''தீபாவளி பர்ச்சேஸ்ல பிஸியா இருப்பீங்க. பொதுவா, டிரெஸ்ல பார்க்க வேண்டிய முதல் அம்சம், கலர். அந்த சூப்பர் கலர் உங்களுக்கும் சூட் ஆயிட்டா, எல்லோரும் 'வாவ்’ சொல்லுவாங்க உங்க தீபாவளி டிரெஸ்ஸைப் பார்த்து!'' என்று சொல்லும் சென்னை, நுங்கம்பாக்கம், 'XXL டீனா வின்சென்ட்’ நிர்வாகி டீனா, யார் யாருக்கு என்னென்ன நிறங்கள் பொருந்தும் என்ற கலர் சீக்ரெட்ஸ் சொல்றாங்க இந்த இதழ்ல!  

''வெளிநாடுகளில் எல்லாம் டார்க் அல்லது லைட் கலர் ஆடைகள்தான் அணிவாங்க. நம்ம நாட்டுல ராணி பிங்க் (பஞ்சு மிட்டாய் கலர்), ஆரஞ்சு, கிளிப்பச்சைனு பிரைட் கலர் ஆடைகளைதான் அதிகமா விரும்புவாங்க. இப்போதைய டிரெண்டும் நியான் கலர்ஸ்னு சொல்ற பிரைட் கலர்ஸ்தான். லோக்கலா சொல்லணும்னா.... அடிக்கிற கலர்ஸ்!

சரி, யார் யாருக்கு என்னென்ன கலர்ஸ்னு பார்க்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபேஷன் ஸ்டுடியோ! - 2

பிரைட் கலர்ஸ்

ராணி பிங்க், ஆரஞ்சு இதுபோன்ற கலர்ஸ் இவங்களுக்குதான் சூட் ஆகும்னு குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி, நிறமா இருக்கிறவங்களுக்கு மட்டும் இல்ல, சமயத்துல மாநிறமா இருக்கிறவங்க, கறுப்பா இருக்கிறவங்கனு எல்லாருக்குமே சூட் ஆகலாம். ஏன்னா... அது சரும நிறத்தைவிட, அதன் ஈவன் டோனைப் பொறுத்தது.

ரெட் அண்ட் மெரூன்

இண்டியன் ஸ்கின் டோனுக்கு பக்காவா சூட் ஆகும். இந்த ரெண்டு கலர்ஸ்லயும், பொதுவா எந்த நிறத்தில் உள்ளவங்களும் கண்ணை மூடிட்டு டிரெஸ் வாங்கிடலாம்.

ப்ளூ  

இது சிலருக்குப் பொருந்தும், சிலருக்குப் பொருந்தாது. அதேசமயம் பீகாக் ப்ளூ, பர்ப்பிள், இண்டிகோ இந்த நிறங்களெல்லாம், இந்திய சருமத்தை அழகா எடுத்துக்காட்டும்.

மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு இந்த மூணு கலர்ஸ்லயும் நிறைய ஷேட்ஸ் இருக்கும். உதாரணமா, வெளிர் மஞ்சள், அடர் மஞ்சள், மாம்பழ மஞ்சள்னு நிறைய ஷேடுகள் உண்டு. அப்படி இந்த ஷேடுகளில் உங்களுக்குப் பொருத்தமானதா பார்த்து தேர்வு செய்யுங்க.

ஹேப்பி ஷாப்பிங்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism