கின் டோன்தான் நடிக்கும் வாய்ப்பைத் தந்தது’ - `வந்தாள் ஸ்ரீதேவி’ சீரியல் நாயகி அனன்யா

`என் ஸ்கின் டோன்தான் நடிக்கும் வாய்ப்பைத் தந்தது’ - `வந்தாள் ஸ்ரீதேவி’ சீரியல் நாயகி அனன்யா
`என் ஸ்கின் டோன்தான் நடிக்கும் வாய்ப்பைத் தந்தது’ - `வந்தாள் ஸ்ரீதேவி’ சீரியல் நாயகி அனன்யா

ஸ்கி ஸ்கினை பெருமையாக நினைக்கும் காலம் இது. 'வந்தாள் ஸ்ரீதேவி' தொடரில், தன்னுடைய டஸ்கி ஸ்கின் டோன் மூலமும் இயல்பான நடிப்பின் மூலமும் கைத்தட்டல்களை அள்ளும் கதையின் நாயகி அனன்யாவிடம் பேசினேன்.

``சிவப்புதான் அழகு, செலிபிரெட்டிகள் என்றாலே ரொம்ப கலராக இருக்கணும்ங்கிறது சில வருஷத்துக்கு முன்னாடி வரை இருந்தது. இப்ப அந்த நிலைமை மலையேறி போச்சு. உலக அழகி போட்டில ஆரம்பிச்சு உள்ளூர் விளம்பர நிறுவனங்கள் வரைக்கும் டஸ்கி ஸ்கின்னோட அருமை தெரியுது. சாதாரண குடும்பப் பின்னணி கொண்ட நான் பி.காம் படிச்சுட்டு வேலை தேடிட்டு இருந்தேன்.

என்னோட ஸ்கின் டோன் பத்தி நான் வருத்தப்பட்டதே கிடையாது. நாம பண்ற டிரெஸ்லேயும் மேக்ப்லேயும்தான் நான் எப்படி தெரியுறோம்ங்கிறதே... நான் பண்ற மேக் அப், டிரெஸ் எல்லாம் திருத்தமா இருக்கிறதா என் ஃப்ரெண்ட்ஸ் சொல்வாங்க'' என்கிறவருக்கு `வந்தாள் ஸ்ரீதேவி’ தொடரில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு பற்றிச் சொன்னார்.

``ஆடிஷனுக்குப் போனேன். இந்த நிறத்துக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்னு நிறைய பேர் கிண்டல் பண்ணினாங்க. ஆனாலும், நான் மனம் தளரலை.உண்மையைச் சொல்லணும்னா மாடலிங் அனுபவம், முகபாவனையை வெளிப்படுத்துதல், டயலாக் டெலிவரி இப்படி எதுவுமே எனக்குத் தெரியாது. ஆடிஷனில் டயலாக் பேசச் சொன்னபோதுகூட அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பித்தேன். ஆனால், என்னுடைய டஸ்கி ஸ்கின் டோனுக்கும் திருத்தமான முகத்துக்காகவே சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்தான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்.

டஸ்கி ஸ்கின் டோன் உள்ள பெண்கள் லைட், டார்க்னு ரெண்டு நிறங்களையும் மிக்ஸ் மேட்ச் செய்து டிரெஸ் பண்ணினா சூப்பரா இருக்கும். ஐ - மேக்கப், ஜுவல்லரி செலக்‌ஷன்ல கவனமாக இருக்கணும்'' என்று டிப்ஸ் தந்தார்.