Published:Updated:

பெண்களுக்கு ஃபியூஷன் புடவை, ஆண்களுக்கு டிசைனர் ஷர்ட்... ட்ரெண்டி பொங்கல் கலெக்‌ஷன்!

ட்ரெண்டி பொங்கல் கலெக்‌ஷன்
ட்ரெண்டி பொங்கல் கலெக்‌ஷன்

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில், நீங்கள் தனித்துத் தெரியும்படியான டாப் 5 ட்ரெண்டி ஆடைகளின் அப்டேட்டுகளை பகிர்கிறார் சென்னையில் உள்ள `வஸ்த்ரா பொட்டீக்'கின் உரிமையாளர் தீபா.

`தைப் பொங்கலும் வந்தது

பாலும் பொங்குது

பாட்டு சொல்லடியோ...' என்று பாடி மகிழும் தருணம் நெருங்கிவிட்டது.

வீட்டைச் சுத்தம் செய்து, வெள்ளையடித்து, வயல்களில் விளைந்த புதுநெல், காய்கறிகள் என அனைத்தையும் சூரியனுக்கு படையலிட்டு, கோமாதாவைக் கொண்டாடி நன்றி சொல்லும் தமிழர் திருநாள்தான் பொங்கல். இப்பாரம்பர்யத் திருநாளில் புதுமை புகுவது, புத்தாடையில்தான்.

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில், நீங்கள் தனித்துத் தெரியும்படியான டாப் 5 ட்ரெண்டி ஆடைகளின் அப்டேட்டுகளை பகிர்கிறார் சென்னையில் உள்ள `வஸ்த்ரா பொட்டீக்'கின் உரிமையாளர் தீபா.

`தலைப்பொங்கல்' தம்பதிகளுக்கு:

Trendy saree
Trendy saree

ட்ரெடிஷனல் டச் உள்ள பச்சை மற்றும் மெரூன் நிறங்களில் வடிவமைக்கப்பட்ட ப்யூர் சில்க் `ஃபியூஷன் புடவை (Fusion Saree)' இது. அதாவது இதை புடவையாகவும் உடுத்திக்கொள்ளலாம்; ஹாஃப் சாரியாகவும் அணிந்துகொள்ளலாம். மயில்களை கண்முன் நிறுத்தி இருக்கிறது இப்புடவையில் செய்யப்பட்டுள்ள ஆரி வேலைப்பாடு.

Couple costumes
Couple costumes

புதுமாப்பிள்ளையின் அடையாளமான பட்டு வேஷ்டி சட்டைதான் என்றாலும் சட்டையை ஹைலைட் செய்யும் விதமாக, புதுப்பெண்ணின் புடவையில் மிளிரும் மயில் டிசைனை சட்டையின் பட்டன், காலர் மற்றும் கஃப் பகுதிகளில் வடிவமைத்திருப்பது, மாப்பிள்ளைக்கு ரிச் தோற்றத்தைத் தரும்.

இந்த ட்ரெண்டி காம்போ லுக் உங்கள் தலைப்பொங்கலுக்கான பக்கா சாய்ஸ்.

தாவணி தேவதை:

Benarasi Half saree
Benarasi Half saree

ஷிஃபான், ஜார்ஜெட் போன்ற மெட்டீரியல்களில் மட்டுமே ஹாஃப் சாரீஸ் அணிந்தவர்களுக்கு, இந்த பனாரஸி தாவணி செட் நிச்சயமாக ஒரு ஃப்ரெஷ் லுக் தரும்.

ப்ளைன் சுடிதாருக்கு பனாரஸ் துப்பட்டா அணியும் ஸ்டைல் தற்போது டீன் பெண்கள் மத்தியில் பாப்புலராக இருக்கிறது. இந்தப் பாரம்பர்ய பொங்கல் திருநாளில், பனாரஸ் துப்பட்டாவையே தாவணியாக மாற்றி அணிவது, நியூ லுக் கொடுக்கும்.

Benarasi Half saree
Benarasi Half saree

எப்போதும் பாவாடை மற்றும் ஜாக்கெட் ஒரே கலரிலும் தாவணி வேறு கலரிலும் அணிவதுதான் வழக்கம். ஆனால், இவை மூன்றையுமே வெவ்வேறு நிறங்களில் அணிவது வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கும்.

சில்வர் டிஷ்யூ புடவை:

Silver Tissue sarees
Silver Tissue sarees

அலுவலகங்களில் பொங்கல் விழா களைகட்டும் இத்தருணத்தில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இப்புடவை சிறந்த தேர்வாக இருக்கும்.

ஜரிகை வைத்த பட்டுப்புடவைகளின் ஹெவி வெயிட்டை குறைப்பதற்காக வந்த `சாஃப்ட் சில்க்' புடவையின் வரிசையில் புதுவரவுதான் இந்த `சில்வர் டிஷ்யூ சாரி'

Silver Tissue saree
Silver Tissue saree

பார்ப்பதற்கு ஹெவி லுக்காக தெரிந்தாலும் அணிந்தால் மிக லேசாக இருப்பதோடு கசங்கவும் செய்யாது. இந்த ட்ரெண்டியான புடவைக்கு `சிக்கு கோலம்' மற்றும் அனிமல் ப்ரின்ட் ஹைலைட்.

பனாரஸி அனார்கலி:

Benarasi Ruffle Gown
Benarasi Ruffle Gown

பிளாக் அண்ட் ஒயிட் காலத்திலிருந்தே `பனாரஸி' புடவைக்கு பெண்கள் மத்தியில் ஒரு கிரேஸ் இருக்கிறது. ஆனால், இன்றைய பெண்களுக்கு அந்தப் புடவை அணிவதில் தயக்கம் இருந்தால், அதில் ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து அதை ஃபுல் கவுனாக மாற்றிக்கொள்ளலாம்.

இப்போது ட்ரெண்டாக இருக்கும் ரஃபல்ஸ் டிசைன் மற்றும் வெயிஸ்ட் பெல்ட்டுடன் வடிவமைக்கப்பட்ட இது, கல்லூரி பெண்களுக்கான கலக்கல் கவுன்.

டூ இன் ஒன் ட்ரெஸ்:

2 in 1 Dress
2 in 1 Dress

ரெகுலரான பட்டுப் பாவாடை, தாவணியிலிருந்து சற்று ட்ரெண்டியாக உடையணிய விரும்புபவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இது. போச்சம்பள்ளிப் புடவைகள் நம் எல்லோருக்கும் பரிச்சயம். அந்தப் பாரம்பர்ய மெட்டீரியலில் ட்ரெண்டியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உடையை பேன்டுடன் அனார்கலியாகவோ முழு நீள கவுனாகவோ அணியலாம்.

2 in 1 Dress
2 in 1 Dress
மைக்கேல் ஜாக்ஸன் தொப்பி, இளையராஜா குர்தா, விஜயலட்சுமியின் பொட்டு... இசைஞர்களின் ஃபேஷன் ஸ்டேட்மென்ட்!

அதிலும், ஸ்லீவ்களில் பொருத்தப்பட்ட காசுமாலையின் வேலைப்பாடுகள், விழாக்காலத்துக்கே உரித்தான கிராண்டு தோற்றத்தைக் கொடுக்கும். பல வண்ணங்களில் வசீகரிக்கும் இந்த போச்சம்பள்ளி உடைக்கு கற்கள் மற்றும் முத்துகள் பதித்த நெக்லெஸ், சோக்கர், ஜிமிக்கி, வளையல் போன்ற பாரம்பர்ய நகைகள், அல்லது ஆக்ஸிடைஸ்டு ஜுவல்லரி என இரண்டுமே பொருந்தும். எந்த வயதினரும் இந்த உடையை அணியலாம் என்பது கூடுதல் சிறப்பு.

அடுத்த கட்டுரைக்கு