சென்ற இதழில் எந்தெந்த கலர், யார் யாருக்குப் பொருந்தும்னு டிப்ஸ் சொன்ன சென்னை, நுங்கம்பாக்கம் 'XXL டீனா வின்சென்ட்’ன் நிர்வாகி டீனா, இங்கே தொடர்ந்து சில டிரெஸ் செலக்‌ஷனுக்கான ட்ரிக்ஸ் சொல்றார்!

''எந்த வகை டிரெஸ்ஸா இருந்தாலும், நெக் டிசைனுக்கு முக்கியத்துவம் உண்டு. எண்ணிக்கையே இல்லாத வகைகளில் நெக் டிசைன்கள் இருந்தாலும், மேலும் மேலும் நம்ம கிரியேட்டிவிட்டிக்கு ஏற்ப கழுத்தை டிசைன் பண்ணிக்கலாம். ஆனா, அது நமக்குப் பொருத்தமா இருக்குமானு பார்த்துச் செய்ய வேண்டியது முக்கியம்.

ஃபேஷன் ஸ்டுடியோ! - 3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீண்ட கழுத்து

பெரும்பாலும் எல்லா வகையான டிரெஸ் டிசைன்களும் இவங்களுக்குப் பொருந்திப் போகும். குறிப்பா, போட் நெக், சைனீஸ் காலர், காலர் நெக் போன்ற நெக் டிசைன்கள் இவங்க கழுத்தை இன்னும் அழகா எடுத்துக் காட்டும்.

குட்டையான கழுத்து

'யு’ ஷேப், 'வி’ ஷேப் மற்றும் ரவுண்ட் ஷேப் நெக்கில் ஒரு சின்ன 'வி’ கட் இவங்களுக்குப் பொருத்தமா இருக்கும். காலர் நெக் டிசைன், கழுத்தை இன்னும் குட்டையா காட்டும் என்பதால இவங்க இதைத் தவிர்த்திடணும்.

ஒல்லியான உடல்வாகு

ஒல்லி உடம்பை கொஞ்சம் புஷ்டியா காட்ட, ஹெவி சில்க், ஜூட், திக்கான காட்டன், ஷிஃபான், பாலியஸ்டர் மெட்டீரியல்களில் உடுத்தலாம். பெரிய பெரிய பூக்கள், டிசைன்கள் கொண்ட ஆடைகள் இவங்களுக்கு நல்ல தேர்வு.

குண்டான உடல்வாகு

மெல்லிய பட்டு, கிரேப், சாஃப்ட் காட்டன், ஜார்ஜெட், பாலியஸ்டர், ஷிஃபான் போன்ற மெட்டீரியல்கள் இவங்க உடம்பை கொஞ்சம் ஸ்லிம்மா காட்டும். ஸ்லீவ்லெஸ் டாப், அகலமான நெக் டிசைன்கள், முதுகுப் பகுதிகளில் டிசைன் வைப்பது இதெல்லாம் இவங்கள இன்னும் குண்டா காட்டும். சிலருக்கு வயிறு, சிலருக்கு இடுப்பு, சிலருக்கு கால்கள்னு குறிப்பிட்ட பாகங்கள் மட்டும் பெருத்திருக்கும். இவங்க அந்தப் பகுதியை அதிகமா வெளிக்காட்டாம இருக்கிறதோட, அதை ஹைலைட் செய்ற மாதிரி உடுத்தாமல் இருப்பதும் அவசியம். அதாவது, அடுக்கடுக்கான ஃப்ரில்ஸ், லேயர்ஸ், சம்கி வேலைப்பாடுகளை அந்தப் பகுதிகளில் தவிர்க்கணும். சின்ன சின்ன பிரின்ட்ஸ் மற்றும் டிசைன்களுடன் கூடிய உடைகளைத் தேர்வு செய்யணும்.

ஃபேஷன் ஸ்டுடியோ! - 3

உயரமானவர்கள்  

இப்போதைய டிரெண்டான கணுக்கால் வரையிலான லாங் டாப், உயரமானவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட டிசைன்னு சொல்லலாம். சுடிதாரைவிட பட்டியாலா மற்றும் சல்வார் பேன்ட்டுகள், இவங்க உயரத்தை பேலன்ஸ் செய்து காட்டும்.

குட்டையானவர்கள்

லாங் டாப் இவங்கள இன்னும் குள்ளமா காட்டும். பட்டியாலா, சல்வார் பேன்ட்டைவிட சுடிதார் வகை பேன்ட், லெகிங்க்ஸ் போன்றவை இவங்க உயரத்தை அதிகரித்துக் காட்டும். ஆனா, ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா அவுட்டிங் போகும்போது பட்டியாலா போட்டுக்கலாம். இது பிங்பாங் பால் போல துறுதுறுனு க்யூட்டா காட்டும். மற்றபடி, டபுள் சைட் கட்டுடைய டாப்ஸுடன் கூடிய சல்வார் மற்றும் சுடிதார் எல்லோருக்கும் பொருந்தும்!''

- டிப்ஸுக்கு தற்காலிக ஃபுல்ஸ்டாப் வெச்சங்க டீனா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism