Published:Updated:

இன்டீரியர்..!

உங்கள் கனவு இல்லம், இங்கே நனவாகும்!இந்துலேகா. சி, படங்கள்: எம்.உசேன்

இன்டீரியர்..!

உங்கள் கனவு இல்லம், இங்கே நனவாகும்!இந்துலேகா. சி, படங்கள்: எம்.உசேன்

Published:Updated:

''பார்த்துப் பார்த்து கட்டின என்னோட கனவு இல்லத்துக்கு, இன்டீரியர் செய்து கொடுங்கனு, எங்ககிட்ட வந்த ஒருத்தரோட கனவு இல்லத்தை, கனவு உலகமாவே மாத்தி கொடுத்திருக்கோம்'' என்று ரைமிங்காகச் சொன்ன, சென்னை, 'டூ மை ஹோம்’ நிறுவனத்தின் சி.இ.ஓ-வான பாலாஜி ஸ்ரீனிவாசன், அந்தக் கனவு உலகத்தை அப்படியே கண்முன்னே கொண்டு வந்தார்.

''இந்த வீட்டைப் பொறுத்தவரை, போன இதழில் சொன்ன மாதிரியே, வீட்டை பெருசா காட்டறதுக்கு லைட் கலர்களான பேஜ் கலர், குறிப்பா வொயிட் கலர் கான்செப்ட்லயே டிசைன் செய்தோம்.

இன்டீரியர்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹால்ல ஒரு கண்ணாடி பார்ட்டிஷன் வெச்சு, டைனிங் ஹால்... அதுல இருந்து கொஞ்சம் தள்ளி ஓபன் கிச்சன். இந்த ஓபன் கிச்சன் பெருசா தெரியறதுக்கு வொயிட் கலர். இதுல கொஞ்சம் வித்தியாசம் காட்டறதுக்கு ஆரஞ்சு கலரும் சேர்த்திருக்கோம். ஹால்ல இருக்கிற பூஜை கப்போர்டு மற்றும் சீலிங் ரெண்டுக்கும், வொயிட் கலரை மீறி ஆரஞ்சு டாமினேட் செய்யாத மாதிரி, ஜஸ்ட் சந்தனத்தை தெளிச்சா எப்படி இருக்குமோ... அப்படி, ஆரஞ்சு டச் கொடுத்திருக்கோம்.

இது முழுக்க வீட்டுக்காரரோட விருப்பத்துக்கு ஏற்ப, அவங்களோட ராசிக்கான கலர் கான்செப்ட் மற்றும் வாஸ்து எல்லாம் கலந்து  டிசைன் செய்தது.

கிச்சன்: இங்கே வொயிட் அண்ட் ஆரஞ்சு கலர்தான். அடுப்பு, சிம்னி, மேடை எல்லாமே வொயிட். கிச்சன்ல நார்மலா கிரானைட் மேடை செய்வாங்க. இவங்க கொஞ்சம் ஹை பட்ஜெட் க்ளையன்ட். ஸோ, வொயிட் கொரியன் டாப் மேடை டிசைன் செய்தோம். இது வொயிட் கலர் கான்செப்ட்டுக்கு பொருத்தமா செட் ஆகிடுச்சு. சுவருக்கு, டிசைனர் டைல்ஸ் ஃபிக்ஸ் செய்தோம். இது கிச்சனை இன்னும் ரிச்சாக காட்டுது.

கப்போர்டுகள்ல ஹேண்டில் கிடையாது. தொட்டாலே திறக்கிற மாதிரி சென்ஸார் முறையில் டிசைன் செய்திருக்கோம். அதேபோல் திறந்ததும் எரியும் விதத்தில் லைட்களும் செட் செய்திருக்கோம். பெரும்பாலும் வீடு முழுக்க இருக்கற கப்போர்டுகளுக்கும் இதே ஸ்டைலைத்தான் ஃபாலோ பண்ணியிருக்கோம்.

இன்டீரியர்..!

வீடு முழுக்க லைட்ஸ், எலெக்ட்ரானிக் செக்யூரிட்டி அனைத்தையும் ஆபரேட் செய்யுற மாதிரி ஆட்டோமேஷன் செய்திருக்கோம். இதை வீட்டுக்காரரோட ஐபேட் மூலமா ஆபரேட் பண்ணலாம்.

பெட் ரூம்: இந்த வீட்டு குட்டி ஏஞ்சல்ஸுக்காக டிசைன் செய்துள்ள இந்த பெட் ரூமுக்கு லாவண்டர் கலர். வாட்ரோப்ல லாவண்டர் கலர் கஸ்டமைஸ்டு கைப்பிடிகள் டிசைன் செய்திருக்கோம். ஜன்னல் ஸ்க்ரீன் எல்லாமே டபுள் லேயர். அதாவது, அதிக வெளிச்சத்துக்கு முதல் லேயரா ஷீர் ஸ்க்ரீன். சன் லைட்டை பிளாக் செய்யறதுக்காக அடுத்த லேயர் திக்கா டிசைன் செய்திருக்கோம்.

இன்டீரியர்..!

மாஸ்டர் பெட்ரூம்: ஃப்ரெஷ் ஃபீல் கிடைக்கறதுக்காக க்ரீன் மற்றும் வழக்கம் போல் இடம் விசாலமா தெரியறதுக்காக பேஜ் கலர் காம்பினேஷன் செய்திருக்கோம். கப்போர்ட், கட்டில், வாட்ரோப் எல்லாமே அபூர்வமான, லேட்டஸ்ட் வரவான பேர்ள் ஃபினிஷ் டிசைன் செய்திருக்கோம். அட்டாச்டு பாத்ரூம் வித் வெஸ்டர்ன் டைப் டாய்லெட், ரெண்டையும் ரொம்ப ஹை எண்ட், மாடர்ன் பாத் ரூம் அக்ஸசரீஸ் யூஸ் செய்து, காம்பேக்டா டிசைன் செய்திருக்கோம். இதில் ரெய்ன் ஷவர், ஸ்டீம், போன், ரேடியோ எல்லா வசதியும் இருக்கு.

இன்டீரியர்..!

ஆக மொத்தம், பாத்துப் பாத்து டிசைன் செய்ததால், வீடு முழுக்க பொருட்கள் இறைஞ்சு கிடக்காம, அழகா ஸ்டோர் செய்யப்பட்டு எப்பவும் நீட் லுக்ல இருக்கு. வொயிட் கலர் கான்செப்ட் பாக்கறதுக்கு நல்லாவே இருக்கும். ஆனா, முறையாக பராமரிக்கணும். இல்லாட்டி, அழகு கெட்டுடும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism