Published:Updated:

ஃபேஷன் ஸ்டுடியோ!

கலர்ஃபுல் பகுதிடிரெஸ் டிசைனிங் இந்துலேகா.சி

ஃபேஷன் ஸ்டுடியோ!

கலர்ஃபுல் பகுதிடிரெஸ் டிசைனிங் இந்துலேகா.சி

Published:Updated:

சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் 'XXL டீனா வின்சென்ட்’, பத்தோடு பதினொன்று மாதிரியான டிரெஸ் டிசைனிங் ஸ்டுடியோ அல்ல. XXL  சைஸ் உடைகளுக்கான இந்தியாவின் முதல் பிரத்யேக டிசைனிங் ஸ்டுடியோ. அதன் நிர்வாகி டீனா வின்சென்ட், பேச்சிலும் ரசிக்க வைக்கிறார்.

''சென்னைப் பெண் நான். ஸ்கூல்ல சயின்ஸ் ஸ்டூடென்ட்டா இருந்தப்போ தவளை, கரப்பான்பூச்சியை கட்டிங், வெட்டிங் பண்றது பிடிக்காம, 'டாக்டர் ஆகமாட்டேன்'னு பிடிவாதம் பண்ணி, கேட்டரிங் படிக்கிறேன்னு கேட்டேன். அம்மா தடா போட, ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ்ல டிகிரி முடிச்சேன். உடனே கல்யாணம். சினிமா நடிகர் வின்சென்ட்தான் கணவர். அழகா ரெண்டு குழந்தைங்க. ஏதாச்சும் பண்ணணுமேனு ஆசைப்பட்டு, திரும்ப கட்டிங், வெட்டிங் பண்ற வேலைக்கு வந்துட்டேன். இந்த முறை கரப்பானை வெட்டல, க்ளாத் வெட்ட ஆரம்பிச்சுட்டேன்!''

''அதெப்படி திடீர்னு டிரெஸ் டிசைனிங்கில் இறங்க முடியும்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபேஷன் ஸ்டுடியோ!

''திடீர்னு எல்லாம் இல்லீங்க. சின்ன வயசுல என்னோட சிஸ்டர்ஸ் எல்லாம் ரெடிமேட் டிரெஸ் எடுத்தாலும், நான் மட்டும் மெட்டீரியல் வாங்கி, டெய்லர்கிட்ட சொல்லி எனக்குப் பிடிச்ச மாதிரி தைச்சுதான் போடுவேன். காலேஜ் முடிச்ச சமயம், என் ஃப்ரெண்ட்ஸ் கல்யாணத்துக்கு எல்லாம் டிரெஸ் டிசைன் பண்ணிக் கொடுத்தேன். அந்த பிசினஸ் நல்லா வொர்க் அவுட் ஆனதும், இத்தாலிக்குப் போய் டிரெஸ் டிசைனிங் படிச்சேன்.

ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் டிரெஸ் தைச்சுப் போடறதுக்கு எல்லாம் நேரமில்லாம போக, ரெடிமேட் டிரெஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டேன். குழந்தை பிறந்ததும் வெயிட் போட்டதால, ரெடிமேட் டிரெஸ் எடுக்கறது திண்டாட்டமாயிடுச்சு. நமக்குப் பிடிச்ச டிசைனா இருக்கும். ஆனா, சைஸ் பத்தாது. எல்லா கடைகள்லயும் ஸ்மால், மீடியம், லார்ஜ் சைஸ்லதான் கலெக்ஷன்ஸ் இருக்கும். XL
, XXL  சைஸ் கலெக்ஷன் மிகக்குறைவாதான் இருக்கும்.

ஃபேஷன் ஸ்டுடியோ!

அப்போதான் எனக்குள்ள கேள்விகள் குடாய ஆரம்பிச்சுதுங்க. 'குண்டானவங்க அழகா டிரெஸ் பண்ணக் கூடாதா? இல்ல, அழகா டிரெஸ் பண்ண முடியாதா? குண்டா இருக்கிறவங்க எப்படி டிரெஸ் பண்ணினாலும் அவங்க அழகா இருக்க மாட்டாங்கனு இருக்கிற கருத்தை உடைக்கணும்'னு கேள்விகளா கிளம்ப, 'XXL டீனா வின்சென்ட்’ ஆரம்பிச்சேன்!' - தன்னுடைய டிரெஸ் டிசைனிங் ஸ்டுடியோவின் வரலாறு சொன்ன டீனா, தன் கணவர் வின்சென்ட் தயாரித்த 'சில நேரங்களில்’ படத்துக்கு காஸ்ட்யூம் டிசைனர் என்பதுடன், கணவர் நடிக்கும் எல்லா படங்களிலும் அவருக்கான உடைகளை டிசைன் செய்கிறார்.

''என்னுடைய XXL  ஸ்டுடியோவில் குழந்தைகள் முதல் பெரியவங்க வரை, ஆண், பெண் என எல்லாருக்கும் டிசைன் செய்யறேன். ஆனா, XXL டிரெஸ்தான் என் கடைக்கான ஸ்பெஷல் விசிட்டிங் கார்டு!'' என்பவர்...

''கடையில ஒரு டிரெஸ் வாங்கிப் போடும்போது அந்த டிரெஸ் ஒரு டெய்லர் உருவாக்கினதா இருக்கும். இதுவே ஒரு டிசைனிங் ஸ்டுடியோவில் வாங்கிப் போட்டா, அந்த டிரெஸ் ஒரு டிசைனர் உருவாக்கினதா இருக்கும். சிம்பிளா சொல்லணும்னா, டெய்லருடையது தியரிடிக்கல் வேலை; குறிப்பிட்ட அளவுக்கு குறிப்பிட்ட டிசைனில் வெட்டி தைப்பாங்க. ஆனா, டிசைனருடையது க்ரியேட்டிவ் வேலை; குறிப்பிட்ட அளவுக்கு புதுசா ஒரு டிசைனை உருவாக்குவாங்க. அழகான டிரெஸ்ஸை வாங்கி உடுத்துறதுக்கும், நமக்கான டிரெஸ்ஸை அழகாக்கி உடுத்துறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே!'' என்று சிரிக்கிறார்.

அடுத்த இதழில் இருந்து கலர்ஃபுல் ஃபேஷன் கலாட்டாவை ஆரம்பிக்கவிருக்கிறார் டீனா. ஃபேஷன் காதலிகளே, காத்திருங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism