Published:Updated:

``இப்ப பிசினஸ், நெக்ஸ்ட் ஃபிலிம் இண்டஸ்ட்ரி!'' - குஷ்பூ மகள் அனந்திதா

``இப்ப பிசினஸ், நெக்ஸ்ட் ஃபிலிம் இண்டஸ்ட்ரி!'' - குஷ்பூ மகள் அனந்திதா
``இப்ப பிசினஸ், நெக்ஸ்ட் ஃபிலிம் இண்டஸ்ட்ரி!'' - குஷ்பூ மகள் அனந்திதா

`அன்மோல்' என்பது மேக்கப் செய்து விடும் இடம் இல்ல,மேக்கப் கத்துக்கொடுக்கும் ஓர் இடம்.

நடிகை குஷ்பூவின் இளைய மகள் அனந்திதா சுந்தருக்கு மேக்கப் துறையில் ஆர்வம் அதிகம் என்பது அவருடைய சமூக வலைதளத்தைப் பார்ப்பவர்களுக்குப் புரியும். அதனுடைய அடுத்தகட்டமாக தன் தோழி ஜயினா உடன் இணைந்து `அன்மோல்' என்ற ஆன்லைன் பிசினஸ் பக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். இது குறித்து அனந்திதாவிடம் பேசினோம்.

`அன்மோல்' என்னோட பிசினஸ்னு சொல்றதைவிட... அதை என் முதல் குழந்தைனு சொல்லலாம். என்னோட ரொம்ப நாள் கனவு இப்போ நிறைவேறிருச்சு. அன்மோலின் தொடக்கத்துக்குப் பின்னாடி ஒரு சுவாரஸ்ய கதை இருக்குது'' என்றவர் அதைப் பற்றி தொடர்ந்தார்.

``நான் ஒன்பதாவது வகுப்பு படிக்கிறப்ப எங்க ஸ்கூல்ல ஒரு கல்சுரல்ஸ் நடந்தது. அந்த புரொகிராமுக்கு நான்தான் அசிஸ்டன்ட் டைரக்டர். நிகழ்ச்சிக்கு தேவையானது எல்லாம் சிறப்பா அமைஞ்சது. திருப்தியா இருந்த நேரத்துலதான் அந்த நிகழ்ச்சிக்கு நாங்க பிக்ஸ் பண்ணியிருந்த மேக்கப் மேன் `தான் டிராபிக்ல மாட்டிகிட்டதாகவும், தன்னால வரமுடியாதுனு'னு சொன்னார். ஆடிப்போயிட்டோம்.

எனக்கு மேக்கப் பத்தி அவளோ தெரியாத அந்த நேரத்துல நிகழ்ச்சியோட நலனைத் தெரிஞ்சுகிட்டு நானே களத்துல இறங்கினேன். அங்க இருந்த அறுபத்திரண்டு ஸ்டூடன்ட்ஸ்க்கு ஒத்தை ஆளா மேக்கப் போட்டுவிட்டேன். நிகழ்ச்சி நல்லபடியா முடிஞ்சு இருந்தாலும். இன்னும் நல்லா மேக்கப் பண்ணியிருக்கலாம்னு மனசு அரிச்சுகிட்டே இருந்தது. என் குற்ற உணர்வைப் போக்க உடனே ஆன்லைன்ல பேஸிக் மேக்கப் டெக்னிக்ஸ் கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். அது கொஞ்சம் கொஞ்சமா மேக்கப் மேல உள்ள ஆர்வத்தை எனக்கு அதிகப்படுத்துச்சு. மேக்கப் கத்துக்க ஆரம்பிச்ச முதல் மூணு வருஷம். பார்க்கிற வீடியோஸை எல்லாம் முதல்ல என் முகத்துக்கு டிரை பண்ணுவேன். ரிசல்ட் நல்லா வந்திருச்சுனா போதும் உடனே வீட்ல உள்ள அம்மா, அக்கா, பாட்டினு ஒருத்தரையும் விட மாட்டேன்'' என்று சிரித்தவர் சுந்தர் சி அனந்திதாவிடம் மாட்டிய கதையைப் பகிர்ந்தார்.

``அப்பா சினிமாவுல லெஜண்ட். ஒருமுறை என் மேக்கப் டெஸ்ட் பண்ண வீட்ல யாருமே இல்ல. எல்லாரும் வெளிய போயிருந்தாங்க. இருந்தது அப்பா மட்டும்தான். அப்பா என் டிரெயலுக்கு ஒகே சொன்னதும் இரண்டு மணி நேரம் எனக்காக ஆடாம அசையாம உட்கார்ந்திருந்தாங்க. வாவ்ல... எனக்கு எங்க வீட்லேயே அம்மாவுக்கு மேக்கப் போடத்தான் ரொம்பப் பிடிக்கும். அம்மா செமையா மேக்கப் பண்ணுவாங்க. அதே மாதிரி நான் பண்ற சின்ன மிஸ்டேகைகூட ஈஸியா கண்டுபிடிச்சு அதை திருத்துவாங்க. ஸோ, அவங்ககிட்ட நிறைய கத்துக்க முடியும். இப்படி எனக்குள்ள மேக்கப் தொடர்பா சேமிச்சு வைச்சிருந்த தகவல்களை, அனுபவங்களை எல்லாம் மத்தவங்களுக்கு தரணும்னு ஆசைப்பட்டேன். என் ஐடியாவை வீட்ல சொன்னப்ப ஆல் ஹேப்பி. அப்பா டபுள் ஹேப்பி. `அட என் குட்டி பாப்பு இவ்வளவு வளர்ந்துருச்சா"னு சந்தோஷப்பட்டாங்க. அப்படி ஆரம்பிச்சதுதான் அன்மோல் மேக்கப் வெப்சைட்.

மேக்கப் வொர்க்‌ஷாப் நடத்துறோம். பிசினஸ் ஆரம்பிச்சப்ப எல்லாரும் இந்த வயசுல இது தேவையானு கேட்டாங்க. பிசினஸ் பண்ண வயசு முக்கியமில்லை ஆர்வம்தான் முக்கியம்ங்கிறதை அவங்க எல்லாம் சீக்கிரம் புரிஞ்சுப்பாங்க. `அன்மோல்' என்பது மேக்கப் செய்து விடும் இடம் இல்ல,மேக்கப் கற்றுக்கொடுக்கும் ஓர் இடம்.பார்ட்டி மேக்கப், எவ்ரி டே மேக்கப்னு நிறைய தீம்களில் சென்னையில் ஒரு நாள் ஒர்க் ஷாப் பண்ணிட்டு இருக்கோம்.அந்த ஒர்க் ஷாப்பில் நாங்க எடுத்திருக்கும் மேக்கப் தீமில் உள்ள சின்னச் சின்ன நுணுக்கங்களையும் ஒண்ணு விடாம கத்துக்கொடுப்போம். காலேஜ் கேர்ள்ஸ்தான் என் கஸ்டமர்ஸ். இதுல கிடைக்கப் போற தொகையில் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கலாம்னு இருக்கோம்'' என்றார்.

``இதுவரை நடிகை குஷ்பூவின் மகள், இயக்குநர் சுந்தர்.சி யின் மகள்னு என்னைக் கூப்பிட்டு இருந்தவங்க, இப்போ அன்மோல் நிறுவனத்தின் சி.இ.ஓனு கூப்பிடுறப்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்குனு ஓர் அடையாளம்... பிளாட்ஃபார்ம். செலிபிரெட்டீஸ் எல்லாம் எனக்கு சப்போர்ட் பண்ணியிருந்தாங்க. இப்போதைக்கு லீவ் நாள்ல வொர்க் ஷாப் நடத்திட்டு வர்றோம். இதையே ஃபேஷன், டிசைனர் டிரெஸ்னு அடுத்தகட்டத்துக்கு நகர்த்துற பிளான் இருக்கு. என்னைப் பொறுத்தவரை மேக்கப் ஃபீல்ட் என் கரியர் கிடையாது. அது ஒரு ஹாபி. படிப்பு முடிஞ்சது நெக்ஸ்ட் சினிமாதான்'' என்று கண்ணடித்து சிரித்தார் அனந்திதா சுந்தர்.

அடுத்த கட்டுரைக்கு