Published:Updated:

நியான், போஹோ, ஹிப்பி... பெண்களுக்கான 2020-ன் ‘டாப் 10’ ஃபேஷன் டிரெண்டுகள்

இந்த இடத்துக்கு இந்த டிரெஸ்தான் அணிய வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை மீறி, `இதுதான் எனக்கு சௌகர்யம்' எனும் `கம்ஃபர்ட் க்ளாத்திங்' முறைதான் டிரெண்டு.

பந்தனா நருலா

புது வருஷத்துல நீங்க புதுசா இருக்கணும்னா, இந்த வருடத்தின் ஃபேஷன் டிரெண்டை தெரிஞ்சுக்கணும்ல! 2020-ல் டிரெண்ட் ஆகக்கூடிய ஃபேஷன் விஷயங்களை கணித்துச் சொல்கிறார், ஃபேஷன் டிசைனர் பந்தனா நருலா.

1
வித்தியாசமான டிரேப்பிங் ஸ்டைல்

டிரேப்பிங் ஸ்டைல்

சென்ற வருடத்தில் `தோதி புடவை' டிரெண்டானதுபோல, இந்த வருடமும் வித்தியாசமான டிரேப்பிங் ஸ்டைல் டிரெண்டாகும்.

வித்தியாசமான டிரேப்பிங் ஸ்டைல்

புடவைக்கு மட்டுமல்லாமல் வெஸ்டர்ன் டிரெஸ், இண்டோ-வெஸ்டர்ன் ஸ்டைல் என அனைத்து விதமான உடைகளிலும் டிரேப்பிங் முறை உருவாகும்.

கம்ஃபர்ட் கிளாத்திங்

இதுதான் டிரெண்டு, இந்த இடத்துக்கு இந்த டிரெஸ்தான் அணிய வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை மீறி, `இதுதான் எனக்கு சௌகர்யம்' எனும் `கம்ஃபர்ட் க்ளாத்திங்' முறை டிரெண்டாகும்.

டிரெண்டி கட்ஸ்

ஃபிட்டாக உடையணிவது மட்டுமல்லாமல் உடையின் கைகள், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் `கட்' கொடுத்து வடிவமைக்கப்பட்ட உடைகள் விரும்பி அணியப்படும்.

'சில்லவுட்' டிரஸ் ( Bandana Narula, unsplash )

ஏ லைன் டிரெஸ், பால்கவுன், மெர்மைடு ஷேப் புடவை என உடலின் வடிவத்தை அழகுபடுத்திக் காட்டும் `சில்லவுட்' எனப்படும் உடைகள் டிரெண்டாகும்.

2
'ஃப்ளோரல்' டிசைன்

போஹோ ப்ரின்ட்

சென்ற வருடத்தின் டிரெண்டான `ஃப்ளோரல் டிசைன்' இந்த வருடமும் தொடரும்.

'போஹோ' ப்ரின்ட்
'போல்கா' டிசைன் ( unsplash )

இந்த வருடம் சதுரம், செவ்வகம், வட்டம், கோடுகள் என ஜியாமெட்ரிக் வடிவத்தினாலான போஹோ ப்ரின்ட்(Geometric Boho Prints) மற்றும் வட்ட வடிவப் புள்ளிகளைக் கொண்ட `போல்கா' டிசைன்கள் பெரிய அளவில் டிரெண்டாகும்.

3
பேஸ்டல் மற்றும் நியான் கலர்

நியான் கலர்

சென்ற வருடத்தில், தினசரி அணியும் உடையிலிருந்து மணமகளுக்கான உடைவரை `ஹிட்' அடித்த வெளிர் நிறங்களான `பேஸ்டல் கலர்ஸ்' இந்த வருடமும் டிரெண்டில் இருக்கும். அதே சமயம் கண்களைப் பறிக்கும் பளீர் நிறங்களான `நியான்' கலரும் ஹிட்டாகும்.

டிசைனர் உடை

அனைவரும் ஒரே மாதிரியான உடையில் வலம்வருவது குறைந்து, தனித்துவமாக உடையணிவதில் ஆர்வம் அதிகரிக்கும். எனவே, தனித்துவமான டிசைனர் உடைகளுக்கு டிமாண்ட் அதிகமிருக்கும்.

4
ஃபிளிப் ஃபிளாப்ஸ் காலணி ( freepik )

கிளாடியேட்டர் காலணி

`தாங்' எனப்படும் `ஃப்ளிப் ஃப்ளாப்ஸ்' காலணிகளை கல்லூரிப் பெண்கள் மட்டுமல்லாமல் அனைவரும் விரும்பி அணிவர். ஹீல்ஸ் செருப்புகளைவிட இந்த மாதிரியான ஃபிளாட் செருப்புகள் அணிவதற்கும் நடப்பதற்கும் வசதியாக இருக்கும்.

கிளாடியேட்டர் காலணி ( pexels )

அதிகமான அளவில் ஸ்ட்ராப்கள் இணைக்கப்பட்ட கிளாடியேட்டர் காலணியும் டிரெண்டாகும்

5
'ஸ்லீக்' ஹேர் ஸ்டைல்

`பிக்டெய்ல்' ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைலைப் பொறுத்தவரை டெகரேட்டிவ் க்ளிப், ஹேர் பேண்ட் போன்ற ஹேர் அக்ஸசரீஸ் மற்றும் மெஸ்ஸி பன், ஃபிஷ் பிரைடு போன்ற ஹேர் ஸ்டைல்களைத் தவிர்த்து, படிய தலைவாரும் முறையான `ஸ்லீக்' ஹேர் ஸ்டைல் டிரெண்டாக மாறும்.

ஹார்ஸ்டெய்ல் & பிக்டெய்ல் ( freepik )

`ஹார்ஸ்டெயில்' எனப்படும் குதிரைவால் ஹேர் ஸ்டைலைப் போல, `பிக்டெய்ல் '(Pigtail) எனப்படும் கூந்தலின் நுனிப்பகுதி சுருண்டிருக்கும் ஸ்டைல் டிரெண்டாகும்.

6
'ஹிப்பி' ஜுவல்லரி ( unsplash )

 `ஹிப்பி' ஜுவல்லரி

எப்போதும் அணிவது போன்ற கம்மல், செயின், வளையலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் `ஹிப்பி' போன்று வித்தியாசமான நகைகள் விரும்பி அணியப்படும்.

'சங்க்கி' ஜுவல்லரி

அளவில் பெரிதான, பல அடுக்குகளைக் கொண்ட செயின், கம்மல், வளையல் போன்ற `சங்க்கி'(Chunky) நகைகள் டிரெண்டாகும்.

'போஹோ' ஜுவல்லரி ( pexels )

அதேபோல் மரம், களிமண் போன்ற இயற்கைப் பொருள்களால் ஆன `போஹோ ஜுவல்லரி (Boho Jewellery)' டீன் பெண்கள் மத்தியில் ஹாட் டிரெண்டாக வலம்வரும்.

7
டோடெ பேக் ( unsplash )

பார்ட்டிகிளட்ச்

எவர் கிரீன் டிரெண்டான `டோடெ பேக் (Tote Bag)' இந்த வருடமும் பரவலாகப் பயன்படுத்தப்படும். இது வித்தியாசமான மெட்டீரியல்களில் ஹிட் அடிக்கும்.

பார்ட்டி கிளட்ச் ( freepik )

வட்டம், சதுரம், செவ்வகம் மட்டுமல்லாமல் வித்தியாசமான வடிவங்களில் டிசைன் செய்யப்பட்ட `பார்ட்டி கிளட்ச்' டிரெண்டாகும்.

8
நோ மேக்கப் லுக் ( freepik )

`பளீர்' நிற லிப்ஸ்டிக்

சென்ற வருடத்தைப் போலவே `நோ மேக்கப் லுக்' எனப்படும் `நியூட் மேக்கப்' இந்த வருடமும் தொடர்ந்து டிரெண்டில் இருக்கும். என்றாலும் இந்த வருட டிரெண்டில் பளீர் நிற லிப்ஸ்டிக் அறிமுகமாகும்.

பளீர் நிற லிப்ஸ்டிக் ( pexels )

நியூட் மேக்கப்புடன் பளீர் நிற லிப்ஸ்டிக் அணிந்து டிரெண்டியாக வலம் வருவதை பெண்கள் விரும்புவார்கள்.

9
'பெல்' ஸ்லீவ் பிளவுஸ்

`போ &டை' பிளவுஸ்

ஜீன்ஸ், ஸ்கர்ட் போன்ற உடைகளுடன் அணியக்கூடிய வெஸ்டர்ன் டாப்ஸின் கைப்பகுதி மிகைப்படுத்தப்பட்ட வடிவங்களில் இருக்கும்.

'போ & டை' பிளவுஸ் ( pinterest )

கழுத்துப் பகுதியில் `போ & டை' போன்ற வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட வெஸ்டர்ன் பிளவுஸ் `ஹாட்' டிரெண்டில் இருக்கும்.

10
இண்டோ - வெஸ்டர்ன் பிளவுஸ்

இண்டோ - வெஸ்டர்ன் பிளவுஸ்

புடவைக்கு வழக்கமான ஜாக்கெட் மற்றும் ஆரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஜாக்கெட்டைவிட, வித்தியாசமான வெஸ்டர்ன் மற்றும் இண்டோ - வெஸ்டர்ன் பிளவுஸ்கள் விரும்பி அணியப்படும்.

இண்டோ - வெஸ்டர்ன் டிரேப்பிங்

புடவை உடுத்தும் முறையிலும் இண்டோ - வெஸ்டர்ன் டிரேப்பிங் ஸ்டைல் அதிகளவில் விரும்பப்படும்.