தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

டிரெடி-டிரெண்டி லுக்... இப்படித்தான்! - வின்யா ஏழுமலை

டிரெடி-டிரெண்டி லுக்... இப்படித்தான்! - வின்யா ஏழுமலை
பிரீமியம் ஸ்டோரி
News
டிரெடி-டிரெண்டி லுக்... இப்படித்தான்! - வின்யா ஏழுமலை

ஃபேஷன்

டிரெடிஷனல் லுக் கொடுக்கும் டிசைனர் ஆடைகள்தாம் இப்போதைய டிரெண்ட். அவற்றின் வடிவமைப்பு பற்றிய ஆலோசனைகளைச் சொல்கிறார், ஆடை வடிவமைப்பாளர் வின்யா ஏழுமலை.

தாவணி

டிரெடி-டிரெண்டி லுக்... இப்படித்தான்! - வின்யா ஏழுமலை

ஹாஃப் சாரியிலும் டிரெண்டியாக தெரிய வேண்டுமா? சில்க், மங்கள் கிரி காட்டன் மெட்டீரியலில் ஸ்கர்ட்டை வடிவமைத்து டிஷ்யூ, நெட்டட் போன்ற மெட்டீரியலில் ஹாஃப் சாரியைத் தேர்வு செய்யலாம். பிளவுஸ்களிலும் நெட்டட், டிரான்ஸ்பரன்ட் என வெரைட்டி காட்டலாம். எத்னிக் லுக் விரும்பும் பெண்கள் ரா சில்க், டஸ்ஸர் சில்க் போன்ற மெட்டீரியலில் ஸ்கர்ட் மற்றும் பிளவுஸை வடிவமைத்து டிசைனர் ஜரி, ஜார்ஜெட் மெட்டீரியலில் தாவணியை மேட்ச் செய்யலாம்.

கவுன்

டிரெடி-டிரெண்டி லுக்... இப்படித்தான்! - வின்யா ஏழுமலை

ரா சில்க், பனாரஸி, கல்யாணி காட்டன், மங்கள் கிரி காட்டன் போன்ற மெட்டீரியல்களில் லாங் கவுனை வடிவமைத்தால் டிரெடி - டிரெண்டி (Tradi - Trendy) லுக்குக்குப் பொருத்தமாக இருக்கும். யோக் பகுதியில் எம்ப்ராய்டரி வேலைப்பாடு அல்லது சில்க் பைப்பிங் என டிசைன் செய்து எத்னிக் லுக் பெறலாம். டிரெண்டி லுக் வேண்டுமா? கவுனின் மேல் பாகத்தை டிசைனர் மெட்டீரியலில் தேர்வு செய்து ஹாஃப் ஷோல்டர், கோல்டு ஷோல்டர் என வடிவமைத்து, அதற்கு கான்ட்ராஸ்ட்டான நிறத்தில் கிரேப் அல்லது ஜார்ஜெட் மெட்டீரியலில் கவுனின் கீழ்ப்பகுதியை வடிவமைக்கலாம். சிம்பிள் லுக் போதுமா? பிளெய்ன் மெட்டீரியலில் உடையை வடிவமைத்து ரஃபிள் ஸ்லீவ், பெல் ஸ்லீவ் என ஸ்லீவ்களில் வெரைட்டி காட்டிக்கொள்ளலாம். கிராண்ட் லுக் உங்கள் சாய்ஸ் எனில் யோக் மற்றும் ஸ்லீவ் பகுதியில் மிரர் வேலைப்பாடு, ஆரி வேலைப்பாடு, ஜர்தோஸி வேலைப்பாடு என டிக் செய்யலாம். கேன் கேன் (can can) அணிந்து அதற்கு மேல் கவுன் அணிந்தால் கூடுதல் அழகாக இருக்கும்.

ஸ்கர்ட்

டிரெடி-டிரெண்டி லுக்... இப்படித்தான்! - வின்யா ஏழுமலை

ஸ்கர்ட் பிரியைகள் ரா சில்க், மைசூர் சில்க், ப்யூர் சில்க், கல்யாணி காட்டன் போன்ற மெட்டீரியல்களை ஸ்கர்ட்டுக்குத் தேர்ந்தெடுக்கலாம். பிளெய்ன் ஸ்கர்ட் எனில் புரொகேட், கலம்காரி, டஸ்ஸர் சில்க் போன்ற மெட்டீரியல்களில் வடிவமைக்கப்பட்ட டாப்ஸை மிக்ஸ் மேட்ச் செய்தால் பொருத்தமாக இருக்கும். எத்னிக் லுக் விரும்புபவர்கள் ஸ்கர்ட்டின் நிறத்திலேயே லினன் அல்லது காட்டன் மெட்டீரியலைத் தேர்வுசெய்து த்ரீ ஃபோர்த் ஸ்லீவ், போட் நெக், பிரின்சஸ் கட், கிராப் டாப் என டாப்ஸை வடிவமைத்துக்கொள்ளலாம். இவற்றுடன் கான்ட்ராஸ்டான நிறத்தில் நெட்டட் துப்பட்டாவையும் சேர்த்துவிட்டால் தூள். சிம்பிள் லுக் விரும்புபவர்கள் பிளெய்ன் ரா சில்க் மெட்டீரியலில் ஸ்கர்ட்டை வடிவமைத்து அதற்கு கான்ட்ராஸ்டான  நிறத்தில் கலம்காரி மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்ட கிராப் டாப்பைத் தேர்வு செய்யலாம். கிராண்டு லுக்தான் உங்கள் சாய்ஸ் எனில் பிரின்டட் மெட்டீரியலில் டிசைன் செய்யப்பட்ட ஸ்கர்ட்டுடன்  புரொகேட் மெட்டீரியலில் ஃப்ரில் டாப் அல்லது  லாங் டாப்ஸை டிசைன் செய்துகொள்ளலாம்.

மேக்ஸி

டிரெடி-டிரெண்டி லுக்... இப்படித்தான்! - வின்யா ஏழுமலை

மேக்ஸியைப் பொறுத்தவரை டிரெடிஷனல் லுக் வேண்டும் எனில் சிங்கிள் கலர்தான் பெஸ்ட் சாய்ஸ். கேஷுவல் லுக் வேண்டும் என்பவர்கள் சிம்பிளான காட்டன் மெட்டீரியலைத் தேர்ந்தெடுத்து, உடையின் யோக் பகுதியில் பேட்டர்ன் வொர்க் செய்துகொள்ளலாம். கிராண்ட் லுக் விரும்பும் பெண்கள் ஜரி, ஜார்ஜெட், சில்க் மெட்டீரியலில் பெல் ஸ்லீவ், ரஃபிள் ஸ்லீவ் என வெரைட்டி காட்டலாம். சிம்பிள் அண்ட் நீட் லுக் விரும்புபவர்கள் கிரேப் சில்க்கில் உடையை வடிவமைத்து சில்க் மெட்டீரியலில் பேட்ச் வொர்க் செய்துகொள்ளலாம்.

அனார்கலி

டிரெடி-டிரெண்டி லுக்... இப்படித்தான்! - வின்யா ஏழுமலை

ரா சில்க், சுங்குடி காட்டன், கைத்தறி காட்டன், கோட்டா காட்டன், கேம்ப்ரிக் காட்டன், சாஃப்ட் காட்டன் போன்ற மெட்டீரியல்கள் அனார்கலி உடைகளுக்குத் தனி லுக் கொடுக்கும். டிரெடிஷனல் லுக் வேண்டும் என்பவர்கள் ரா சில்க் அல்லது பட்டு மெட்டீரியலில் பிளெய்ன் டாப்ஸை வடிவமைத்து, பட்டு அல்லது டிஷ்யூ பார்டர் வைத்துக் கொள்ளலாம். இதற்கு பஃப் ஸ்லீவ் பொருத்தமாக இருக்கும். டிரெண்டி லுக்கை தேர்ந்தெடுப்பவர்கள் ஹை நெக், போட் நெக், க்ளோஸ் நெக் என வடிவமைத்து, எல்போ ஸ்லீவ், பஃப் ஸ்லீவ், ரஃபிள் ஸ்லீவ் வைக்கலாம். பிளோயி லுக் விரும்பும் பெண்கள் டிசைனர் மெட்டீரியலை அனார்கலியின் மேல் பகுதிக்கும், கிரேப் சில்க், ஜார்ஜெட் போன்ற மெட்டீரியல்களைக் கீழ்ப்பகுதிக்கும் தேர்ந்தெடுக்கலாம். கலம்காரி மெட்டீரியலில் மொத்த உடையையும் வடிவமைத் தால் சிம்பிள் லுக்கில் வசீகரிக்கலாம்.

-சு.சூர்யா கோமதி