Published:Updated:

அஜித் சஸ்பெண்டர்ஸ், நக்மா டி-ஷர்ட், ஷாலினி மிடி டிரஸ்... இது 90'ஸ் ஃபேஷன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அஜித் சஸ்பெண்டர்ஸ், நக்மா டி-ஷர்ட், ஷாலினி மிடி டிரஸ்... இது 90'ஸ் ஃபேஷன்!
அஜித் சஸ்பெண்டர்ஸ், நக்மா டி-ஷர்ட், ஷாலினி மிடி டிரஸ்... இது 90'ஸ் ஃபேஷன்!

அஜித் சஸ்பெண்டர்ஸ், நக்மா டி-ஷர்ட், ஷாலினி மிடி டிரஸ்... இது 90'ஸ் ஃபேஷன்!

வ்வோர் ஆண்டும் டிரெண்ட்செட் பதிக்கும் ஃபேஷன் உடைகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில், 90'ஸ் ஜெனரேஷனுக்கு தனி இடமுண்டு. இது அனைவரின் ஃபேவரிட் ஃபேஷன் ஆண்டு என்றும் சொல்லலாம். அதன் தாக்கம் இன்றும் இருக்கிறது. ஆம், இன்று பெரும்பாலானவர்கள் விரும்பி அணியும் லெஹெங்கா சோலி முதல் சோக்கர் வரை அத்தனையும் 90-களின் டாப் ஃபேஷன். அவை பெரும்பாலும் திரைப்படங்களிலிருந்து ஈர்க்கப்பட்டவைதாம். அதிலிருந்து சில ஐகானிக் ஃபேஷன் என்னவென்று பார்க்கலாம்.

1994:

பிரமாண்டங்களுக்குப் பேர்போன ஷங்கரின் படைப்புகளில் மிகவும் அழகான திரைப்படம் `காதலன்'. இரண்டு ஃபிலிம் ஃபேர் விருதுகளை வென்ற இதில் பிரபுதேவா மற்றும் நக்மாவின் உடைகள் பெரும்பாலும் மாடர்ன் ரகம். அதில் நக்மா உடுத்தியிருந்த முழு நீளக்கை டி-ஷர்ட் மற்றும் High-rise 3/4 ஜீன்ஸ் பெண்களிடையே மிகவும் பிரபலமானது. `Cowboy' தீமில் உருவாக்கப்பட்ட `முக்காலா முக்காபுலா...' பாடலில் உபயோகப்படுத்தியிருந்த உடைகள் அனைத்தும் `க்ளாசிக் டச்'. இதன் பிறகே முழு நீள டிரஸ், Ball Dress போன்ற கவுன் வகைகள் தென்னிந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்யப்பட்டன. மேலும், ஆண்களுக்கென பிரின்ட்டெட் ஜாக்கெட், ஸ்ட்ரைப் டி-ஷர்ட், பெண்கள் உடைகளில் Frills, Off-shoulder போன்ற வித்தியாச பேட்டர்ன்களையும் அறிமுகம் செய்தது `காதலன்'.

1995:

டெம்பிள் இல்லாத கண்ணாடி, பிரின்ட்டெட் கோட், முகம் மறைய தாடி என ஸ்டைலிஷ் லுக்கில் `பாட்ஷா' திரைப்படம் மூலம் உலக ரசிகர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்தார் ரஜினிகாந்த். 90'ஸ் கிட்ஸ் பலராலும் அதிகம் பின்பற்றப்பட்ட ஸ்டைல் இதுதான்.

`கண்ணாளனே...', `உயிரே உயிரே...' என ஹிட் பாடல்களோடு ஐகானிக் ஃபேஷனையும் பதித்தது மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த `பாம்பே' திரைப்படம். தற்போது பெரும்பாலான இளைஞர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருக்கும் `ஸ்ட்ரைப்டு டி-ஷர்ட்' மற்றும் பெண்களின் மண உடைகளில் முதன்மையில் இருக்கும் லெஹெங்கா சோலி முதலியவற்றை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் சென்ற திரைப்படம் இது.

1997:

ஒற்றை மற்றும் இரட்டைப் பின்னல் சிகையலங்காரத்தைக் களைத்து லூஸ் ஹேர் மற்றும் உச்சந்தலை கொண்டை (Bun) டிரெண்டானது இந்த 90-களில்தான். நதியாவைத் தொடர்ந்து சிம்ரன்தான் விதவிதமான சிகையலங்காரத்துக்கு ஐகானிக் உருவமானார். வசந்த் இயக்கத்தில் வெளிவந்த `நேருக்கு நேர்' திரைப்படத்தில் சிம்ரன் மற்றும் கவுசல்யா அணிந்திருந்த காஸ்ட்யூம்கள் அனைத்தும் மக்களின் ஃபேவரிட் லிஸ்டில் சேர்ந்தன. ஷார்ட் ஸ்கர்ட், பேரலல் பேன்ட், டெனிம் ஷர்ட், கோல்டு-ஷோல்டர் டாப், டி-ஷர்ட் மேல் சட்டை அணிந்துகொள்வது எனப் பல டிரெண்டி ஸ்டேட்மென்ட்டுகளைப் பதித்தது இந்தத் திரைப்படம். 

`வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா...' என்ற வரிகளைக் கேட்டதும் சட்டென நினைவுக்கு வருவது கஜோல் மற்றும் பிரபுதேவாவின் ரம்மியமான நடனம்தான். அவர்கள் உடுத்தியிருக்கும் உடைகளும் நீங்கா இடம்பிடித்திருப்பவைதாம். மாடர்ன் உடைகள் ஒருபுறம் இருக்க, க்யூட்டான `மிடி டிரஸ்', முழு நீளக்கை Umbrella கட் சல்வார் கமீஸ் என `ஹோம்லி' தோற்றத்தை மெருகேற்றினார் `காதலுக்கு மரியாதை' மினி.

உலக அழகி ஐஸ்வர்யா ராய் முதன்முதலில் தமிழில் நடித்து வெளியான `இருவர்' திரைப்படத்தில் குறியீடுகள் ஆயிரம் உண்டு. தொழில்நுட்ப வேலைப்பாடுகள் அதிகம் நிறைந்த இந்தப் படத்தில், ஒவ்வொருவரின் உடையுமே அதிகம் பேசும். நடிகன், எழுத்தாளன், அரசியல்வாதி என ஒவ்வொரு தனிமனிதனின் இயல்பை இதில் உடைகள் மூலமே வெளிப்படுத்தியிருப்பார்கள்.

பேன்ட், ஷர்ட், டி-ஷர்ட் என சிம்பிளான ஆடை தேர்வில் சுற்றிக்கொண்டிருந்த ஆண்களை `குர்தா- பைஜாமா' பக்கம் திருப்பியது `அருணாச்சலம்' திரைப்படம். ஆண்கள் கைகளில் `காப்பு' அணியும் பழக்கமும் அதிகமானது இந்தத் திரைப்படத்துக்குப் பிறகுதான். விதவிதமான நிறங்களில் அதிக வேலைப்பாடுகள் நிறைந்த லெஹெங்கா சோலி வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு இறக்கப்பட்டதில் இந்தத் திரைப்படத்தில் நடித்த சவுந்தர்யாவின் பங்கும் இருக்கிறது.

1998:

இன்று பெரும்பாலான பெண்கள் அதிகம் விரும்பி அணியும் கிராப் டாப், ஒன்-ஷோல்டர் டாப், சோக்கர், டாங்ளர் போன்றவை ஷங்கர் இயக்கத்தில் வெளியான `ஜீன்ஸ்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் உபயோகப்படுத்தியதுதான். `கண்ணோடு காண்பதெல்லாம்...' பாடலில் அவர் அணிந்திருந்த மஞ்சள் மற்றும் பச்சை வண்ண லெஹெங்கா சோலி இன்றும் பலருடைய எவர்கிரீன் சாய்ஸ்.

அடர்ந்த நிறங்களை மட்டுமே தேர்வுசெய்துகொண்டிருந்த மக்களை ஆரஞ்சு, பிங்க், மஞ்சள், சிவப்பு என பிரைட் நிறங்களின் பக்கம் திருப்பியது கமல், பிரபுதேவா, சவுந்தர்யா மற்றும் ரம்பா நடிப்பில் வெளியான `காதலா காதலா' திரைப்படம். இதில் இவர்கள் அணிந்த `அனிமல் பிரின்ட்' காஸ்ட்யூம்ஸ் மெகா ஹிட்.

மேலும், 1999-ல் வெளியான `வாலி', `படையப்பா' போன்ற திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட `சஸ்பெண்டர்' பேன்ட், ஷர்ட் ஓவர் டீ-ஷர்ட், டெனிம் கோட் முதலியவை மக்களாலும் அதிகம் பயன்படுத்தப்பட்டன. `போனி டெயில்' ஹேர்ஸ்டைல், `ஃபிரீ ஹேர் அண்டு ஹேர்பேண்டு' போன்றவையும் பெண்களின் டாப் லிஸ்டில் இணைந்தன.

இவற்றில் உங்கள் சாய்ஸ் எது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு